Header Ads



மஸ்ஜித் அல் அக்ஸாவை வெல்வது இஸ்மவேலர்களா? இஸ்ரவேலர்களா..??


1.அக்ஸா குறித்த அக்கறை என்பது இஸ்லாமிய சிந்தனையின்  பல கருப்பொருளில் மிக முக்கியமான ஓன்று!அக்ஸாவை முஸ்லிம்கள் வெற்றி கொள்ளுதல் யுகமுடிவின் அடையாளம் என்ற அறிவிப்பும் இருக்கின்றது .

2.இஸ்ரவேலர்களுக்கும் இஸ்மவேலர்களுக்கும் இடையே நடக்கும் நடக்கும் தர்மயுத்தமே இதன் வெளிப்படையான  பார்வை ஆகும்.

3.இன்று உலகில் நடக்கக்கூடிய அனைத்து யுத்தங்களின் நோக்கம் அக்ஸாவை வயப்படுத்தும் அதிகாரமிடலின் சூழ்ச்சியே ஆகும் .

யூதர்களின் சூழ்ச்சி வலையும்! தஜ்ஜாலிய பண்பாடும்! 
***********************************************************************
1.சியோனிசம் , தஜ்ஜாலிய வருகை, இலுமினாட்டிகள் என்ற மறைமுக உலகில் இருந்து இயக்கும் மெசினரிகள் இந்த வார்த்தைகள் எல்லாம் உங்கள் காதுகளுக்கு இந்நேரம் எட்டி இருக்கலாம் .

2.இந்த வார்த்தைகளின் பொருள் என்ன ? இவர்களின் செயற்பட்டு நோக்கங்கள் என்ன ?அதற்க்கான தேடல் மற்றும் காரணங்களை புரிய உங்கள் பொருளீட்டும் உலகில் நேரம் ஒதுக்காமல் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருப்பீர்கள் .

3.ஆனால் இவர்களுக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய எதிர்ப்பு அதிகாரக் குவிவு இருக்கின்றது என்பது தெரிந்தால் அறியாதவர்கள் ஆச்சரியம் அடையலாம்

4.நவீன தஜ்ஜாலிய அதிகார மையம் , சர்வதேச கார்ப்பரேட் நிருமங்களாக அரசு, நாணயம், ராணுவம், வியாபாரம் என உலகின் அனைத்து துறைகளிலும் தன் அதிகாரத்தை கோலோச்சி தன் வசம் வைத்துள்ளது .

5.அவர்களின் குழப்பகளை விட்டு பாதுகாப்பது என்பது
நவீன உலகில் முதலில் தஜ்ஜால் வருவதற்கு முன் தஜ்ஜாலிய குழுமம் அறிமுகப்படுத்தும் வாழ்க்கை முறைமைகள், பண்பாட்டு மாற்றங்கள் விட்டு எச்சரிக்கையாக இருப்பது ஆகும் .

6.நம் அன்றாட வாழ்வில் உண்ணும் பீசா, பர்கர், கே எப் சீ சுட்ட இறைச்சி, நாம் பயன்படுத்த துடிக்கும் விலை உயர்ந்த மொபைல் போன்கள்,பயணிக்க விரும்பும் நவீன வகை கார்கள்,

7.பொருளீட்டும் வெறியர்களாக, கொள்ளை இலாபம் ஈட்டத்துடிக்கும் வணிகர்களாக, தேவை அற்ற உற்பத்தி பொருட்களைதயாரிக்கும்தொழிற்சாலைமுதலைகளாக,

8.மதச்சார்பற்ற கல்விகளை கற்று இஸ்லாமிய பண்பாடுகளையும், இஸ்லாமிய சிந்தனைகளையும் காலாவதியான ஒன்றாக சான்றளிக்கும் நவீன தலைமுறைகளாக உங்களை உருவாக்குவர் .

9.நீங்கள் இஸ்லாமியம் பேசினாலும் தஜ்ஜாலிய பண்பாட்டின் பிடியில் சிக்கி இருப்பீர்கள். இஸ்லாமிய பெறுமதியான விடயத்தை பேசுபவரை,சத்தியத்தை பேசுபவரை, எதிர்த்து போராடும் வீரர்களை உங்கள் உள்ளம் கிஞ்சுற்றும் மதிக்காத இயல்பில் அகப்பட்டு இருப்பீர்கள் .

