Header Ads



JVP க்கு முஸ்லிம்கள், வாக்களிக்கலாமா..?


−சட்டத்தரணி பஸ்லின் வாஹிட்-

JVP இன் 1971 புரட்சியும், இன்றைய அரசியலும்

1971 ஏப்ரல் 2 ம் திகதி JVP இன் மூத்த உறுப்பினர்கள் 9 பேர் வித்யோதய பலகலைக்கழக சங்காராமய பன்சலவில் கூடி தீரமானிக்கினறனர் நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் ஏப்ரல் 5 ம் திகதி தாக்கி அரசைக் கைப்பற்ற வேண்டும் என்று.அதுதான் JVP இன் தோலவியுற்ற  முதலாவது புரட்சியின் ஆரம்பம்.

அந்த நாட்களில் அவர்களை " சே குவேரா"காரர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டிருந்த தலைவர் ரோஹன விஜேவீர தனது சகா லால் மூலம் அனுப்பிய கட்டளைப்படியே தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டது.தாக்குதலுடன் தனது விடுதலைக்காக நாடெங்கிலும் போஸ்டர்கள் ஒட்டி துண்டுப்பிரசுரங்களையும் விநியோகிக்குமாறும் அவர் கட்டளையிட்டார்.

JVP தலைவர் அன்று சே குவேராவின் கொள்கையின்பால் கவரப்பட்டவராக இருந்ததால் அவரின் உடை, நடை எல்லாம் சே வை ஒத்திருந்தது. சே குவேரா என்பவர் ஆஜன்டினாவில் பிறந்து பின்னர் கியுபாவில் கஸ்ரோவுடன் இணைந்து கியூபப் புரட்சிக்கு வித்திட்டவர்.மாக்சிசம்,சோசலிசம் அல்லது கம்யூனிசம் என்ற கொள்கையை கொண்டவர். ஆயுதப் புரட்சி மூலம் கியூபாவை கம்யூனிசத்துக்கு மாற்றிய போராளிகளில் ஒருவர்.

அகிம்சை முறையில் தன்னை விடுவிக்க முடியாவிடின் நாடளாவிய ரீதியில் ஸ்திரமற்ற நிலமையைத் தோற்றுவித்து தன்னை விடுவிப்பதற்காக 500 போராளிகளை யாழிற்கு அனுப்புமாறு விஜேவீர கட்டளை பிறப்பித்தார.அதன் படி 05.04.1971 அன்று நாடெங்கிலுமுள்ள பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. 35 பொலிஸ் நிலையங்களையும் 50 இற்கு மேற்பட்ட நகரங்களையும் JVP தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.மேலும் 50 இற்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்களை கட்டாயம் மூட வேண்டிய நிலைக்கு,அரசு தள்ளப்பட்டது.அரசு இவ்வாறான புரட்சி யொன்றை எதிர் கொள்ள எந்த வித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்ததால் பல நாட்கள் இப்பிரதேசங்கள் JVP இன் கட்டுப்பாட்டிலேயே இருந்தன

முதன் முறையாக இலங்கை அரசுக்கு சிவிலியன்களின் ஆயுதப் புரட்சியை எதி்ர் கொள்ள நேர்ந்தது.அரசு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி முப்படையினரின் ஆதரவுடன் புரட்சியை முறியடித்து மீண்டும் எல்லாப்பிரதேசங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.57 படையினரும் 37 பொலிஸாரும் இறந்து 323 படையினரும் 193 பொலிசாரும் காயமடைந்ததாக உத்தியோக பூர்வ செய்திகள் கூறினாலும்JVP அடங்கலாக ஏறத்தாழ 10000 பேர் வரை இறந்திருக்கலாமென நம்பப்படுகின்றது.

அமைதியாக இருந்த நாட்டில் சிவில் யுத்தத்தை முதன் முதல் கொண்டு வந்தது JVP யினரே. அன்று புரட்சியை கட்டுப்படுத்த அரசு பல வியூகங்களையும் வகுத்தது.5000 மேற்பட்டவர்களை சிறையில் அடைத்திருந்தது.தாக்குதலை ஆரம்பிக்க விஜேவீர தந்தி மூலம் கட்டளை பிறப்பித்தார்.அத்தந்தியில் அதனை சொல்லியிருந்த விதம் வித்தியாசமானது.சுவையானது.'JVP Appuhamy expired.funeral on 5' "ஜே.வீ. பீ அப்புஹாமி இறந்து விட்டார். இறுதிக்கிரியை   5 இல்" இப்படித்தான் அன்று தாக்குதலை ஆரம்பிக்குமாறு கட்டளையை தந்தி மூலம் அறிவித்தது.

