Header Ads



சியம்பலாண்டுவயில் கறுப்பு மழை, மக்களிடையே குழப்பம்

சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இன்று (9) முற்பகல் கறுப்பு நிற மழை பெய்துள்ளது மக்களை ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

பெய்த மழை நீர் கறுப்பு நிறத்தில் இருந்ததைக் கண்டு பயந்த மக்கள், அது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள், மழை நீரின் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இயற்கைப் பேரிடர்கள் குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், கறுப்பு நிற மழை மக்களை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

1 comment:

  1. மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன; ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது - மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 18:45)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.