December 05, 2017

பௌத்தர்களுக்கு எதிராக ஜிஹாத் (மியன்மாரில் ஞானசாரர் குழு கண்டதும், கேட்டதும்)


சிங்­க­ளத்தில்: சதுர பமுனுவ, தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

ரேரு­கானே சந்­த­வி­மல தேரர் இலங்கை ‘ஷ்வேஜின் நிகாய’ என்ற பௌத்த பிரிவின் தலைமைப் பதவி வகித்த பெருந்­தகை. அவர் பத்து ரூபா கப்பல் பிர­யாணக் கட்­ட­ணத்தில் பர்மா நாட்­டுக்கு பய­ணித்த சம்­பவம் அவ­ரது வாழ்க்கை வர­லாற்றில் காணப்­ப­டு­கி­றது. இலங்­கைக்கும் பர்­மா­வுக்கும் மிகவும் நெருக்­க­மான பௌத்த உறவு இருந்து வரு­கி­றது.

மிகவும் விலை­ம­திக்­கத்­தக்க சூடா­மா­ணிக்கம் என்ற வைர இரத்­தினம் பர்­மிய பௌத்த மக்­க­ளாலே இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. விலை­ம­திக்­கவே முடி­யாத சூடா மாணிக்க வைரம் இலங்­கையில் எந்த பிர­சித்­தி­பெற்ற பௌத்த தலங்­க­ளிலும் காண்­ப­தற்­கில்லை.வெளி­நாட்டு மன்­ன­ரொ­ரு­வரால் இத்­த­கைய அரும் பொக்­கிஷம் ஒன்று அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்ட வர­லாறும் இல்லை.

இத்­த­கைய பெறு­மதி வாய்ந்த பொருள் ஒன்று எம்மை அடைய பிர­தான காரண கர்த்­தா­வக இருந்­தவர் வின­யா­லங்­கார தேரர் என்­பதை நாம் மறந்து விடு­வ­தற்­கில்லை. ரேரு­கானே சந்­த­வி­மல தேரரால் எழு­தப்­பட்ட ‘சூடா­மா­ணிக்க வைரத்தின் மகி­மையும் வின­யா­லங்­கார தேரரின் மதிப்பும்’ என்ற நூலில் இவ் வைரம் குறித்த தகவல் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந் நூல் முதன் முத­லாக 1940 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்­டது. அதன் முக­வு­ரையில் நூலா­சி­ரியர் ரேரு­கானே தேரர், "இந்­நூலைப் படிப்­பதன் மூலம் இலங்­கை­யி­னதும் பர்­மா­வி­னதும் பௌத்­தர்களிடையே உள்ள  நெருக்­க­மான  தொடர்பு குறித்து மேலும் தெளி­வினைப் பெற்றுக் கொள்­ளலாம். அதனால் அனைத்து சிங்­கள பௌத்­தர்­களும் இதனை விரும்பிப் படிக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்­டுள்ளார்.

இவ்வாறு விதந்துரைக்கப்படும் மியன்மார் எனும் பர்மா நாட்­டுக்கு விஜயம் செய்­யக்­கூ­டிய விசேட சந்­தர்ப்பம் ஒன்று எமக்கு அண்­மையில் கிடைத்­தது. அதுவும் கல­கொட அத்தே ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான பொது­ப­ல­சேனா அமைப்பின் தூதுக் குழு­வொன்­று­டனே நாம் பர்­மா­வுக்குப் பய­ணித்தோம். கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திக­திக்குப் பின்­னுள்ள காலப் பகு­தியில் பர்­மாவின் ராகின் பிராந்­தி­யத்தில் முஸ்லிம் தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தொடர் தாக்­கு­தலைத் தொடர்ந்து அங்கு உரு­வான நிலை­மைகள் குறித்து பார்த்­த­றி­யவும் இந்­நாட்டு பௌத்­தர்­க­ளுக்கும் பர்­மிய பௌத்­தர்­க­ளுக்கும் இடையே பொது­வா­ன­தொரு ஒரு­மைப்­பாட்டை உரு­வாக்கும் நோக்­கங்­க­ளுக்காகவே எமது பயணம் அமைந்­தது.

