Header Ads



பதவி விலகுகிறார் ஹுஸைன், வல்லரசுகளின் கை பொம்மையாக செயற்பட மறுத்ததே காரணம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைன், தனது பதவியிலிருந்து அடுத்தாண்டு விலகவுள்ளார். இன்னுமொரு பதவிக்கால நீடிப்பைக் கோராமலேயே, அவர் விலகவுள்ளாரென அறிவிக்கப்படுகிறது.

ஜோர்டானைச் சேர்ந்த இளவரசரும் முன்னாள் இராஜதந்திரியுமான ஹுஸைன், 2014ஆம் ஆண்டு செம்டெம்பர் 1ஆம் திகதி, தனத பதவியை ஏற்றிருந்தார். ஒரு பதவிக்காலம், 4 ஆண்டுகளைக் கொண்டது என்பதோடு, இரண்டு தடவைகள் பதவி வகிக்க முடியும்.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட, அரச தலைவர்கள் பலருடனும் முரண்பட்டுக் கொண்ட ஹுஸைன், பூகோள அரசியல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இரண்டாவது தடவையாகப் பதவி வகிப்பதற்கெதிரான முடிவை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

தனது முடிவை, தனது அலுவலக அதிகாரிகளுக்கு, மின்னஞ்சல் மூலமாக அவர் அனுப்பிவைத்துள்ளார்.

அந்த மின்னஞ்சலில் அவர், “விடயங்களைப் பற்றிச் சிந்தித்த பின்னர், இரண்டாவது நான்கு ஆண்டுகாலப் பகுதியைக் கோருவதற்கு எதிராக நான் முடிவெடுத்துள்ளேன். தற்போதுள்ள பூகோள அரசியல் நிலைமையில், அவ்வாறு இரண்டாவது தடவையாகப் பதவிக்குக் கோருவது, இரந்து கேட்பதாகவும், முன்னேற்றத்துக்கான கருத்துகளை மட்டுப்படுத்துவதாகவும், எனது குரலின் சுயாதீனத்தையும் நற்பெயரையும் குறைப்பதாகவும் அமையும். எனது குரலென்பது, உங்கள் குரலாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது தடவையாக அவர் பதவிக்குக் கோரினாலும், ஐ.நா பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்ட ஐந்து நாடுகளும், ஹுஸைனுக்கான ஆதரவை வழங்குமா என்பது, சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. இந்த 5 நாடுகளுக்கு எதிராகவும், கடுமையான விமர்சனங்களை, ஹுஸைன் முன்வைத்திருந்தார்.

ரஷ்யாவால் ஆதரவளிக்கப்படும் சிரிய அரசாங்கத்துக்கு எதிராக, அவர் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். சீனாவால் ஆதரிக்கப்படும் மியான்மார் அரசாங்கம், இனவழிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என, ஹுஸைன் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கெதிராக, பல தடவைகள், தன்னுடைய விமர்சனங்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக, முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஐ.அமெரிக்காவுக்குள் வருவதற்கு விதிக்கப்பட்ட பயணத்தடையைத் தொடர்ந்து, கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இவ்வாறான அவரது விமர்சனங்கள், வல்லரசு நாடுகளிடையே, கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன எனக் கருதப்படுகிறது.

3 comments:

  1. சரியான முடிவு, கையாலாகாத பதவியை களைவதேமேல். இலங்கை ஒரு சிறு நாடாயினும் அடிமை நாடுபோல் நடந்திடாமல்,பிச்சை இடமாட்டோமெண்ற மிரட்டலக்கும் அடிபணிந்திடாமல் ஆண்மயுடன் சுய கௌரவத்துடன் முடிவெடுத்தமைக்கு மரியாதைகள்.

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் இம்ரான்.

      Delete
    2. جزاكالله...சகோதரர் லாபீர்
      அனைவரும் தொடருவோம்
      انشا الله...

      Delete

Powered by Blogger.