December 08, 2017

முஸ்லிம்களுக்கு JVP தேவையா..?

-நௌசாத் அஹமத் லெவ்வை-

பொதுபல சேனா போன்ற கடும்போக்கு சக்திகளுக்கு முஸ்லிம்கள் பதிலளிக்க அல்லது பதிலடி கொடுக்க விரும்பினால் ஆகக் குறைந்தது முஸ்லீம் உள்ளுராட்ச்சி மன்றங்களில் ஒரு JVP உறுப்பினரையாவது தெரிவு செய்யுங்கள் ..

இந்தத் தெரிவினூடாக  

1 . முஸ்லிம் காங்கிரஸ், றிசாட் காங்கிரஸ், அதாஉல்லா காங்கிரஸ் களிலிருந்து முஸ்லிம்கள் விடுபட்டு நாட்டின் பெருந்தேசியத்தூடு முஸ்லிம்கள் இணைந்து கொள்கிறார்கள் என்ற சேதி சிங்களமக்களிடம் சென்றடையும் ...

2. முஸ்லிகளின் உரிமைகளை விற்று பிழைப்பு வாதம் நடத்தும் காங்கிரஸ் காரர்களுக்கு இனி உள்ளச்சம் எடுக்கும்

3. முஸ்லிம்களுடைய நியாயங்களை முஸ்லீம் அரசியல் வாதிகள், அதிலும் குறிப்பாக சிங்கள மக்களால் அருவருப்புடன் நோக்கப்படுகின்ற முஸ்லீம் தலைவர்கள் கூறுவதை விட ஊழலற்ற, கை சுத்தமான திசாநாயக்க போன்ற நியாயமான சிங்களத் தலைவர்கள் கூறும் போது அது சிங்கள மக்களிடத்தில் 
ஆழமாகச் சென்றடையும் ...

4. தெற்கில் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்களுக்கு வீரமிக்க JVP பாதுகாப்பு அரணாக இருக்கும் .

5. SLFP, UNP போன்ற தேசியக்கட்சிகளை விட BBS போன்ற  முரட்டுத்தனமான சிங்களக்கடும் போக்கை கையாள்வதற்கு JVP போன்ற தீரமான கடசிகளாலேயே முடியும் . மாத்திரமல்லாமல்  இந்தக்  கடும்போக்காளர்களை வளர்த்துவிடுவதில் UNP, SLFP போன்றவற்றின் மறை கரங்கள் இருப்பது நாம் அறியாத ஒன்றல்ல . 

6. கிழக்கில் JVP ஊடாக முஸ்லீம் M.P யயோ அல்லது MPC யயோ தெரிவு செய்யும் அளவுக்கு பாமர முஸ்லீம் வாக்காளர்கள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை,  ஆகவே சிந்திக்கின்ற மக்கள் ஒவ்வொரு முஸ்லீம் ஊரிலும் குறைந்தது ஒரு உள்ளுரடசி மன்ற உறுப்பினரை JVP ஊடாக தேர்வு செய்து தெற்கு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அல்லாஹ் முந்தி ரெண்டாவதாக உதவி செய்ய வேண்டியது பொறுப்பும் கடைமையும்.. இந்த சந்தர்ப்பம் இன்னும் 5 வருடங்களுக்கு பிறகுதான் கிட்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

7. முஸ்லிகளால் தெரிவு செய்யப்படட முஸ்லீம் அமைச்சர்கள் ஒதுங்கி ஒழிந்து நின்ற போது "அளுத்கம" முஸ்லிம்களுக்காக பாராளுமன்றத்தில் தனிப்பிரேரணை சமர்ப்பித்து அவர்களுக்காக வாதாடிய   JVP தலைவரை மறந்து நீங்கள் முஸ்லீம்" காங்கிரஸ்களுக்கு" வாக்களித்ததற்காக இறைவனிடம்  பதில் சொல்லியே ஆகவேண்டும் ... 

18 கருத்துரைகள்:

Muslim community can consider one time to support jvp.why not

காலத்திற்கேற்ற சிறந்த தெரிவை சகோதரர் நெளசாத் அஹமத் லெவ்வை முன்வைத்திருக்கிறார்.

JVP நீதிக்கு நெருக்கமானது.
நீதி இறைவனுக்கும் இஸ்லாத்துக்கும் நெருக்கமானது.

