Header Ads



கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என, மைத்திரி எச்சரிக்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றிக்காக பாடுபட்டால், அவர்களை சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்குவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் றேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி தேடி அறிய மாவட்டம் தோறும் விசேட பிரதிநிதிகளை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

தேர்தலின் பின்னர் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

Powered by Blogger.