Header Ads



சாய்ந்தமருதுவில் மயில் களமிறங்காது - றிசாத்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடுவதற்கு சாய்ந்தமருதுவிலிருந்து தமது கட்சி வேட்பாளர்களை நிறுத்த மாட்டாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் சற்று நேரத்துக்கு முன்னர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளுக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் நிலைப்பாட்டுக்கும் எதிராக தனது கட்சி செயற்பட மாட்டாது. எனவே, நாம் அங்கு வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்ற எமது கட்சியின் தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெற்றி, தோல்வி என்ற விடயங்களுக்கு அப்பால் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தின் தீர்மானத்துக்கு கட்சி என்ற அடிப்படையிலும் தனி நபர் என்ற ரீதியிலும் கௌரவம் அளிக்க வேண்டியுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகம் என்பது அந்தப் பிரதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு. இந்த நிலையில் நாம் அவர்களின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படுவது அந்த மக்களின் அபிலாஷைகளையே குழி தோண்டி புதைப்பதாக முடியும். 

அதேவேளை, கல்முனைத் தொகுதியிலுள்ள முஸ்லிம் மக்களின் நலனில் தொடர்ந்தும் எமது கட்சி அக்கறையுடன் செயற்படும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்னிடம் தெரிவித்தார். - ஏ.எச்.சித்தீக் காரியப்பர். 



3 comments:

  1. இதுதான் ஒரு உண்மையான தலைவனின் சிறந்த முன்மாதிரி. தொடர்ந்து பயணிக்கட்டும் உங்கள் நேர்மையும் முசமாதிரியான அரசியலும். யாராக இருந்தாலும் பள்ளிவாயலுக்கு கட்டுப்படுதல்தான் ஒரு உண்மையான முஸ்லிம்.

    ReplyDelete
  2. உங்கட அரசியல் வியூகம் நல்லாத்தான் இருக்கு,
    ஆனா, அம்புக்கு அர்ச்சுனன் போல, அரசியல் வியூகத்திட்கும் (ஏமாற்றுதலுக்கும்), தந்திரத்திட்கும் (வாக்கு மாறுவதிட்கும் ) இலங்கையில அவரை அடிக்க ஆளே இல்ல தெரியுமா....
    எனவே பொறுத்திருந்து பார்க்கலாம், உங்களுக்கு எப்படி பதிலடி கெடக்கிதுண்டு.

    (பள்ளிவாசல் நிருவாகத்தின் பட்டியலில் உங்களது ஆட்களும் உள்வாங்கப்பட்டிருப்பார்களோ என்கின்ற சந்தேகம் எங்களுக்கு வரவே இல்ல தெரியுமா...)

    ReplyDelete
  3. றிசாத் அவர்களே, பிரதேச வாதத்தை ( ஊர் வெறியர்கள்) முன்னிறுத்தி, நம்பிக்கையாளர் சபையை மலினப்படுத்தும் விதமாக, அரசியல் களத்தில் குதித்து ஊர்மக்களை அச்சுறுத்தி, எந்த கட்சியும் சாய்ந்தமருதுவில் அரசியல் கூட்டம் நடத்த விடமாட்டோம் என பயமுறுத்தும், ஜனநாயக விரோத, அராஜகம் பண்ணும் கும்பளை அனுசரித்துப் போவதன் மூலம் உங்களது அரசியல் ( அறிவும் ) முதிர்ச்சியற்ற, சந்தர்ப்பவாத அரசியலை, மிகவும் தெட்ட தெளிவாக தோலுரித்து காட்டியுள்ளது.
    "அசாருதீன் சென்சரி அடிக்க வேண்டும் ஆனால் சிறிலங்கா வெள்ளணும்" என்கிறமாதிரி இருக்கிறது உங்களது இந்த அறிக்கை. ஹகீமுக்கும், ஹரீஸிக்கும் நல்ல பாடம் படிப்பிக்க இருந்த மக்களை மீண்டும் அவர்களிடமே தள்ளிவிட வைத்துள்ளது உங்களது இந்த சந்தர்ப்பவாத( பச்சோந்தித்தனமான) அரசியல் தீர்மானம்.

    பிரதேச வாதத்தாலும், அரசியல் விபச்சாரத்தாலும் கல்முனை மாநகர சபையையும், அதன் பொருளாதாரத்தையும், அதன் பாதுகாப்பையும் தமிழர்களுக்கு தாரை வார்த்து கொடுப்பதட்கான ஒரு செயட்பாடாகவே இந்த நம்பிக்கையாளர் சபையை ( ஊர் வெறியர்கள்) பார்க்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.