Header Ads



ஆங்சான் மீது, இனப்படுகொலை குற்றச்சாட்டு - மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் தடாலடி

மியன்மாரின் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்க நேரலாம் என்று கூறப்படுகிறது.

பிபிசி ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டதுடன், லட்சக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்துள்ளன.

இந்தநிலைமைக்கு மியன்மாரின் இராணுவத்தினரதும், அடிப்படை மதவாதிகளினதும் வன்முறைகளே காரணம் என்று கூறப்படுகிறது.

எனவே இந்தநிலைமைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் யுத்தக்குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படும் என்றும், மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளரது இந்த கருத்து, ஆங் சான் சூகிக்கும் பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. Mr. Raed Hussain , Do it if you can?????????

    ReplyDelete
    Replies
    1. do you think he will read your comment in jaffn muslim?

      Delete
  2. தவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்; அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்; பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.
    (அல்குர்ஆன் : 2:281)

    ReplyDelete

Powered by Blogger.