Header Ads



வாக்கு போடவில்லையா..? தண்டம் அறவிட வேண்டும் - மேலதிக ஆணையாளர் MM மொகமட்


சில வெளிநாடுகளில் உள்ளதைப்போன்று வாக்களிக்காதவர்கள் தண்டப்பணம் செலுத்தும் சட்ட ரீதியிலான முறையொன்றை இலங்கையிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொகமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

மொத்த வாக்காளர்களுள் 60 சதவீதமானவர்களே வாக்களிக்கின்றனர். ஆனால், மொத்த வாக்காளர்களும் வாக்களிப்பார்கள் என்ற அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழு செலவு செய்கின்றது. இதனால், வீண் செலவு ஏற்படுகின்றது. எனவே, அவ்வாறு வாக்களிக்காதவர்களிடம் இந்தப் பணத்தை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடு ஒன்று அவசியம் என்று மொகமட் தெரிவித்தார். அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் இருக்கின்றன. அதுபோன்று இலங்கையில் வாக்காளர்களுக்குத் தண்டனை வழங்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

2017 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பே தற்போது செல்லுபடியான, வலுவிலுள்ள வாக்காளர் இடாப்பாகும்.

அதன்படி, ஒரு கோடியே 57இலட்சத்து 60ஆயிரத்து 767 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். எனவே, இந்தத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்ெகாண்டார்.

பெரும்பாலான நாடுகளில் ஒரு தொகையினர் 18 வருடத்திற்கு குறைந்தவர்கள். இலங்கையை எடுத்துக் கொண்டால் இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 10 லட்சம். இதில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்காளராக பதிவுசெய்யப்பட்டுள்ளார்கள். எனவே 75 சதவீதத்தினர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். மொத்த சனத்தொகையில் சாதாரணமாக 66 வீதத்தினரே வாக்காளராக இருப்பார்கள். இவ்வீதத்தினையும் தாண்டிய நிலையில் இருக்கின்றதென்றால் இலங்கையில் தகைமை பெற்றிருக்கின்ற வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்று அர்த்தம். தேர்தலின் போது வாக்களிக்காமல் இருப்பவர்களும் இலங்கையில் உள்ளார்கள்.

இது இலங்கையில் மாத்திரமல்ல எல்லா உலக நாடுகளிலும் காணக் கூடியதொரு நிலைமை. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் ஏறத்தாழ 75 சதவீதத்தினர் வாக்களிக்கிறார்கள். ஆனால் மாகாண சபைத் தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் 60 சதவீமானவர்களே வாக்களிக்கின்றனர். வாக்குரிமையை வழங்குவது இலங்கையில் அடிப்படை மனித உரிமையாக கருதப்பட்டாலும் வாக்களிப்பது அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும். இலங்கையில் வாக்காளராக பதிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக தண்டனை கிடையாது. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தண்டனை வழங்குவார்கள். உண்மையில் இதில் அர்த்தமுள்ளது.

ஏனெனில், தேர்தல் ஆணைக்குழு தேர்தலொன்றுக்கு தயாராகின்ற போது இந்த ஒரு கோடியே 57 இலட்சம் மக்களும் வாக்களிப்பார்பார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் அதே எண்ணிக்கையிலான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கின்றது. இவ்வெண்ணிக்கையை அடிப்படையாக வைத்தே தேர்தல் அலுவலர்கள், வாக்கெண்ணும் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு இருக்கின்ற போது இதில் 50 சதவீதத்தினர் ஒரேயடியாக வாக்களிக்காமல் இருந்தால் இதற்குச் செலவழித்த பணம் உண்மையில் வீணாகும். வாக்களிக்காதவர்களுக்கு தண்டப்பணம் செலுத்தும் சட்டம் எதிர்வரும் காலங்களில் இலங்கையிலும் கொண்டு வரப்பட்டால் அது மிகச்சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஹெட்டி றம்ஸி

4 comments:

  1. நீங்கள் நேர்மையானவரை நிறத்தினால் நாம் ஏன் போடாமல இருக்கபோகிறம்.

    ReplyDelete
  2. இந்த நாட்டுல ஐயா முஹம்மதுக்கு மட்டும் தான் இலக்சன் செலவைப்பத்தி கவல வருது.

    அது சரி வோட்டுப்போடலன்டா தண்டனை கொடுக்கும் அளவுக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் அவ்வெளவு பெறுமதியான வாக்கை பெற்று வருகின்ற ஜென்டில்மன்கள் எவ்வெளவு பெறுமதியானவர்களாக இருக்க வேண்டும் முஹம்மது அவர்களே. அதையும் பற்றி கொஞ்ஞம் தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  3. சகோதரரே யாரும் மக்களைபற்றியும் அவர்களின் கஸ்டங்கங்களை பற்றியும் கவலப்படமாட்டிக்கின்றீர்கள் இதோ நீங்களும்தான் உங்களின் வேலையைமட்டும் நீங்கள் சரியாகச்செய்ய ஏழைமக்களின் உதவியை தேடி அவர்களுக்கு தண்டனை கொடுக்கவும் திட்டம்தீட்டுகின்றீர்! கூழிவேலை செய்யும் ஒரு ஏழை அன்று வேலைக்கு செல்லாவிட்டால் அவருக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் சாப்பாடு இல்லை இதைபற்றி யோசித்தீர்களா அனைவரும் ஓட்டுபோட்டுவிட்டு வேலைக்கு போவோம் என்றுவந்தால் போலின் எதுவரைக்கும் உருவாகும் எப்போது முடியும்? நான் ஒரு ஐடியா சொல்கின்றேன் ஓட்டுப்போட வருபவர்களுக்கு அரசாங்கத்தால் ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் பணமாக அல்லது அதற்கு பெருமதியான உலர்உணவுபண்டங்கள் வழங்கிபாருங்கள் அனைத்து ஏழைமக்களும் தேர்தல்போட வருவார்கள் மக்களின் பிரச்சினைகளை கவனியுங்கள் அவர்களும் நாட்டுபிரச்சினைகளை தீர்பதில் பங்களிப்பு செய்வார்கள்!

    ReplyDelete

Powered by Blogger.