ஆனால் இரவில் ஆரம்பிக்க வேண்டிய தாக்குதலை மொனராகல வெள்ளவாய பிரதேசத்தில் இருந்த தாக்குதல்தாரிகள் தவறாக புரிந்து கொண்டு காலையிலே பொலிஸ் நிலையத்தை தாக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக ஏனைய பிரதேசத்தில் இருந்த பொலிசார் சற்று விழிப்படைந்தாலும் இவ்வாறான ஒரு தாக்குதல் தமது பிரதேசத்தில் நடத்துமளவுக்கு JVP பலமானது என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.பல பிரதேசங்களை தம்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் தொடர்ந்து அப்பிரதேசங்களை பாதுகாப்பது எவ்வாறு என்பதை அவர்கள் புரிந்திருக்கவில்லை.பனாகொடை இராணுவ முகாமைத் தாக்குதல்,பிரதமர் ,அமைச்சர்கள் அரச உயர் அதிகாரிகளை பணயமாகப் பிடித்தல்,கொழும்பை கைப்பற்றல் ,விஜேவீரவை விடுவித்தல் ஆகிய நான்கு பிரதான திட்டங்களை இப்புரட்சி கொண்டிருந்தாலும் எதுவும் சாத்தியப்படவில்லை.அன்றைய பிரதமர் சிறிமாவோ அம்மையார்   இந்திய, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியுடன் புரட்சியை முறியடித்தார்.கிராமிய பிரதேசங்கள் புறக்கணிப்பு,வேலைவாய்ப்பின்மை,வறுமை போன்ற காரணங்கள் 1971 புரட்சிக்கு காரணங்களாக கூறப்படுகின்றது.

சே குவேரா கியுபாவில்"நடத்தியது போன்றே இலங்கையிலும் JVP  மேற்கொண்டனர்.இது இக்கடசியின் முதலாவது தோல்வியில் முடிந்த ஆயுதப் புரட்சி.அதன் இரண்டாவது ஆயுதப் புரட்சி 1987−89 காலப் பகுதியில் நடைபெற்றது.இக்காலப்பகுதியில் நடைபெற்ற  மயிர்க்கூச்செரியும் சம்வபவங்கள் பயங்கரமானவை.அது பற்றி பலருக்கு இன்னும் ஞாபகமிருக்கலாம்.அதைப்பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம்.

இவ்வாறு தனது கொள்கையை அமுல்படுத்த இரண்டு முறை ஆயுதமேந்திய ஒரு கட்சியின் சரித்திரம்,கொள்கைகளை சரியாகப் புரிந்து கொண்டுதானா இன்று இக்கட்சியில் முஸ்லிம்களும் பரவலாக போட்டியிடுகின்றனர்? கம்யூனிச அல்லது சோசலிச கொள்கையை  அல்லது சமவுடமை கொள்கையை கொண்ட  JVP க்கு ஆதரவளிக்கலாமா? இன்று சீனா,கியூபா போன்ற நாடுகளில் இஸ்லாம் முழுமையாக நசுக்கப்பட்டு ஆட்சி செய்யும் போது மாற்றம் ஒன்று தேவை என்ற போலி மாய கோஷத்தை வைத்து JVP வாக்குக் கேட்பதில் இருக்கும் நியாயம் தான் என்ன?சிந்திப்போம்.

16 comments:

  1. who cares about the 46 years past of JVP ? now they are a political party with no weapons or violence and only party who never promoted or promotes racism and talks fearlessly against corruption,racism against minorities etc...etc....while all other parties choose to keep mum.over to the voters.

    ReplyDelete
  2. Whom do you say to support? UNP, SLFP and UPFA are inducing racism. They have been against us. Our parties like SLMC and ACMC are very selfish and they never think of our community. So, the one and only best choice of Muslims should be JVP which has been raising its voices in support of Muslims against racism. Those days they might have been different, but at present, their policies are much more better than all the other parties which have been doing corruption and all and leading our country to the worst situation. The writer of this article may be an ardent supporter of a Muslim political party. Whatever you say,the right thinking people will support JVP only for a better Sri Lanka.

    ReplyDelete
  3. You Mean that Other Parties such as UNP,SLFP and Even SLMC are Islamic Parties and They will implement Islamic Sharia Law in Srilanka as soon as they win in the Election? What a Nonsense Talk?

