Header Ads



மனைவியின் விருப்பமின்றி, உடலுறவு செய்வது குற்றம் - புதுச் சட்டம் வருகிறது


மனைவியின் விருப்பம் இன்றி பாலுறவு கொள்வதும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்செயல் என்ற அடிப்படையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

குற்றவியல் சட்டத்தில் விரைவில் இது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

திருமணம் பாலியல் வன்கொடுகைகளை மேற்கொள்வதற்கான ஓர் அங்கீகாரமாக கருதப்பட முடியாது. மனைவியர் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் வீட்டு வன்முறைகளாகவே கருதப்பட வேண்டும்.

மனைவியுடன் உறவு கொள்வது கணவனின் உரிமையாகவே கருதப்பட்டு வருகின்றது. எனினும் தற்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் குற்றச் செயலாகவே கருதப்படுகின்றது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் மனைவி, கணவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்படும்.

வீட்டு வன்முறைக்கு உள்ளாகும் மனைவியர் கணவருக்கு எதிராக இலங்கையில் முறைப்பாடு செய்வதில்லை. மத, கலாச்சார காரணங்களினால் இவ்வாறு முறைப்பாடு செய்வதில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகை தொடர்பான நிபந்தனைகளில் திருமண பாலியல் வன்கொடுமைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. திருமணத்தின் அடிப்படை நோக்கமே ஒரு ஆணோ பெண்ணோ சமூகத்தில் பாவமான காரியங்களில் ஈடுபவதை தவிர்த்து தங்களின் உடல் ரீதியான தேவைகளை நாகரீகமான முறையில் பூர்த்தி செய்து தங்களின் சந்ததிகளை விருத்தி செய்வதே.
    அத்தோடு ஆண் என்பவன் வெளி உலகத்தோடு தொடர்புடையவனாகவே இருக்கக்கஊடியவன, எனவே ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை அவனின் உடல் ரீதியான ஆசையை தூண்டி விடக்கூடும். அப்போது அவன் நிதானம் தவறாமல் அதை தன் மனைவியுடனேயே பூர்த்தி செய்ய நாடுவான்.
    இப்போதுதான் மேற்கூறிய பிரச்சினைகள் உருவாகின்றது. முதலில் பெண் ஆணின் சூழ்நிலையை புரிந்து அவரின் உடல் ரீதியான தேவையை பூர்த்தி செய்ய முற்பட வேண்டும்.
    அவ்வாறான சூழ்நிலையில் பெண்ணின் உடல்நிலை முடியாவிட்டால் அதை ஆண் உணர்ந்து நடந்தால் மேற் கூறப்பட்ட பிரச்சினைகள் ஒரு போதும் நிகழாது.
    இதை 1430 வருடங்களுக்கு முன் இஸ்லாம் தடை செய்துள்ளது.

    ReplyDelete
  2. They opening doors for more divorce case. Puting fingers in all placeses without thinking the consequences...

    ReplyDelete
  3. எல்லாம் சரி அம்மா கணவனின் விருப்பமின்றி நடந்து கொண்டால் அதையும் உங்களிடம் சொல்லலாமா அம்மையாரே.

    ReplyDelete
  4. மேடம் தலதாவுக்கு ஐரோப்பிய யூனியனின் நிபந்தனையினை படித்த பிறகு தான் இந்த ஞானம் பிறந்த தாக்கும். இற்றைக்கு 1439 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மார்க்கம் திருமணம், பெண்களின் உரிமைகள் என்பவை அனைத்தையுமே போதித்துள்ளது மேடம். அதன் பிரகாரம் எம்மவர்கள் வாழ்ந்தால் இந்த மாதிரி விடயத்தில் உங்கள் அமைச்சிற்கு எந்த வேலையும் இருக்காது.

    ஐயோ மேடம் இந்த சின்ன விடயத்தை எமது உள்ளூர் மெளலவி மார்களிடம் கேட்டு தெரிந்திருக்கலாம்.

    ReplyDelete
  5. மேடம் தலதாவுக்கு ஐரோப்பிய யூனியனின் நிபந்தனையினை படித்த பிறகு தான் இந்த ஞானம் பிறந்த தாக்கும். இற்றைக்கு 1439 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மார்க்கம் திருமணம், பெண்களின் உரிமைகள் என்பவை அனைத்தையுமே போதித்துள்ளது மேடம். அதன் பிரகாரம் எம்மவர்கள் வாழ்ந்தால் இந்த மாதிரி விடயத்தில் உங்கள் அமைச்சிற்கு எந்த வேலையும் இருக்காது.

    ஐயோ மேடம் இந்த சின்ன விடயத்தை எமது உள்ளூர் மெளலவி மார்களிடம் கேட்டு தெரிந்திருக்கலாம்.

    ReplyDelete
  6. மேடம் நீங்கள் அல்லது உங்களின் கூட்டாலி யாராவது விபச்சார விடுதி நடத்துகின்றார்களா? ஏனென்றால் நீங்கள் இந்த சட்டத்தை அமுல்படுத்திய உடன் மனைவி இந்த காரணத்தை காட்டி கணவருக்கு விட்டுகொடுக்காவிட்டால் அவன் உடனே வேறபெண்னைத்தான் நாடுவான் அதற்கு அவனுக்கு இலகுவான வழி விபச்சார விடுதிமட்டுமே! இன்னும் தற்போது உலகில் 40 விகிதமாக இருக்கும் விவாகரத்து 60 விகிதமாக மாறிவிடும்

    ReplyDelete
  7. This is another copy cut of western civilization. They have this rule that dictates that each time a partner or husband wants to have intercourse he should ask the consent of his wife to do so.
    What does Islam say about it..
    Islam says if wife does not like to do it or agree for that for any reasons such as out of mood or anger or any disputes it become a sin.yet western legal system does not have such sins or religious connotations.
    In west part or husband could go to jail for this ..
    Here also they claim that Islam treats ladies as second hand citizenship by make them to obey for desire of men as and when they want.
    But we need so both side of arguments

    ReplyDelete

Powered by Blogger.