Header Ads



ஜாகிரை கைதுசெய்ய இன்டர்போல் மறுப்பு, மோடியின் முகத்திரை கிழிந்தது


பிரபல இஸ்லாமிய அறிஞரான ஜாகிர் நாயக் வட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இஸ்லாமிய நிகழ்ச்சியை நடத்தி பிறமத சகோதர சகோதரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

அவருடைய பதிலின் மூலம் திருப்தியடைந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுள்ளனர்.

இதனால் ஜாகிர் நாயக்கை ஒழித்துக்கட்ட பாஜக நெடுங்காலமாக பல்வேறு சதிவலைகளை பின்னியது.

மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்தவுடன் ஜாகிர் நாயக்குக்கு எதிரான சதிவலைகள் செயல்பட தொடங்கின.

பங்களாதேஷில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்ட ஒருவன் ஜாகிர் நாயக்கின் பேஸ்புக்கை LIKE செய்து வைத்திருந்தான் என்று கூறி ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை தூண்டுகிறார் என்று மோடி அரசு ஜாகிர் நாயக்கின் தொலைக்காட்சியை முடக்கியது. அவரது நிறுவனத்திற்கு தடை விதித்தது.

இருப்பினும் ஜாகிர் நாயக் வெளிநாட்டில் இருப்பதால் மலேசியா, இந்தோனேசியா, ஜப்பான் என்று அவரது இஸ்லாமிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டும் இருக்கிறது.

ஜாகிர் நாயக் வெளிநாட்டில் இருப்பதால் அவரை கைது செய்ய வேறு வழியில்லாமல் மோடி அரசின் NIA இன்டர்போலின் உதவியை நாடியது.

NIA வின் வேண்டுகோளை ஏற்று இன்டர்போல் ஜாகிர் நாயக்கை கைது செய்ய முதலில் அவரது உரைகளை ஆய்வு செய்தது.

அவரது உரைகளை ஆய்வு செய்த வகையில் எந்த இடத்திலும் தீவிரவாதத்தை தூண்டும் வகையிலான பேச்சு இல்லை என்றும், அவர் மீது NIA பொய் வழக்கை பதிந்துள்ளதாக இன்டர்போல் மோடி அரசின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளது.

பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாமிய தாவா செய்யக்கூடிய யாராலும் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பேசவே முடியாது. அப்படி பேசிவிட்டால் இஸ்லாமிய தாவா செய்ய முடியாது என்ற சாதாரண அறிவு கூட மோடி அரசுக்கு இல்லை என்பதை இன்டர்போல் கிழித்தெறிந்து விட்டது.

மோடி அரசை தவிர உலக நாடுகள் அனைத்தும் ஜாகிர் நாயக்குக்கு ஆதரவாக இருக்கிறது.

13 comments:

Powered by Blogger.