Header Ads



வங்கி அதிகாரிகளாக நடித்து, வீட்டிலிருக்கும் பெண்களை ஏமாற்றியவர்கள் கைது

வங்கி ஒன்றின் அதி­கா­ரிகள் என தம்மை அறி­மு­கப்­ப­டுத்திக் கொண்டு, பெண்கள் பலரை ஏமாற்றி அவர்­க­ளி­ட­மி­ருந்து பணம் மற்றும் நகை­களைப் பெற்று மோசடி செய்து வந்த இரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக மாதம்பை பொலிஸார் தெரி­வித்­தனர்.  நீர்­கொ­ழும்பு மற்றும் மினு­வன்­கொடை பிர­தே­சங்­களைச் சேர்ந்த இரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

வீடு­களில் தனி­மையில் இருக்கும் பெண்­களை இலக்கு வைத்தே இவர்கள் இந்த மோச­டியில் ஈடு­பட்டு வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வங்கிச் சீட்­டி­ழுப்பில் பரிசு கிடைத்­துள்­ள­தா­கவும் அதனைப் பெறு­வ­தற்கு ஒரு தொகைப் பணத்தை வங்­கியில் வைப்புச் செய்ய வேண்டும் என்றும் குறித்த பெண்­க­ளிடம் கூறி ஏமாற்றும் இவர்கள் அப்­பெண்கள் தம்­மிடம் பணம் இல்லை எனக் கூறும் சந்­தர்ப்­பங்­களில் அவர்­க­ளி­ட­மி­ருக்கும் நகை­களைப் பெற்றும் இவர்கள் இம்­மோ­ச­டியில் ஈடு­பட்டு வந்­திருப்பதாக பொலிஸார் தெரி­வித்­தனர்.  இவ்­வி­ரு­வரும் 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து இவ்­வா­றான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வந்­துள்­ளமை விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­தி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இவர்­களால் பன்­னல, குளி­யாப்­பிட்டி, மாரா­வில மற்றும் மாதம்பை போன்ற பிர­தே­சங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட பத்து மோச­டி­க­ளோடு தொடர்­பு­டைய தங்க ஆப­ர­ணங்­க­ளையும் இவர்கள் பயன்­ப­டுத்­திய மோட்டார் சைக்­கி­ளையும் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.

மாதம்பை கல்­மு­றுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த வயோ­திபப் பெண்ணை இவ்­வாறு இவர்கள் ஏமாற்றி தங்க வளை யல் மற்றும் மோதி­ரத்தைப் பெற்றுக் கொண்டு சென்­றமை தொடர் பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட மாதம்பை பொலி ஸார் மாதம்பை பிர­தேச வீடு ஒன்றில் பொருத்­தப்­பட்­டி­ருந்த சீசீ­டிவி கெம­ராவில் பதி­வான காட்­சி­களை அடிப்­ப­டை­யாக வைத்து இச்­சந்­தேக நபர்கள் மாதம்பை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்ளை நேற்று முன்­தினம் சிலாபம் நீதி­மன்­றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.