Header Ads



பாத்திமாவின் கண்ணீர் கதை (படங்கள்) மிகப்பெரும் அநீதி இது...!

இந்த நல்லாட்சியிலும் அதுவும் தற்போதைய ஜனாதிபதி யின் தலைமையில் உள்ள ஆட்சியிலும் இன்னும் முஸ்லீம்களுக்கான அநீதிகள் குரோதங்கள் அரசியல் வாதிகளாளே முன்எடுக்கப்படுகின்றன.

பத்தரமுல்லை சந்தியின் ”சிக்னல் சைகை லாம்பு அருகே 50 வருடங்களாக 2 பரம்பரையினா் தலைமுறையில் வாழ்ந்து கொண்டு இன்றும் அந்த பெட்டிக் கடை ஒன்றை நடாத்திவரும் பாத்திமா ஸ்டோாஸ் - பாத்திமாவின் கண்னீா்க்கதை இது- பாத்திமாவின் தந்தையின் தந்தையே முதன் முதலாக பேருவளையில் இருந்து ஒரு சிறிய வெற்றிலைக்கடை ஒன்றை வைத்து வந்துள்ளாா் அதன் பின்பாத்திமாவின் தந்தை 50 வருடகாலமாக 25 ருபாவுக்கு வாடகை செலுத்தி வந்துள்ளா். அதன் பின் அவா் கடை வைத்திருந்த இடத்தினை சிறுகச் சிறுக பணம் கொடுத்துி ஒரு நீதிமன்ற தீா்ப்பி்ன்த படி 5 பேர்ச்கடைத்துண்டு அவர் நிரந்தரமாக கிடைத்தது. அவா் காலம் சென்றதும் அவரது 2 மகள்களும் அக்கடையை கடந்த 30 வருடகாலமாக தொடா்ந்தும் நடாத்தி வருகின்றனா்.

கடந்த நவம்பா் 11 ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபை பாரிய புல்டோசா் மெசின் உடன் மிண்இணைப்பினை துண்டித்து விட்டு சட்டவிரோத கட்டிடம் என உடைக்கப்பட்டது. பாத்திமா அவளது தங்கையும் நடு வீதியில் செய்தறியாவது கதறி அழுதாள் எவ்வித அறிவித்தலுமின்றி இதனை யாா் செய்ததா்ா்கள். எனஅவளுக்கு தெரியவில்லை. - அடுத்த ஒரு இரு நாட்களுக்குள் மிகுதியை உடைப்பதாகச் சொல்லி சென்று விட்டனா். உடன் எனக்கு அழைப்பு வந்தது. இவ்விடயங்களை சொல்லி அழுதாா்கள். 

நான் இவ்விடயமாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தெறிந்த வா்களிடம் விசாாித்தும் காரணம் புரியவில்லை.அதன் பின்னா் கொழும்பு பாராளுமன்ற உறுப்பிணர் முஜிபு ரஹ்மானுக்கு தொலைபேசியில் இவ் விடயத்தினை எத்தி வைத்தேன் அவா் உடன் செயற்பட்டு அடுத்த நாள் காலை 10 மணிக்கு பாத்திமாவை செதசிரிபாய நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு தான் வருவதாக தெரிவித்து அவரும் வந்திருந்தாா். அங்கு இவ்விடயத்துக்கு பொறுப்பான சட்ட அதிகாரியைஅவா் நாடி இவ் விடயம் பற்றி கேட்டறிந்தாா். 

அந்தஅதிகாரி கடுவளை முன்னாள் மாநகர சபையின் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முதவர் புத்தாசவின் மகன் மேல் மாகாண சபை உறுப்பிணா் மஞ்சு புத்தாசவே இதற்குப்பின்னாள் இருந்துள்ளாா். பாத்திமா ஸ்டோஸூக்கு அருகில் இரு காணிகளையும் வாங்குவதற்கும் இதற்கு இடையில் பாத்திமா ஸ்டோஸ் தடையாக இருப்பதையும் நகர அபிவிருத்திஅதிகார சபையின் அதிகாரிக்கு வேண்டுமென்றே சட்ட விரோத கட்டிடம் என ஒரு பிட்டிசனை கையளித்து இதனை செய்துள்ளதாக இறுதியில் முஜிபு ரஹ்மானிடம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயா் அதிகாரி தெரிவித்துள்ளாா். 

