Header Ads



இஸ்ரேல் ஒரு பயங்கரவாத, நாடாக மாறியுள்ளது - எர்டோகன்

இஸ்ரேல் மீண்டும் ஒரு பயங்கரவாத நாடாக மாறியுள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரீசெப் ரேயிப் எர்டோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இஸ்ரேலிய தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்தமை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

பாலஸ்தீனிய ஜெரூசலம், ஆக்கிரமிப்புக்குள்ளான நகரமாக இஸ்லாமிய நாடுகள் கருதவேண்டும் என்பதுடன் அதற்கு முழு எதிர்ப்பினையும் வெளியிட வேண்டும் என துருக்கி ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனிய தலைவர் அபாஸ் தமது உரையின் போது, மத்திய கிழக்கு சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான தகுதியை அமெரிக்கா இழந்துள்ளதாக குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.