கடந்த நவம்பர் 7 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நள்­ளி­ரவு பன்­னி­ரண்டு மணி­ய­ளவில் நாம் ரங்கூன் விமான நிலை­யத்தை அடைந்தோம். எம்­முடன் சென்ற தூதுக் குழுவின் முக்­கி­யஸ்­தர்­க­ளான ஞான­சார தேரர், மாகல் கந்தே சுதத்த தேரர், கலா­நிதி திலந்த விதா­னகே உள்­ளிட்ட எங்­க­ளுக்கு அங்கு நல்ல வர­வேற்­ப­ளிக்­கப்­பட்­டது. பர்­மாவின் பிரஞாசாமி தேரர், ரங்கூன் நகரில் வசித்து வரும் சிங்­கள வாலி­பர்­க­ளான ஹஷான், இந்­திக்க உள்­ளிட்ட பலர் விமான நிலை­யம் வந்து எம்மை நன்கு வர­வேற்­றனர்.

ஞான­சா­ர­தே­ரரின் பர்­மிய பயணம் குறித்து இங்­குள்ள இணை­யத்­த­ளங்­களில் பல்­வேறு வகை­யிலும் தக­வல்கள் வெளி­யா­கின. அங்­குள்ள மெண்­டலே நகரில் நாம் தங்­கி­யி­ருந்த ஹார்­மனி ஹோட்டல் இரா­ணு­வத்­தி­னரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஒரு செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. உண்­மை­யி­லேயே அவ்­வா­றா­ன­தொ­ரு­நிலை ஏற்­ப­ட­வே­யில்லை. 

எமது பௌத்த தூதுக் குழு­வுக்கு பொலிஸ் பாது­காப்பு தேவையா என்று நாம் தங்­கி­யி­ருந்த ஹோட்­ட­லுக்கு வந்து மெண்­டலே நகர பொலிஸ் பகுதித் தலைவர் கேட்டார். அப்­போது எமக்கு வழி­காட்­டி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பர்­மாவைச் சேர்ந்த பிரஞாசாமி என்ற தேரர், அவ்­வா­றான பாது­காப்பு அவ­சி­ய­மில்­லை­யென்று பதி­ல­ளித்தார். இச் செய்­தியே கொழும்­புக்கு வரும்­போது வேறு­வி­த­மாக அமைந்­தி­ருக்­கி­றது. பர்­மிய பௌத்­தர்­களால் எமது தூதுக்­குழு மிகவும் கௌர­வ­மான முறையில் வர­வேற்­கப்­பட்­ட­மையை ஈண்டு குறிப்­பிட வேண்டும்.
எமது குழு மண்­டலே ஹோட்­டலை அடைய முன்­னரே மாபாத்தா அமைப்பின் தலைவர் அஷ்வின் விராது தேரர் அங்கு வந்து எமக்­காகக் காத்­தி­ருந்து ஞான­சார தேரரை மரி­யா­தை­யுடன் வர­வேற்றார்.

பின்னர் 8 ஆம் திகதி இரவு ரங்கூன் நகரில் இடம்­பெற்ற 'பர்­மாவைக் காப்­பாற்­றுவோம்' என்ற தொனிப் பொரு­ளி­லான மாநாட்டில் எமது தூதுக்­கு­ழுவும் கலந்து கொண்­டது. எழுத்­தா­ளர்கள், முன்னாள் படை­வீ­ரர்கள் மற்றும் பிர­மு­கர்கள் பலரும் இதற்கு வருகை தந்­தி­ருந்­தனர். அங்கு நிகழ்த்­தப்­பட்ட அனை­வ­ரதும் கருத்­தாக அமைந்­தவை, வங்­காள பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு பௌத்த தேசத்­தைத் தாரை­வார்த்­துக் கொடுக்க முடி­யாது என்­ப­தா­கவே இருந்­தது.

பர்­மாவில் ரோஹி­ங்யர்கள் வங்­காள தேசத்­த­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­கின்­றனர். அதே­போன்றே ராகின் பௌத்­தர்­களைப் போன்று இந்­துக்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும் என்று இக்­கூட்­டத்தில் அர­சுக்கு அறி­வு­றுத்தல் கொடுக்­கப்­பட்­டது. இதில் எமது குழு கலந்து கொண்­டதன் மூலம் எமது இரு நாடு­க­ளதும் பௌத்த உறவு மேலும் வலுப்­பெற வழி­யேற்­பட்­டது. 

