Header Ads



இஸ்ரேல் மீது, போரை ஆரம்பித்தது ஹமாஸ்


தங்கள் நாடு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்குப் பதிலடி தரும் விதமாக, ஹமாஸ் குழுவுக்கு சொந்தமான பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

சனிக்கிழமை அதிகாலையில் ஒரு ஆயுத உற்பத்தித் தளத்தின் மீது, ஒரு வெடிபொருள் கிடங்கின் மீதும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

நேற்று காஸாவில் இருந்து இஸ்ரேலுக்கு மூன்று ராக்கெட்டுகள் ஏவப்பட்டது. அதில் ஒன்று ஸ்டேராட் நகரத்தின் தெற்கு பகுதியைத் தாக்கியது.

இரு ராக்கெட்டை இடைமறித்ததாகவும், ஒன்று தரிசு நிலத்தில் காணப்பட்டதாகவும், ஒன்று ஸ்டேராட்டில் தரையிறங்கியதாகவும் இஸ்ரேல் கூறியது.

இதனையடுத்து ஹமாஸ் தளங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலின் விமானப்படை பல தாக்குதல்கள் நடத்தியது. இதில் 25 பேர் காயமடைந்ததாக பாலத்தீனிய சுகாதாரத்துறை அமைச்சர் ஏஎஃபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை மேலும் பல வான் தாக்குதல் நடத்தப்பட்டது. சேதத்தின் முழு விவரமும் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

வெள்ளிக்கிழமையன்று காஸாவில் நடந்த மோதலில், கூட்டத்தினரை நோக்கி இஸ்ரேல் படையினர் சுட்டதில், இரண்டு பாலத்தீனியர்கள் பலியாகினர்.

பல தசாப்தங்களாக இந்த விவகாரத்தில் அமெரிக்கா நடுநிலையாக நடந்துவந்த நிலையில், இந்த மரபுகளை மீறி இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக டிரம்ப் அறிவித்த பிறகு மத்திய கிழக்கில் பதற்றங்கள் உயர்ந்துள்ளன.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளது. அத்துடன் ஜெருசலேத்தில் மோதல்களைத் தூண்டியுள்ளது.

ஜெருசலேத்திற்கு தங்களது தூதரகத்தை மாற்ற முயலும் எவரும், ''பாலஸ்தீனியர்களின் எதிரி'' என மூத்த ஹமாஸ் தலைவர் ஃபாத்தி ஹம்மாத் கூறினார்.

No comments

Powered by Blogger.