Header Ads



மகிந்த - வீரவங்ச உக்கிர வாய்தர்க்கம், வீடியோ எடுத்து மைத்திரி ரணிலுக்கு அனுப்பிவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

சாதாரணமாக விமல் வீரவங்ச, மகிந்த ராஜபக்சவுடன் வாக்குவாதங்களுக்கு செல்ல மாட்டார். எனினும் அண்மையில் ஒரு நாள் விமல் வீரவங்ச, மகிந்த ராஜபக்சவை சுற்றியிருக்கும் அலை தன்னால் உருவாக்கப்பட்டது எனக் கூறியுள்ளார்.

“நானே மக்கள் ஆதரவு அலையை ஏற்படுத்தினேன். 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் தேர்தலில் தோற்ற பின்னர் வெளியில் இறங்க எவரும் தயாராக இருக்கவில்லை.

நானே தனியாக பெப்ரவரி மாதமளவில் மகிந்தவிற்கு மக்களின் ஆதரவு நிலையை உருவாக்கினேன். நுகோகொடையில் நான் நடத்திய கூட்டத்திற்கு பின்னரே சிதறி கிடந்த அனைவரும் வெளியில் இறங்க ஆரம்பித்தனர்” என விமல், மகிந்தவிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்ட மகிந்த ராஜபக்ச ஆத்திரப்பட்டுள்ளார். “நீ உருவாக்கிய ஆதரவு அலை இல்லை. மக்கள் என்னுடனேயே இருந்தனர். மக்கள் என்னையே விரும்புகின்றனர். கொள்ளையடித்து கொண்டு என் மீது மண் பூசியதையே நீங்கள் செய்தீர்கள். பார் உனக்கு எதிராக எத்தனை வழக்குகள் இருக்கின்றன?. என்னிடம் இருப்பதன் காரணமாக இன்னும் நீங்கள் எல்லாம் அந்த வழக்குகளில் இருந்து தப்பி இருக்கின்றீர்கள்” என மகிந்த, விமல் வீரவங்சவை சாடியுள்ளார்.

இதனால், உணர்ச்சிவசப்பட்ட விமல், “இவ்வளவு செய்த என்னையுமா இப்படி கூறுவீர்கள்?. நான் உருவாக்கிய மக்கள் ஆதரவு அலையை பயன்படுத்தி வந்த பசில் எனது கட்சியையும் துண்டுகளாக பிளவுப்படுத்தி விட்டார்.

இவை இந்தியாவின் தேவைக்கு அமைய செய்யப்படும் வேலைகள். எங்களுக்கு எதுவும் தெரியாமல் இல்லை” என வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

இதனை கேட்டு கோபமுற்ற மகிந்த ராஜபக்ச, தாயரை இழுத்து வீரவங்சவை தகாத வார்த்தையால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடத்த போது அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், அதனை முழுமையாக பதிவு செய்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.