இப்­ப­ய­ணத்தின் மற்­று­மொரு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக அஷ்வின் விராது தேர­ருடன் எமது ஊட­கத்­துக்கும் நேர்­காணல் ஒன்று கிடைக்­கப்­பட்­ட­மையைக் குறிப்­பி­டலாம். மாபாத்தா அமைப்­புக்கு எதி­ராக கடந்த காலங்­களில் பர்மா அரசால் ஒரு சில நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டதால் விராது தேரர் சர்­வ­தேச ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விப்­பதை தவிர்த்து வந்தார். இலங்கை பௌத்­தர்கள் பர்­மாவின் உண்மை நிலை­வ­ரங்­களை அப்­ப­டியே தெளி­வு­ப­டுத்­தி­யதால் எங்கள் மீது விரா­து தேரர் நல்ல மதிப்பு வைத்­தி­ருந்தார்.
தேர­வாத மியன்மார் நாட்­டின்­மீது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் குறித்தும் ராகின் பிராந்­தி­யத்தில் இடம்­பெறும் விட­யங்கள் குறித்தும் விராது தேரர் உண்மை நிலை­வ­ரங்­களை வெளி­யிட்டார். அதனை இங்கு தரு­கிறேன்.

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி 32 பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் இரா­ணுவ முகாம் ஒன்­றுக்கும் முஸ்லிம் பயங்­க­ர­வா­திகள் தாக்­குதல் தொடுத்­தனர். இங்கு பொலிஸ் நிலையம் ஒன்றில் சில அதி­கா­ரி­களே கட­மையில் இருக்­கின்­றனர். ஆனால் வங்­காள இன பயங்­க­ர­வா­தி­களோ நூற்­றுக்­க­ணக்கில் வந்து தாக்­குதல் நடத்­தினர். துப்­பாக்கி, வாள், தடிகள், அவர்­களால் தயா­ரிக்­கப்­பட்ட கைக்­குண்­டுகள் போன்ற ஆயு­தங்­க­ளுடன் தாக்­குதல் தொடுத்­தனர். அப்­போது சிறு தொகை­யான பொலி­ஸாரால் எப்­படி இதற்கு ஈடு­கொ­டுக்க இயலும். தாக்­கு­த­லுக்கு இலக்­கான எல்லா பொலிஸ் நிலை­யங்­க­ளி­னதும் நிலைமை இப்­ப­டித்தான் இருந்­தது.

வங்­கா­ள­  பயங்­க­ர­வா­திகள் செப்­டெம்பர் 1 ஆம் திகதி ராகின் பிராந்­தி­யத்­தி­லுள்ள பௌத்த, இந்து மக்கள் குடி­யி­ருப்­பு­களைத் தாக்­கினர். குழந்­தை­க­ளைக்­கூட கழுத்து அறுத்துக் கொன்­றனர்.

விராது தேரர் இவ்­வாறு கூறி­ய­வாறே மேற்­படி பயங்­க­ர­வாதத் தாக்­குதல் நிகழ்­வு­களை வீடியோ பதிவு மூலம் எமக்குக் காண்­பித்தார். மேலும் அவர் தொடர்ந்தார்.

இக் கிரா­மங்­க­ளுக்கு வங்­காள பயங்­க­ர­வா­திகள் புர்கா அணிந்து அடை­யாளம் தெரி­யா­த­வாறே புகுந்­துள்­ளனர். புர்­கா­வுக்­குள்ளே துப்­பாக்கி, வாள்கள் மற்றும் ஆயு­தங்­களைத் திணித்­தி­ருந்­தனர். இப்­ப­யங்­க­ர­வா­தி­க­ளுடன் ஐ.எஸ். உறுப்­பி­னர்­களும் இணைந்­தி­ருந்­தனர். அவர்கள் இந்து குடி­யி­ருப்­புக்கள் மீது தீ வைத்­தனர். பௌத்த விகா­ரை­களைத் தாக்கி அங்­குள்ள புத்தர் சிலை­களின் தலை­களை உடைத்­தெ­றிந்­தனர்.  (அவ்­வாறு உடைக்­கப்­பட்ட புத்தர் சிலை­யொன்றின் படத்­தையும் எமக்குக் காட்­டினார்)