பூமியில் நீதியை நிலைநாட்டுவது ஓர் முஸ்லிமின் கடமை.

JVP, முஸ்லிம்களை தமது மறைமுக ஆதரவாளர்களாகக் கொண்டுள்ளது.
JVPயின் தலைவர் முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

2020ல் நீதியான ஓர் தலைவரை இலங்கைக்கு உருவாக்கவேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு உள்ளது.

நீதியை நேசிக்கும் ஏனையொருடன் இணைந்து, இவ்வுள்ளூராட்சி தேர்தல் முதலே நமக்கானதோர் தலைவரையும் நாம் உருவாக்கிக் கொள்வோமாக.

JVPயும் அதன் தலைமையும் முஸ்லிம்களையும், அநீதியால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினரையும், ஏனையோரையும் அனுசரித்து, தமது வேலைத்திட்டங்களை வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்லலாம்.

அரச மொழிகள் அமுலாக்கத்தை விரைவுபடுத்தலாம்.

கிந்தோட்டை போன்ற பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும்  மக்களுக்காக சிங்களைத் தரப்பிலிருந்தே  போராடி முஸ்லிம்களதும் ஏனையோரினதும் உள்ளங்களை வெல்லலாம்.

எங்களது நாடு ஜனநாயக ரீதியில் அபிவிருத்தி அடையவேண்டுமாயின் நாங்கள் ஒட்டுமொத்தமாக சேர்த்து மூன்றாம் நிலை கட்சியான JVP யை ஆதரிப்பதை தவிர வேறுவழியில்லை. மஹிந்த மைத்திரி ரணில் இவர்கள் மூன்றுபேரும் ஒரே அச்சில் வாத்தவர்கள்தான் . இவர்களால் எங்களுக்கு விடிவுகாலம் வராது
இதை ஏன் சமூகம் சிந்திக்கமாட்டேங்கிறது. JVPதான் எங்களது பிரச்சனையை தொண்டைக்கிழிக்கிலிய கத்துகிறது. அவர்களுக்கு பலம் போதாமையினால் அவர்களது கோரிக்கைகள் இலுப்படுகிறது. எனவே சகோதர சகோதரிக்களே சமூக தொண்டர்களே நாம் ஏன் இன்னும் UNP அல்லது SLFP என்று அவர்களுக்கு வாக்களிக்கோணும். இது எங்களுடைய மார்க்கத்தில் சொல்லப்பட்டதொண்டா அல்லது கட்டாய கடைமையா?
சற்று மாற்றி சிந்திப்போம் எங்களது முஸ்லிம் காட்சிகளை ஆதரித்து என்னதான் அப்படி மாற்றத்தைக் கண்டோம். மாறாக அவர்களின் சொந்தத்தேவைகளுக்குத்தான் அவர்களின் கட்சி உதவுகிறது தவிர எண்கள் சமூகத்திக்கு ஆனதொன்றுமில்லை. இந்த நல்லாட்சி மஹிந்தவிடவும் மோசமானே நிலைப்பாடே ஏட்படப்போகிறது. மேலும் எங்கள் SLMCசினால் ஏதாவொரு பிரச்சனைக்கு முடிவு கண்டார்களா, அல்லது தீர்வை பெற்று தந்தார்களா? ACMCயினால் பிரச்சியை தீர்க்க முடிந்ததா? மற்றவர்களைவிட ரிஷாட் பதுர்தீன் அவர்கள் சமூகத்திக்காக பாடுபடுகிறார் இருந்தாலும் அவருக்கும் பலம் போதாமையால் அரசாங்கத்தை நேரடியாக எதிர்க்கமுடியாதவராக இருக்கின்றார். எனெவே எங்கள் சமூகம் இருந்த மானத்தையும் சுயகௌரவதையும் பாதுகாத்து வாழ்வதுக்கு எங்கள் முஸ்லிம் கட்சிக்காரர்களின் பின்னால் போனால் மட்டும் போதாது. அவர்கள் அரசாங்கத்தை எதிர்க்கும் சக்தியுடையர்களாக இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் ஒருபோதும் மைதியையோ ரணிலயோ அல்லது மஹிந்தயையோ எதிர்த்து அரசியல் செய்யமாட்டார்கள். அப்படிச்செய்தால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வரப்பிரசாதங்கள் இல்லாமல் போய் விடும். எனவே சற்று சிந்திப்போம் இந்தமுறையாவது ஒரு மாற்றத்துக்காக ஜேவிபியை ஆதரிப்போம். அதன்மூலமாவது எங்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முயட்சிப்போம். இதக்காக நான் ஜேவிபியை சேர்தவனல்ல. எமது நாட்டின் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருப்பவர்களில் நானுமொருவன்.

