Header Ads



இந்த பூச்சி, இலங்கைக்கு மாத்திரம் உரியதல்ல - ரஷ்யா செய்தது அநீதி

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரத்திற்கு அமைய, இலங்கை, தேயிலையை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்வதால், அவற்றில் பூச்சிகள் இருக்க வாய்ப்பில்லை என, மலையக தேயிலை தோட்ட நிறுவனங்களில், தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளில், ஒருவகை பூச்சியினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வௌியிட்ட போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

முன்னதாக சில சந்தர்ப்பங்களில், தேயிலையில் கரப்பொத்தான், ஊழியர்களின் காதணிகள் போன்ற பொருட்கள் இருப்பது குறித்து, இலங்கை தேயிலை இறக்குமதியாளர்கள் சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, இந்த விடயம் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டு, இச் செயல் மீண்டும் நடைபெறா வண்ணம் அதிக கவனத்துடன் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்ற முறைகளைப் பின்பற்றாது இவ்வாறு ஒரு முடிவை ரஷ்யா எடுத்துள்ளமையானது அநீதியானது எனவும், மலையக தேயிலை தோட்ட நிறுவனங்களில், தோட்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், இலங்கைத் தேயிலைக்கு சமமான வகையிலான மற்றொன்று ரஷ்யாவுக்கு இல்லை என்பதால், இந்தத் தடையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையானது, மாதக்கணக்கில், பிற நாடுகள் ஊடாக பயணிப்பதால், அதனுள் பூச்சிகள் செல்ல வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பூச்சி வகை இலங்கையில் மாத்திரம் உள்ள ஒன்று என நிரூபிப்பதில் ரஷ்யா தோல்வியடைந்துள்ளதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

2 comments:

  1. ஏதாவது ஒரு சாட்டைக்கூறி தப்புவதில் நமது நாட்டுக்கு நிகர் எந்த நாடும் இல்லை

    ReplyDelete
  2. இது பூச்சல்ல ஒரு வீச்சு!
    இந்தியா, சீனா, அமெரிக்கா
    என பங்குபோடப்பட்ட நாட்டில்
    என் பங்கு என்னவென்ற பெருமூச்சு!

    ReplyDelete

Powered by Blogger.