    ReplyDelete
  4. JVP had given up arms long time ago and taken the democratic path. It is an accepted political party now. There is no difference between JVP and the former Terrorist parties like Plot, EPRLF etc.

    ReplyDelete
  5. கம்யூனிஸம் சோசலிசம் சமவுடமை இதுஹராம் ஜனநாயகம் ஹலாலா

    ReplyDelete
  6. இக்கட்டுரையானது noorul, Mahibal M. Fassy, Atteeq Abu, Ali Ali, Y A, mohamed abdul, மாற்றத்தை விரும்பும் சமூகம், risan hameed மற்றும் ஏனைய JVP ஆதரவாளர்களுக்கும் இக்கட்டுரையின் ஆசிரியர் சார்பாக அவர்களது மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரரே... இந்த கட்டுரை ஆசிரியர் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக எழுதியுள்ளார். ஆனால் அவர் சொல்ல வருகிற காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது.. ஆயுதம் ஏந்திய குழுக்கள் ஜனநாயக வழியில் அரசியல் செய்ய கூடாதா? தேசிய கட்சிகள் சிறுபான்மை சமூகத்திற்கு அநியாயம் செய்யவில்லையா? சிறுபான்மை கட்சிகள் மக்களை பணத்திற்காக காட்டிக்கொடுக்கவில்லையா? எனவே இவர்களுடன் ஒப்பிடும்போது மக்கள் விடுதலை முன்னணி எவ்வளவோ சிறப்பானது.. அவர்களிடம் ஊழல் இல்லை.. நேர்மையான முறையில் அரசியல் செய்கிறார்கள்...

      Delete
  7. எங்களது நாடு ஜனநாயக ரீதியில் அபிவிருத்தி அடையவேண்டுமாயின் நாங்கள் ஒட்டுமொத்தமாக சேர்த்து மூன்றாம் நிலை கட்சியான JVP யை ஆதரிப்பதை தவிர வேறுவழியில்லை. மஹிந்த மைத்திரி ரணில் இவர்கள் மூன்றுபேரும் ஒரே அச்சில் வாத்தவர்கள்தான் . இவர்களால் எங்களுக்கு விடிவுகாலம் வராது
    இதை ஏன் சமூகம் சிந்திக்கமாட்டேங்கிறது. JVPதான் எங்களது பிரச்சனையை தொண்டைக்கிழிக்கிலிய கத்துகிறது. அவர்களுக்கு பலம் போதாமையினால் அவர்களது கோரிக்கைகள் இலுப்படுகிறது. எனவே சகோதர சகோதரிக்களே சமூக தொண்டர்களே நாம் ஏன் இன்னும் UNP அல்லது SLFP என்று அவர்களுக்கு வாக்களிக்கோணும். இது எங்களுடைய மார்க்கத்தில் சொல்லப்பட்டதொண்டா அல்லது கட்டாய கடைமையா?
    சற்று மாற்றி சிந்திப்போம் எங்களது முஸ்லிம் காட்சிகளை ஆதரித்து என்னதான் அப்படி மாற்றத்தைக் கண்டோம். மாறாக அவர்களின் சொந்தத்தேவைகளுக்குத்தான் அவர்களின் கட்சி உதவுகிறது தவிர எண்கள் சமூகத்திக்கு ஆனதொன்றுமில்லை. இந்த நல்லாட்சி மஹிந்தவிடவும் மோசமானே நிலைப்பாடே ஏட்படப்போகிறது. மேலும் எங்கள் SLMCசினால் ஏதாவொரு பிரச்சனைக்கு முடிவு கண்டார்களா, அல்லது தீர்வை பெற்று தந்தார்களா? ACMCயினால் பிரச்சியை தீர்க்க முடிந்ததா? மற்றவர்களைவிட ரிஷாட் பதுர்தீன் அவர்கள் சமூகத்திக்காக பாடுபடுகிறார் இருந்தாலும் அவருக்கும் பலம் போதாமையால் அரசாங்கத்தை நேரடியாக எதிர்க்கமுடியாதவராக இருக்கின்றார். எனெவே எங்கள் சமூகம் இருந்த மானத்தையும் சுயகௌரவதையும் பாதுகாத்து வாழ்வதுக்கு எங்கள் முஸ்லிம் கட்சிக்காரர்களின் பின்னால் போனால் மட்டும் போதாது. அவர்கள் அரசாங்கத்தை எதிர்க்கும் சக்தியுடையர்களாக இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் ஒருபோதும் மைதியையோ ரணிலயோ அல்லது மஹிந்தயையோ எதிர்த்து அரசியல் செய்யமாட்டார்கள். அப்படிச்செய்தால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வரப்பிரசாதங்கள் இல்லாமல் போய் விடும். எனவே சற்று சிந்திப்போம் இந்தமுறையாவது ஒரு மாற்றத்துக்காக ஜேவிபியை ஆதரிப்போம். அதன்மூலமாவது எங்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முயட்சிப்போம். இதக்காக நான் ஜேவிபியை சேர்தவனல்ல. எமது நாட்டின் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருப்பவர்களில் நானுமொருவன்.