போரில் இறப்பவர்கள் முஸ்லிம்களே !
******************************************************
1.அக்ஸாவை மையமாக வைத்து நடக்கும் பாலஸ்தீன போராட்டங்களாக இருந்தாலும்,

2.சிரியா போன்ற நாடுகளில் நடக்கும் இஸ்லாமிய சமூகங்களுக்குள் நடக்கும் ஷியா சுன்னி யுத்தங்கள் என்றாலும்,

3.இந்தியா ,பர்மா,சீனா, தாய்லாந்த், இலங்கை போன்ற நாடுகளில் ஹிந்துத்துவா மற்றும் பௌத்த பேரினமதவாதிகளால் செயற்படுத்தப்படும் முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு என்றாலும் முஸ்லிம்களே இறக்கின்றார்கள். இஸ்ரவேலர்களின் பார்வையில் இஸ்மவேலர்களே அழிகின்றார்கள்.

4.சர்வதேச இஸ்லாமிய சமூகத்தில் வாழும் முஸ்லிம் 
மக்களுக்கு நடக்கும் அத்துணை பிரச்சினைகள், எதிர் போராட்டங்கள், எல்லாவற்றையும் கவனிப்பதும் , 
அது குறித்து நீதியை நிலைநிறுத்தும் பாதையில் ஈமானிய விழிப்புணர்வை தொடர்ந்து தருவதும் மிக முக்கியமான ஓன்று ஆகும்

சாலமன் கோவிலை தேடும் பணிகளில் யூதர்கள் !
*********************************************************************.
1.யூதர்கள் நம்பும் சுலைமான் கோயிலின் சுவடுகளைத் தேடும் பணியில் சியோனிஸ அரசு மும்முரமாக ஈடுபடுகிறது. அதைக் கண்டவுடன் அல் அக்ஸாவைத் தகர்த்து விட்டு அந்த இடத்தில் கோயிலைக் கட்டுவது சியோனிஸ்ட்களின் திட்டமாக இருக்கின்றது.

2.அதனை எதிர்க்கும் யுக்திகள் என்பது மாபெரும் ஈமானிய குழுக்களால் மட்டுமே சாத்தியம் ஆகும். அதற்க்கான முன் அறிவிப்புக்கள் இருக்கின்றது . இறைவன் விரும்பினால் யுக முடிவுநாள் நெருக்கமான மிக அண்மையில் கூட இருக்கலாம்.

3.ஒடுக்கப்படும் சர்வதேச நாடுகளில் நாம் அநீதிக்கு எதிரான போராட்டங்களை முன் எடுப்பவர்களை முதலில் நாம் அலட்சிய கண்ணோட்டங்களில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் .

4.வரலாற்றில் இடம்பெற்ற போர்கள், போராட்ட முறைகள், போர் வீரர்கள்.போராட்ட வெற்றிகளின் காரணங்கள் குறித்து ஆய்வு செய்து மக்களுக்கு அறியாமை களைய வேண்டும் .

5.நபிகளார் கண்ட போர்க்களங்கள், நபித்தோழர்கள் தலைமையேற்ற போர் முறைகள் , சலாஹுதீன் அய்யுபி முதல் இந்தியாவில் செய்யத் அஹ்மத் சஹீத் வரை சிறந்த தலைமை ராணுவ வீரர்கள் குறித்து சமூகம் அறிந்து வைக்க வேண்டும் .

.
6.இஸ்லாம் காட்டி தந்த வழியில் அநீதியை கொய்யும் எத்தகைய போராட்ட முறைகளாக இருந்தாலும் போராட்டத்தை முன் எடுப்பவர்கள் , போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை 
அவதானிக்க வேண்டும். சரியான போராட்டகுழுக்களுக்கு 
நாம் நாம் ஆதரவைத்தர வேண்டும் ..

7.போராட்ட முறைகளையும் , வீர சிந்தனைகளையும் , 
குழி தோண்டி புதைத்து உங்கள் ஆண்மை அற்றவர்களாக 
மாற்றும் வழிமுறைகளை தூக்கி எறிந்து விட வேண்டும் .

8.நபிகளாரின் வழிமுறைகளை பின்பற்றும் இஸ்மவேலர்களாக 
வீர மறவர்களாக மாறுவதே ஒவ்வொரு சமூகத்தில் நீதி செழிப்பதற்கு காரணமாக அமைத்தது என்பது உள்ளத்திற்கு எட்டிய உரைகல் ஆகும்

9.நீதிக்கான இறைபாதையில் போராட்டம் ஒரு சிறந்த வணக்கம் ஆகும் !

- அபூஷேக் முஹம்மத்

No comments

Powered by Blogger.