Header Ads



திருமணத்தையிட்டு, இரத்ததான முகாம்


முஸ்லிம்கள் கிராமம் கிராமமாக வாழக்கூடிய கோட்டையே நாகை காயிதே மில்லத் மாவட்டமாகும்.

இம்மாவட்டம் இந்து, முஸ்லிம், கிறித்தவ மக்களின் ஒற்றுமைக்கான சமூக நல்லிணக்க மாவட்டமாகும்.

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய ஊரே எலந்தங்குடி. அவ்வூரை சேர்ந்த ஹாஜா மைதீனுக்கு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை முன்னிட்டு இரத்ததான முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்கு வந்தவர்களில் பலர் இரத்ததானம் செய்தனர்.

திருமணத்திற்கு வருகை தந்த மஜக பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தற்காக பாராட்டுக்களை தெரிவித்து இது முற்போக்கு முயற்சி என கூறினார்.

திருமணத்திற்கு வருகை தந்த தினேஷ் என்ற இரத்ததான கொடையாளிக்கு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.

பிறர் நலன் நாடுவதே இஸ்லாம் என்பதை மெய்பிக்கும் வகையில் தமிழகத்தில் இரத்ததான முகாமில் முதலிடத்திலும் முஸ்லிம் இயக்கமே வருகிறது. இரண்டாம் இடத்திலும் முஸ்லிம் இயக்கமே வருகிறது.

சின்ன சமுதாயம் ஒட்டுமொத்த மாநிலத்திலும் முதலிடத்தில் வருகிறதென்றால் இதுதான் இஸ்லாம். பிறர்நலன் நாடுவது தான் இஸ்லாம்..



4 comments:

  1. வாழ்த்துக்கள்..بارك الله لكم... சம்மந்தமற்றவர்கள் வாழ்த்தாவிட்டாலும் ஒண்றுமில்லை, வயிறெரிந்து எதையும் இங்கு உளறாமலிருந்தால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இம்ரான் இயக்கம் சார்ந்த சிந்தனையும் இயக்கம் சார்ந்த எழுத்தையும் கைவிட்டு இஸ்லாமிய சகோதரத்துவத்தை நம்மால் பேண முடியாதா? நம் அனைவராலும் முடியும். ஏனெனில் நாம் முஸ்லிம்கள்.

      Delete
    2. நீங்கள் சொன்னது 100% சரி. நான் மேற்கோளிட்டது كافير களை. சகோதரர் லாபீர். விளங்கிக் கொண்டால் கருத்துப்பதிவிடடுங்கள்.

      Delete

Powered by Blogger.