    ReplyDelete
  8. இருக்கும் அரசியல் அசிங்கங்களை விட jvp மேலானவர்கள்

    ReplyDelete
  9. ஒரு காலத்தில் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராடினாலும் இன்று சரியான பாதையில் இனவாதம் மதவாதம் என்று ஏனைய தேசிய கட்சியை போல அரசியல் செய்யவில்லையே.. ஊழலுக்கு எதிராக அராஜகத்துக்கு எதிராக நேர்மையான முறைsajarishafeekயில் அரசியல் செய்கிறார்கள்... சிறுபான்மை கட்சிகள் போல வாக்குகளுக்காக சமூகத்தை காட்டிக்கொடுக்கவில்லை... எனவே தைரியமாக எமது வாக்குகளை இவர்களுக்கு வழங்கலாம்...

    ReplyDelete
  10. இங்கு பழைய சரித்திரங்களை நோக்கினால் எல்லா கட்சிகளின் பெயர்களும் நாறும் எந்த கட்சிகளும் சுத்தமானது என்று சொல்ல முடியாது இது இலங்கை நாட்டுக்கு மற்றும் உரித்தானது இல்லை எமது ஆசியா கண்டத்தில் உள்ள இந்திய , பாகிஸ்தான் , பங்களாதேஷ் , மாலைதீவு போன்ற எல்லா நாடுகளிலும் ஒரே நிலைமை தான் ஆட்சிக்கு வரும் மட்டும் ஏதோ சுத்தமானவர்கள் பேசுவார்கள் வந்த பின் சொன்ன எல்லா வற்றையும் மறந்து அவர்களின் கொண்டாட்டமோ தனி. ஆனால் தற்போது உள்ள JVP கட்சியை நோக்கும் பொது அவர்களின் பேசும் பேச்சும் செயலும் நடை முறையும் ஒன்றாக இருப்பதை கண்கூடாக காணலாம் இவர்களிடம் ஆடம்பரம் இல்லை பகட்டு பேச்சு இல்லை மக்களின் நலன் மட்டும் தான் இவர்களின் முழு நோக்கம் இந்த கட்சியில் இருக்கும் ஒருவரில் எவருக்காவது எதாவது ஒரு குற்றச்சாட்டு உள்ளதா இல்லை உண்மையில் இந்த கட்சியினர் பணத்துக்கு ஆசை அல்லது பதவிக்கு பேரம் போவார்கள் ஆயின் எப்போதோ இவர்கள் பேரம் போய் இருப்பார்கள் ( பேரம் போன ஒருவர்தான் விமல் வீரவன்ச இவரின் நடவடிக்கை நாடே அறிந்தது ) எனவே எனது கருத்து JVP க்கு ஆதரவு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே

    ReplyDelete
  11. இவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் முஸ்லிம்களுக்கு நல்லது நடக்குமா இல்லையா என்பதை விட உண்மையில் நாட்டுக்கு நல்லது நடக்கும். நாட்டில் உள்ள ஊழல் முற்றாக துடைக்கப்படும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதை அவர்கள் முற்றாக இல்லது ஒழிப்பர்

    ReplyDelete
  12. This writer must be a culprit of unp..slfp or..the waste slmc..now the best choice for muslims is jvp only.

    ReplyDelete
  13. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 4:135)

    ReplyDelete
  14. Well said brother ishak

    ReplyDelete
  15. Jvp என்றால் சிலர் முத்தகீன்கள் என்று குழம்பிய நிலையில் இருக்கிறார்கள். ஏதோ ஸஹாபாக்கள் மாதிரி நினைத்து ஏமாந்து கிடக்கின்றனர். நிமல் வீரவன்சயும் ஜேவிபி காரன்தான் அவன் என்ன ஊழல் செய்யாதவர்? இப்படி தான் மற்றவர்களும்

    ReplyDelete

Powered by Blogger.