Header Ads



குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்காக, பேருந்தை திருடியவர் கைது

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றை கடத்திச் செல்லும் போது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி மாலை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஸ்பேவ போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மாணவ கெடட் அணியை அழைத்து செல்வதற்காக சென்ற பேருந்தே கடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு - கண்டி வீதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு உணவகம் ஒன்றில், சாரதி மற்றும் நடத்துடனர் தேனீர் அருந்த சென்றுள்ளனர்.

இருவரும் தேனீர் அருந்தி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பேருந்துக்குள் நுழைந்த நபர் அதனை இயக்கி கண்டி நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.

பேருந்து செல்வதனை அவதானித்த சாரதி மற்றும் நடத்துனர் பதற்றமடைந்து 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸார் பேருந்தை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் சாரதியை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கேகாலை யட்டோகொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், சாரதி அனுமதி பத்திரம் அவரிடம் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் எனவும் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்காக பேருந்தை திருடியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிறைச்சாலைக்குள் புரியாத மொழிகளை பேசி விசில் அடித்து வித்தியாசமாக நடந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.