Header Ads



அரசியல்வாதிகளுக்கு பாதாளகுழு தலைவன், விதித்துள்ள நிபந்தனை


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடுவலையில் வாக்குகளை பெற்றுக்கொள்ள பாதாள உலகத்தின் உதவி வேண்டுமாயின் நவகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஞ்சுள டி சில்வாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாதாள உலகக்குழு தலைவர் ஒருவர் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

இந்த பாதாள உலகக்குழு தலைவர், தான் சமயங் குழுவை சேர்ந்தவன் எனக் கூறி பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் கப்பம் பெற முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடுவலை மற்றும் மாக்கதுரே மதுஷ் ஆகிய பாதாள உலகக்குழுக்களுக்கு இடையில் மோதல்கள் அதிகரித்து வருவதாக தெரியவருகிறது.

பாதாள உலகக்குழுக்களுக்கு இடையிலான மோதலின் பிரதிபலனாகவே கொட்டாவை ருக்மல்கம பிரதேசத்தில் சலூன் மஞ்சுளா என்ற பெண் கடந்த 30 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மஞ்சுளா, சமயங் குழுவினருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தவர். சமயங் கொலையின் பிரதான சந்தேக நபரான அத்துருகிரியே லடியா என்பவரின் சகாவான அத்துருகிரியே பண்டா என்பவரின் கொலைக்கு தகவல் வழங்கியவர் எனக் கூறப்படுகிறது.

மஞ்சுளாவின் சிகையலங்கார நிலையத்தில் வைத்தே பண்டா கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் சிறையில் இருந்து விடுதலையாகி வீட்டில் இருந்த போது மஞ்சுளா இனந்தெரியாத இரண்டு பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

No comments

Powered by Blogger.