Header Ads



குற்றம் செய்யாதவர்கள், யானையில் இணையலாம், நாம் வேடிக்கை பார்க்கப் போகிறாம்..!

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் முக்­கிய உறுப்­பி­னர்கள் சிலர் விரைவில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணை­ய­வுள்­ள­தா­கவும் அது குறித்து பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும்  தேர்­தலின் பின் னர் பாரிய  மாற்­றங்­களை மக்கள் உண­ர­ மு­டியும் எனவும்  ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­ய­மைச்சர் அஜித் பெரேரா தெரி­வித்தார். 

ஊழல் குற்­ற­வா­ளிகள் இல்­லாத நபர்­களை   தயங்­காது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணை­யு­மாறும் அவர் குறிப்­பிட்டார். களுத்­து­றையில் இடம்­பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில்  எமக்கு மிகப்­பெ­ரிய வெற்றி கிடைக்கும். இப்­போதே நாம் பாரிய வெற்­றியை பெற்­றுள்ளோம். குறிப்­பாக வேட்­பு­ மனுத் தாக்­கலின் போதே எமக்கு வெற்றி கிடைத்­துள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்சி யானைச் சின்­னத்தில் தாக்கல் செய்த எந்­த­வொரு வேட்­பு­ ம­னுவும் இலங்­கையின் எந்த பகு­தி­யிலும் நிரா­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. ஏனைய அனைத்து கட்­சி­களின் வேட்­பு­ம­னுக்கள் முழு­மை­யாக ஏற்­றுக்­ கொள்­ளப்­ப­ட­வில்லை. ஏனெனில் நாங்கள் பொறுப்­புடன் எமது கட­மை­களை சரி­யாக செய்து வரு­கின்றோம். அதுவே எமக்கு வெற்­றி­யாக மாறி வரு­கின்­றது. 

மேலும் ஒரு­புறம் ஐக்­கிய தேசியக் கட்சி பல­ம­டைந்து வரும் நிலையில் ஏனைய பிர­தான கட்­சிகள் துண்­டு­க­ளாக சிதறி வரு­கின்­றன. பொது­ஜன முன்­னணி தனித்து கள­மி­றங்கும் என அறி­விக்­கப்­பட்ட பின்னர் அவர்­களின் உறுப்­பி­னர்கள் படிப்­ப­டி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை நாடிச் செல்­கின்­றனர். அதேபோல் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் மேலும் சிலர் எம்­முடன் இணைந்­து­கொள்­ளவும் தீர்­மானம் எடுத்து வரு­கின்­றனர். எனினும் சரி­யான நேரம் பார்த்து எம்­முடன் இணைந்­து ­கொள்­ளவே நாம் அவர்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளோம். 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் எந்த நேரத்­திலும் இணைந்­து­கொள்ள முடியும்.  எனினும் எம்­முடன் இணையும் போது சரி­யான நேரம் பார்த்து வர­வேண்டும். அதேபோல் பொது­ஜன முன்­ன­ணியில் உள்ள ஊழல், மோசடிகள் இல்­லாத நபர்­களை ஏற்­று­க்கொள்ள நாம் தயா­ராக உள்ளோம். ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கைக்கு ஏற்ற நபர்­களை நாம் ஏற்­று­க் கொள்வோம். அவ்­வா­றான முக்­கி­ய­மான சிலர் எம்­முடன் இணைய தயா­ராக உள்­ளனர். 

முக்­கி­ய­மான சில நபர்­க­ளுடன் நாம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். அவர்கள் நிச்­ச­ய­மாக எம்­முடன் இணைந்­து­ கொள்­வார்கள். அதேபோல் மேலும் சிலர் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் தலை­மையின் கீழ் இணைந்­து­ கொள்­ளப்­போ­வ­தா­கவும் தெரி­வித்­தனர். ஆகவே விரையில் தாமரை மொட்டு கருகி அழிந்­து­போ­கப் ­போ­கின்­றது. 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ரது குடும்ப அர­சியல் வாதி களும் என்ன செய்யப் போகின்றனர் என்பதை நாம் வேடிக்கை பார்க்கத்தான் போகின்றோம். கடந்த கால ஊழல் அரசில் தலைமை வகித்த அனைவரையும் மக்கள் நிராகரித்த நிலையில் இவர்கள் முழுமையாக அரசியலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப் பிட்டார். 

No comments

Powered by Blogger.