Good points..
Not only for Muslims the entire country needs JVP.
Economy is destroyed and the. Country is suffering from high price and high inflation.
All corruption are out there so we all community should give support to JVP

yes very good , all muslim should support JVP and select at least one member each council

எல்லோரும் எதிர்க் கட்சியில் இருக்கும் போது நல்லவர்கள் தான்.அரசாங்கம் அமைத்தால் எல்லோருடைய நலவும் விளங்கும்.கிந்தொட்டை சம்பவத்தின் போது போகாத கட்சி 2 மாத்திரமே.ஒன்று கூட்டெதிரணி மற்றது நீங்க சொல்லும் ஜே வி பி.

Right choice for the moment is JVP

உண்மையில் இந்தக்கருத்து நன்கு ஆழமாக சிந்திக்கப்பட்டு நடைதுறைப் கடுத்தப்பட வேன்டிய ஒன்றே.

எந்தேநதத் தகமைகள் எமது தலைவர்களிடம் காணப்பட வேன்டுமோ அவை எவையும் அவர்களிடம் இல்லை. எவை எவை காணப்படக்கூடாதோ அவையெல்லாம் ஒட்டுமொத்தமாக அவரகளிடம் காணப்படடுகிறது.
இவர்களிடம் திட்டமிடல் இல்லை, கலந்தாலோசனை இல்லை,தொடர்நதேர்ச்சியான முயற்சி இல்லை. தூர நோக்கில்லை.

இருப்து

ஆடம்பரமான வாழ்க்கையில் அபார ஆசை, ஊழல் மோசடி நிறைந்த வாழ்க்கை, புகழுக்காக நாயாக அலைதல், தகுதியுள்ளவரகளை விடுத்து தனக்கு வேன்டியவர்களுக்கும் தன்னை வணங்குபவர்களுக்கும் வசதிவாய்பை ஏற்படுத்திக் கொடுத்தல், தமக்கொன சேவைசெய்ய தன்புகழ்பாட ஓர் அடமைச் சமூகத்தை திட்டமிட்டு உருவாக்குதல்.................... இப்படி தொடரும் அவர்கள் செயற்பாடுகள்.

எனவே நமக்குத் தேவை இப்போதைக்கு அனுரகுமார போன்றவர்களே.JVP is the only party that has clear and honest democratic, non-committal and non-racial policy committed to equal rights to all different communities. The problems that Muslims face are a part of the main problems caused by the corrupt politics of the UNP and SLFP and their supporting parties including the Muslim parties. If the Muslims want to come out of the problems they face they should support the JVP and make them stronger as the JVP is the only alternative force to take Sri Lanka forward as a healthy nation.

அதுமட்டுமல்ல. வில்பத்து பிரச்சினையை ஆராய்வதற்காக சென்ற அவர்களது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், முஸ்லிம்களால் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதென்றே உண்மைக்குப் புறம்பான அறிக்கை விட்டிருந்தார்.

If any people can push to Rishad Badiudeen to join with JVP. Thats good for both parties and Muslim people also

சகோதர் மக்பூல் மொஹமட் அவர்களே!
அவர்கள் சம்பவமிடத்திக்கு போகவில்லையான்றத்துக்காக அவர்களை நங்கள் குறைகூற முடியாது. ஆனால் அவர்கள் எங்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் அனல்பறக்க கேள்விகளைக்கேட்டு ஆளும்கட்சிக்காரர்களை பதிலளிக்கமுடியாதவாறு தடுமாறுவைப்பதை நீங்கள் பார்பதில்லைபோல.

மேலும் சகோதரரே! சம்பவமிடத்திற்கு விரைந்த எங்கள் பிரதமர், பொலிஸ் துறை அமைச்சர், பொலிஸ்மா அதிபர் என்ன செய்தார்கள் இதுவரைக்கும் அந்த மக்களுக்கு.