இந்த நல்லாட்சியிலும் அதுவும் தற்போதைய ஜனாதிபதி யின் தலைமையில் உள்ள ஆட்சியிலும் இன்னும் முஸ்லீம்களுக்கான அநீதிகள் குரோதங்கள் அரசியல் வாதிகளாளே முன்எடுக்கப்படுகின்றன. இன்று வறை உடைந்த வீட்டில் மிண்சாரம் இல்லாமல் மிஞ்சிய பொறுட்களை வைத்துக் கொண்டு பாத்திமா குந்திக் கொண்டு மீண்டும் அத்தொழிலையே செய்கின்றாள். தான் சிறுகச் சிறுகச் சோ்த்து பத்தரமுல்லையில் இலங்கை வங்கியில் 5 இலட்சம் கடன்ஒன்றை பெற்றுத்தான் இந்த கடை அரையை நிர்மாணித்தேன். தனது தங்கை முதல் 4 சகோதரிகளும் இங்குதான் வாழ்ந்து பத்தரமுல்லை உள்ள சிங்கள மாகாவித்தியாலயத்திலே கற்றோம்.

 தற்போது எங்களது பிள்ளைகள் கூட பத்தரமுல்லையில் தான் கற்கின்றனா். 80 வருடமாக பரம்பரையாக வாழ்ந்து வந்தோம். பத்தரமுல்லையில் சொந்தமாக ஒரே ஒரு முஸ்லீம் கடை ஒன்று என்றால் இந்த பெட்டிக கடை மட்டும்தான் இருந்து வந்தது. இவா்கள் இவ்வாறு எங்கள் மீதும் முஸ்லீம் பொருளாதாரத்தின் மீதும் ்பொறாமைப்பட்டாா்கள் என்றால் இந்த நாடு எவ்வாறு உறுப்படும். இன்று கூட புதன்கிழமை இவ்விடயம் மாக அமைச்சா் பாட்டலி சம்பிக்கவிடம் ஒரு மனுவை கையளித்தோம்.அவா் தனக்கு ஒன்று தெரியாது நான்அதிகாரிகளுக்குஇதனை பரிசிலிக்குமாறு கட்டளை இடுகின்றேன். என பதிலளித்தாா. மிண்சாரத்தினை பெற வேண்டுமென்றால் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம்ஒரு கடிதம் வாங்கி வரும்படி மிண்சார சபையினா் கூறுகின்றனா். இதனை கதறி கதறி பாத்திமா தண்னிடம் தெரவித்தாா்.

(அஷ்ரப் ஏ சமத்)


5 comments:

  1. கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக.

    ReplyDelete
  2. உண்மையிலேயே இது ஒரு கண்ணீர்க் கதை தான். சுமார் 21 வருடங்களாக எனக்கும் இப்பெண்களின் நிலையைப் பற்றி தெரியும். தங்கைகளுக்காக திருமணமும் செய்யாமல் கெளரவத்தோடு சுயமாக சிறு வியாபாரம் செய்து வாழ்ந்துவரும் இந்த ஏழை குடும்பத்துக்கு எமது அரசியல் வாதிகள் கட்டாயம் உதவ வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

    எத்தனையோ படித்த முஸ்லிம் அரசியல்வாதிகள், சட்டவாதிகள் என இந்நாட்டில் இருக்கிறார்கள் அவர்களின் உதவிக்கரம் இவ்வேழைக் குடும்பத்துக்கு தேவையான ஒன்றாக இருக்கின்றது என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

    இதனை நாடறியச் செய்த செய்தியாளருக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  3. எங்கள் அரசியல் தலைவர்களே, சமூக சேவையாளர்கள், சட்டத்தரணிகளே இந்த சகோதரிக்கு உங்கள் உதவியும் ஆறுதலும் மிக்க அவசியமாகவுள்ளது. ஆகவே உங்கள் உதவியை அல்லாஹுக்காக செய்யுங்கள். இது உங்களுக்கு பெரும் நன்மையை கொடுக்கும்.

    ReplyDelete
  4. It's looks like we need international court for unjust government institutions.

    ReplyDelete
  5. We can never have peace under the ptresent set up.

    ReplyDelete

Powered by Blogger.