Header Ads



பலஸ்தீனத்திற்கு ஆதரவாக, கொழும்பில் அணிதிரள அழைப்பு


இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை அங்கீகரித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கையில் பாரிய எதிர்ப்பு பேரணியொன்று (Protest Rally) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பலஸ்தீன நட்புறவு அமைப்புகள், அனைத்து மத தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், அரசியல் காட்சிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம், கலைஞர்கள், சட்டத்தரணிகள் சங்கம் போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த பேரணியை எதிர்வரும் 22ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு “உலக அபிப்ராயத்தை மதிப்போம்! கிழக்கு ஜெரூஸலத்தை பலஸ்தீனத்தின் தலைநகராக ஏற்றுக்கொள்” (“Respect World Opinion! Accept East Jerusalem as the Capital of Palestine”) எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இந்த நிகழ்வின் போது மேற்குறித்த அனைத்து பங்காளர்களும் இணைந்து கையொப்பமிட்டு தீர்மானமொன்றும் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த தீர்மானம் எதிர்வரும் 12.01.2018ம் திகதி ஐக்கிய அமெரிக்க தூதுரகத்தில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -DC-


6 comments:

  1. Masha Allah Good Arrangement

    ReplyDelete
  2. While children and youth are dying for Quds and Palestine these Sauidi are playing with Palestine and it's future. For politics

    ReplyDelete
  3. இங்கு ஆங்கிலம் சரியாக எழுதத் தெரியாவிட்டால் தயவுசெய்து தமிழில் தமது கருத்துக்களை எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். உடைந்த ஆங்கிலச் சொற்களை ஒன்றுசேர்த்து இணைக்க முயற்சி செய்யம்போது ஏதோ சொல்லவந்து என்னமோ சப்பித்துப்பிய கதையாதத் தென்படுகிறது ஆரம்பத்தில் உள்ள கருத்து. குறைந்த பட்சம் பெரும்பான்மை சமூக அங்கத்தவர்கள் ஒன்றுசேர்ந்து பலஸ்தீன முஸ்லிம்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க அவர்கள் மக்களைக்கூட்டும்போது நாம் அவர்களுக்கு எமது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் அதைவிட்டு ஏதோ குழப்பி தமிழ், ஆங்கிலம் எதுவும் சரியாக வாசிக்கவோ விளங்கிக் கொள்ளவோ அருகதையின்றி இப்படித் தெரிவிக்கப்படும் கருத்துகளை வேறு பிரசுரித்து வாசிப்பவர்களிடத்தில் இந்த இணையத்தளத்தின் தரத்தையும் தாழ்த்திக் கொள்ளவேண்டாம். குறைந்தது சரியாக இரண்டு வாக்கியங்களை எழுதத் தெரியாதவர்களின் கருத்துக்களை தயவுசெய்து இங்கு பிரசுரம் செய்து உள்ள ஓரிரண்டு தளங்களையும் தரமிறக்கும் பணிக்கு ஊக்கமளிக்க வேண்டாம்.நன்றி

    ReplyDelete
  4. முஸ்லிம்களின் ஒற்றுமையை சின்னாபின்னப் படுத்தும் நோக்கில், இங்கு அரபுப் பெயர்களில் கருத்துக்களை பதிவோர், முஸ்லிம்கள்தான் என்று எண்ணி அவற்றுக்கு பதிலளித்து, தமது ஒற்றுமையை மேலும் சிக்கலாக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்நீங்க.. குறைக்கிற நாய் குறைக்கட்டும்.நமக்கென்ன??

      Delete

Powered by Blogger.