வீண் விரண்டவாதங்களை விட்டுவிட்டு ஒன்றுபடுங்கள் உண்டு வாழ்வு. மாறாக என்னை வெட்டினாலும் குத்தினாலும் நான் UNP அல்லது SLFP, அல்லது SLMC என்று சொல்லுவதை விட்டவிட்டு உதவுங்கள் நாடு செழிப்படையட்டும். நாடு செழிப்படைந்தால் நாங்களும் செழிப்படைவோம்.

சிந்திப்பவர்களுக்கு நாட்டின் நிலைமை எங்கள் சமூகத்தின் நிலைமையும் நான்குபுரியும்.

JVP தலைவர் அனுர குமார திஸானாயக நேரடியாகச் சென்று பார்வையிட்டது மட்டுமல்லாது பாராளுமண்றத்திலும் இது சம்மந்தமாக சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார். தற்போதைய சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமான ஒரே ஒரு கட்சி JVP யே.

கட்டுரையாளர் கூறுவது போல்ல்லாது சரணாகதியடையாது இருபெரும் கட்சிகளையும் முஸ்லிம் பெயர்தாங்கி கட்சிகளையும் மிரட்ட உள்ளூராட்சி மன்றங்களில் மட்டும் ஜே வி பி கு வோட் பண்ணலாம்

நமது கடந்த கால அனுபவங்களையும், நிகழ்கால சூழ்நிலைகளையும் பார்க்கும் போது அதிகாரத்தில் இருக்கின்ற அத்தனை முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் நிராகரித்தே ஆகவேண்டும். அதற்கு மாற்றுத் தெரிவு JVP யே என்பது மேலோட்டமான ஒரு பார்வையாக இருந்தாலும் நாம் அதனையும் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.

பின்வரும் விடயங்கள் சிந்திக்கப்பட வேண்டியவை.

01 வடகிழக்கிற்கான அரசியல் தீர்வென்று பேசப்படுகின்ற போது முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன என்பதனை JVP ஒருபோதும் பேசியது கிடையாது. JVPயினால் பேசவும்முடியாது. மொத்தத்தில் அதிகாரப்பரவலாக்கல் என்பதற்கு எதிரானது அவர்களது அரசியல் நிலைப்பாடாகும்.

02 வடக்கு முஸ்லிம்களது மீள் குடியேற்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் இனவாத சக்திகளுக்கு உடந்தையாகவே JVP யின் நிலைப்பாடு இருக்கிறது.
உதாரணமாக, வில்பத்து காடழிப்பில் முஸ்லிம்களும் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை JVP யின் தலைவர் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். உண்மையில் வில்பத்து காட்டை அழித்து குடியேற்றப்பட்டுள்ள சிங்கள கிராமங்கள் தொடர்பில் இவர்கள் வாய் திறந்ததே கிடையாது.