சித்வே, புட்­டவுன்,  மொண்­டவுன் ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள கிரா­மங்­க­ளிலும் தாக்­குதல் நடத்­தினர். இப்­ப­யங்­க­ர­வாதக் குழு­வினர் கமொண்டே, யெபொட்டார் ஆகிய இந்­துக்­க­ளது இரு கிரா­மங்­க­ளிலும் உள்ள மக்­களைக் கூட்டுக் கொலை செய்து கூட்­டா­கவே குழி தோண்டிப் புதைத்­தனர். பின்னர் இரா­ணு­வத்­தி­னரால் பாரிய குழி­யொன்­றி­லி­ருந்து 45 பேர்­க­ளது சட­லங்கள் தோண்­டி­யெ­டுக்­கப்­பட்­டன. இவர்­க­ளது தாக்­கு­த­லுக்கு அஞ்சி அடைக்­கலம் புகுந்து முகாம்­களில் தங்­கி­யி­ருந்த பௌத்த, இந்து அக­திகள் இப்­போ­துதான் இரா­ணுவ உத­வியால் தம் இருப்­பி­டங்­க­ளுக்கு மீண்­டுள்­ளனர். அப்­ப­டி­யி­ருந்தும் சிலர் மீண்டும் குடி­யே­றாது பீதியில் இன்னும் தயங்கிக் கொண்­டுதான் இருக்­கின்­றனர். ஏற்­க­னவே ஏற்­பட்ட அச்சம் இன்னும் நீங்­க­வில்லை. அப்­ப­டியும் நீங்­குமா? என்று விராது தேரர் விளக்­கினார்.
பர்­மிய பௌத்­தர்கள், முஸ்லிம் அடிப்­ப­டை­வாத சவா­லுக்கு முகம் கொடுத்துக் கொண்­டி­ருப்­பதை இவ­ரது கூற்றின் மூலம் எம்மால் உணர்ந்து கொள்ள முடிந்­தது. இது­பற்றி அவ­ரிடம் வின­விய போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, 

பிரித்­தா­னிய ஆட்சிக் காலத்­தி­லி­ருந்தே இந்த அச்­சு­றுத்தல் இருந்து வந்­துள்­ளது. 1938 ஆம் ஆண்டு மெண்­டல மற்றும் யன்குன் நக­ரங்­களில் பௌத்த – முஸ்லிம் மோதல்கள் இடம்­பெற்­றுள்­ளன. இக்­க­ல­வ­ரத்­துக்கு 786 என்ற முஸ்­லிம்­களின் இலக்கம் ஒன்றே கார­ண­மாக அமைந்­தது. இவற்றின் பின்னால் நிகழ்ச்சி நிரல் ஒன்று மறைந்­துள்­ளது. இது வேறொன்­று­மில்லை, இந்­நாட்­டையும் முஸ்லிம் நாடொன்­றாக்­கு­வதே இவர்­களின் இலக்­காகும். இதனை முறி­ய­டிக்க நாம்  செயற்­பட்டு வரு­கிறோம். 1942 மே 13 ஆம் திகதி, ‘சித்வே’ பௌத்த – முஸ்லிம் கல­வரம் மூண்­டது. அதன்­போது 45 பௌத்த கிரா­மங்­களில் 20 ஆயிரம் மக்கள் கொல்­லப்­பட்­டார்கள். இது குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் பேச­வில்லை. இப்­போதும் இத்­த­கைய தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­கின்­றன. அன்று பௌத்­தர்கள் வாழ்ந்த கிரா­மங்கள் இன்று முஸ்லிம் கிரா­மங்­க­ளா­கி­யுள்­ளன. இப்­போது நிலைமை மோச­மா­கி­யுள்­ளது. இன்று பௌத்­தர்­க­ளுக்கு எதி­ராக ஜிஹாத் யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு விராது தேரர் பர்­மிய மொழியில் கருத்­துக்­களைக் கூறினார். இவ்­வு­ரையை எமக்கு  வழி­காட்­டு­வ­தற்­காக அமர்த்­தப்­பட்ட பிர­ஞா­சாமி தேரர் ஆங்­கி­லத்தில் மொழி பெயர்த்தார். இவர் விராது  தேர­ருடன் இணைந்து செயற்­ப­டு­பவர். அத்­துடன் இலங்­கையில் பல வரு­டங்கள் தங்கியிருந்து கல்வி கற்­ற­வ­ராவார்.

