Header Ads



குப்பைகளை சேகரிக்கும் ஜனாதிபதி - அநுரகுமார கடும் தாக்குதல்

கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டு ரீதியான அரசியலுடன் தொடர்புடைய எவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவில்லை என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கட்சியில் இருந்து விலகிய மற்றும் விலக்கப்பட்டு வங்குரோத்தான சிலரே அண்மையில் சுதந்திரக்கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பழைய பொருட்களை சேரிக்கும் போத்தல், பத்திரிகை முதலாளியாக மாறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 31 பேர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க இணைந்து கொண்டதாகவும் அவர்களில் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு அமைய மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர் என்பது பொய்யானது.

வேறு கட்சிகளில் தேர்தலில் போட்டியிட்டவர்களும், ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவோருமே இவ்வாறு சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளதாக அனுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. தேர்தலோ, யுத்தமோ இவற்றில் எது வந்தாலும், முதலில் இறப்பது 'உண்மை' என்பது எத்துணை உண்மை!

    ReplyDelete

Powered by Blogger.