03. நாடு தழுவிய வகையில் இனவாத சக்திகள் தோற்றம் பெற்று வளர்ந்த காலத்தில் அதனை JVP கண்டிப்பதற்கு முன்வரவில்லை. கலவரங்கள் நடந்து முடிந்த பிறகு அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதில் மாத்திரமே JVP யின் கருத்துக்கள். அமைந்திருந்தது.
04. ஊழல் மோசடிகளுக்காக JVPகுரல் கொடுக்கிறது என்பது உண்தாமைதான். ஆனால் இதனை மிக ஆழமாக நோக்கும் போது முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஊழல் மோசடிகள் பற்றி JVP வாய் திறப்பது கிடையாது.
ஆனால், இவ்வாறு ஊழல் மோசடிகள் புரியும் முஸ்லிம் அமைச்சரின் கீழுள்ள நிறுவம் ஒன்றில் தமக்கு வேண்டிய ஒருவரை நியமிக்கின்ற அளவிற்கு அவரோடு JVP நெருக்கத்தை கொண்டிருக்கிறது.
05. அவர்களின் சில அரசியல் கொள்கை நிலைப்பாடுகள் கண்மூடித்தனமாகவும், சுயநலன் மிக்கதாகவும் இருக்கிறது.
உதாரணமாக, தனியார் உயர் கல்விக்கெதிராக பல்கலைக் கழக மாணவர்களை வீதியில் இறக்கி போராடுகிறார்கள். இதனால் தமது பெறுமதியான வாழ்க்கையின் பல வருடங்களை மாணவர்கள் இழந்திருக்கிறார்கள். ஆனால், JVP யின் தலைவர்களின் பிள்ளைகள் தனியார் கல்வி நிறுவனங்களில் சுமூகமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். (அனுரகுமார வின் மகன் உட்பட)
அது போலவே அந்நிய செலவாணியை பாதுகாக்க வேண்டும் , உள்ளூர் உற்பத்திகளை கூட்ட வேண்டும் என குரல் கொடுக்கிறார்கள். ஆனாலும், ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வதிலும் இவர்களும் பின்நிற்பதில்லை. இப்படிப் பல விடயங்களை ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, இருக்கின்ற முஸ்லிம் அரசியல் சக்திகளை நிராகரித்து விட்டு JVP யினை தெரிவாக எடுத்துக் கொள்வதா? அல்லது முஸ்லிம் மக்களின் நலன்களையும் தேவைகளையும் முதன்மைப்படுத்தி அதே நேரம் பொது நீதிக்காகவும், பொது நலன்களுக்காகவும் போராடக்கூடிய ஒரு புதிய அரசியல் சக்தியை வளர்த்தெடுப்பதா? என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும்.

JVP is the only party that treats all Sri Lankan Citizens as Sri Lankans, irrespective of race,religion,language and all types of differences.UNP and SLFP or any other alliance formed by them or any new group will not be able to bring about racial amity in the current political, social and economical setup influenced by International Politics supported by local politicians.Since 1948,for 70 years non of these parties or their alliances have been able to keep their promises to the minority communities.They used the Tamil Community as scapegoats to coverup their weaknesses during 1983 to 2009.From 2009, they couldn't use the Tamil Community again,so they turned on the Muslim community to cover up their weaknesses.The Muslim community, who got fed up with the Rajapaksha regime,because of his double standards voted for UNP hoping they would be free from racism.Unfortunately UNP could not keep their promises, evidence the Gintota incident, which we all now know was a planned affair, making use of a natural incident.There is no guarantee that there will not be any incidents like this in the future under both parties.The only guarantee is JVP, who condemns racism whole heartedly and is of the view that rule of law should be same to all criminals.JVP believes in prevention rather than cure in all affairs, whether it is racism,economy,or other issues.The only Option for Muslims right now is the JVP.The 21 parliament members,what did they do,to prevent the Gintota incident,and What can they do to prevent future incidents? I am not belittling their presence in parliament,but the truth is as members of SLFP,UNP, there is nothing they can do.I am sure their conscience agrees.

சிறுபான்மை நாமே இன அரசியல் பேசி அரசியல் செய்கிறோம். ஆனால் இனவாதத்தை எதிர்க்கிறோம். ஏன் இனவாதம் பேசாமல் அரசியல் செய்ய எம்மால் முடியவில்லை. JVP பொருத்தமான கட்சி என்றால் அது இதுவரை சாதித்த சாதனைகளை, அதன் ஊழியர்களின் நம்பிக்கை நேர்மை, அவர்களது தியாகம், அவரகள் பாராளுமன்றத்துக்கு வழங்கிய பங்களிப்பு, நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த நலவுகள், அவர்களது திட்டம்,திறமை போன்றவற்றை பேசி அரசியல் செய்யலாம் தானே!

சிறுபான்மை நாமே இன அரசியல் பேசி அரசியல் செய்கிறோம். ஆனால் இனவாதத்தை எதிர்க்கிறோம். ஏன் இனவாதம் பேசாமல் அரசியல் செய்ய எம்மால் முடியவில்லை. JVP பொருத்தமான கட்சி என்றால் அது இதுவரை சாதித்த சாதனைகளை, அதன் ஊழியர்களின் நம்பிக்கை நேர்மை, அவர்களது தியாகம், அவரகள் பாராளுமன்றத்துக்கு வழங்கிய பங்களிப்பு, நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த நலவுகள், அவர்களது திட்டம்,திறமை போன்றவற்றை பேசி அரசியல் செய்யலாம் தானே!

Post a Comment