Header Ads



இன­வாத மோதல், நாடு பூரா­கவும் பரவும் அபாயம் உள்­ளது - அநுரகுமார

காலி, கிந்­தோட்­டையில் சம்­பவம் உக்­கி­ர­ம­டைந்த தறு­வாயில் விசேட அதி­ரடி படை­யி­னரின் எண்­ணிக்­கையை குறைத்­தமை தவ­றாகும். அத்­துடன் இந்த சம்­ப­வத்­திற்கு பொலி­ஸாரின் அச­மந்த போக்கே காரணம் என பொலிஸ் மா அதிபர் கூறி­யுள்ளார். அப்­ப­டி­யாயின் பொலி­ஸாரின் அச­மந்த போக்­கிற்கு பொறுப்பு கூற கூடி­யவர் யார் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க சபையில் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ்  ஏற்­க­னவே எழுப்­ப­ப்பட்ட கேள்­விக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க பதி­ல­ளித்த பின்னர் கேள்வி எழுப்பும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில், காலி, கிந்­தோட்­டையில் விசேட அதி­ரடிப் படை­யினர் அகற்­றப்­ப­ட­வில்லை. அதற்கு மாறாக குறைக்­கப்­பட்­ட­தாக அமைச்சர் சபையில் கூறினார். அப்­ப­டி­யா­யினும் இனக் குழுக்­க­ளுக்கு இடையில் மோதல் உக்­கி­ர­ம­டைந்த தறு­வாயில் விசேட அதி­ரடிப் படை­யி­னரை குறைத்­தமை பெரும் தவ­றாகும். ஏனெனில் இவ்­வா­றான இன­வாத மோதல் நாடு பூரா­கவும் பரவும் அபாயம் உள்­ளது. இந் நிலையில் அதி­ரடிப் படையின் எண்­ணிக்­கையை குறைத்­தமை உகந்­த­தல்ல.

மேலும் இந்த சம்­பவம் உக்­கி­ர­ம­டை­வ­தற்கும் பொலி­ஸாரின் அச­மந்த போக்கே காரணம் என பொலிஸ் மா அதிபர் கூறி­யுள்ளார். தற்­போது அர­சியல் இலா­பத்­திற்­காக இன­வாதம் தூண்­டப்­படும் தறு­வாயில் பொலிஸ் மா அதி­பரின் கருத்து மிகவும் பார­தூ­ர­மா­னது. 

இந்­நி­லையில் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்து கொண்டு இவ்­வா­றான குற்­றச்­சாட்டை இவர் யார் மீது சுமத்­து­கின்றார்? இவர் தனது குற்­றச்­சாட்டை சம்­பவம் நடந்த பிர­தேச பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி மீது சுமத்­தி­னாரா? அல்­லது வேறு நபர் மீது சுமத்­தி­னரா என்­ப­தனை அமைச்சர் கூற வேண்டும். அவர் பொலிஸ் அச­மந்தம் என்று யாரை கூறு­கின்றார். பொலிஸ் அச­மந்த போக்­கிற்கு பொறுப்புக் கூறக் கூடி­யவர் யார் ? எனவே இது தொடர்பில் அமைச்­சரின் நிலைப்­பாடு என்ன? பொலிஸ் மா அதி­பரின் கூற்றை அடிப்­ப­டை­யாக கொண்டு ஏதும் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளவா என்றார்.

இத­னை­ய­டுத்து பதி­ல­ளித்த அமைச்சர் சாகல ரத்­நா­யக்க, பொலிஸ் மா அதி­பரின் கூற்றை நான் முற்று முழு­தாக எதிர்க்­கின்றேன். அதற்கு நான் ஒரு­போதும் இணங்கமாட்டேன். மேலும் இந்த வன்முறை நாடு பூராகவும் விஸ்தரிக்கப்படுவதை பொலிஸாரின் செயற்பாட்டின் ஊடாகவே தடுக்க முடிந்தது. இதன்போது பொலிஸார் பெரும் அர்ப்பணிப்பினை செய்துள்ளனர் என்றார்.  

1 comment:

  1. Exactly correct.
    It's crucial to every village and town has to come to a plan to over come the issue.
    I was shocked how Rohingya people being genicide in their home land by government and military did that cruelty to the kids, women , elderly and men in this 20th century. This was documented by BBC reporter by an interview by the victims.
    All the time minister Sagalarathnayaka in an incident like this or flood he covered up his incapabily.

    ReplyDelete

Powered by Blogger.