பர்­மிய பெளத்­தர்­க­ளுக்கு எதி­ராக இயங்கும் சர்­வ­தேச ஊட­கங்கள் குறித்து, வின­விய போது, விராது தேரர் சற்று மௌனம் சாதித்து விட்டு கூறி­ய­தா­வது, உலகின் சக்­தி­வாய்ந்த ஊட­கங்கள் முஸ்­லிம்­களின்  அதி­கா­ரத்­திற்­குட்­பட்­டுள்­ளன. ஐக்­கிய நாடுகள்  சபையும் முஸ்­லிம்­களின் சக்­திக்­குட்­பட்டு விட்­டது. ராகின் பிராந்­தி­யத்தில் தனி­யான அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா,  ஐரோப்பிய சம்மேளனம் ஆகியன இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது பாரிய பிரச்சினையாகும் என்றார்.
உலக பௌத்தர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறும் அறிவுரையென்ன? என்று வினவினோம்.

உலக பௌத்தர்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். வரலாற்றில் நாம் இரண்டு தடவைகள் தோற்றுப் போயுள்ளோம். மீண்டும் தோல்வியுறுவோமேயானால் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து நாம் அனைவரும் பெளத்த கலாசாரத்தைப் பாதுகாக்க ஒன்று படவேண்டும் என்றார்.

விராது தேரருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு நாம் மெண்டலே நகரிலுள்ள மயோஸியேன் பிரிவெனாவைப் பார்வையிடச் சென்றோம். அங்கு 2750 பிக்குமார் பயின்று கொண்டிருக்கிறார்கள்.  நாம் ஏற்கனவே கலந்துரையாடிய விராது தேரரின் இரு மாடிகள் கொண்ட கட்டிடத்திலும் பிக்குகள் தங்கும் 54 விடுதி அறைகள் காணப்பட்டன.

மொத்தத்தில் பர்மிய மக்கள் வங்காள பயங்கரவாதிகள் மீது கடும் விசனத்துடன் இருப்பதை இப்பயணத்தின் மூலம் நாம் கண்டு கொண்டோம்.

நன்றி: திவயின.

6 கருத்துரைகள்:

செய் அல்லது செத்து மாடி புநா மவன

கொட் ... லாடம் அடிக்கணும்

This is all biggest lies. Rohingiyas are unarmed innocent people.who are subjected to heinous crime. Viranthu is terrorist. even Burmese Buddhist association too distance from this monk's activities.

Why Jaffna Muslim publish these type of news all are lies.is it to insult innocent rohingiya Muslim and brand them as terrorist.all these story and the video are lies and fake to implicate Rohingiya Muslims as terrorist.

I hope some intellectual who is expert in this subject will give a fitting response to these blatant lies..my humble suggestion to the editorial board is : pls kindly .review the news before publication.We know very well Diwayina is one of the leading news media that is publishing Anti Islamic un authentic news..
.

நன்கு திட்டமிடுததப்பட்ட கட்டுக்கதை இதன் அர்த்தம் இங்கும் பாரிய இனப்படுகொலைகளைக் செய்வதற்கு தயாராக விட்டார்கள் என்பதை நாட்டுமக்களையணைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமாகும் அவசரமாக இதற்குக் தகுந்தபடி முன்னேற்பாடுகளைக் மேற்கொள்ள வேண்டியது அணைவருடைய முக்கியமான கடமையாகும்

Yes, brother. This is a hoax to deceive Ceylon Sinhalese. We must crystallize the facts in sinhala language.

Post a Comment