Header Ads



கூண்டில் ஏறிய ரணில், பதவிவிலக வேண்டும் - மஹிந்த

தாம் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பிரதமர் சாட்சிக்கூண்டில் ஏற இடமளித்திருக்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று ஆண்டுகளுக்கு பழிவாங்கல் செயற்பாடே இடம்பெற்றது. இந்த நிலையில், கடந்த கால பிணை முறிகள் தொடர்பில் அடுத்துள்ள இரண்டு ஆண்டுகளில் ஆராய உள்ளதாக கூறுகின்றனர்.

தற்போதைய ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். தாம் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால், தமது பிரதமருக்கு இவ்வாறு நேர்ந்திருத்தால், தாம் பிரதமரை அந்த இடத்திற்கு அனுப்ப அனுமதித்திருக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ஒருவர் உலகில் முதல் முறையாக சாட்சிக்கூண்டில் ஏறி, சாட்சியமளிப்பது பொறுத்தமற்ற நடவடிக்கையாகும். எனவே, தயவுசெய்து பதவி விலகிச் சென்று சாட்சியமளித்துவிட்டு வருமாறு தாம் கூறுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஏனெனில் இதனை உலகம் அவதானித்துக்கொண்டிருக்கின்றது. நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

6 comments:

  1. தங்களின் ஆட்சியில் இப்படியான ஊழல்கள் ஆதாரம் இல்லாமல் அளிக்கப்பட்டிருக்கும்... இது பற்றி கதைத்தவர்களை வெள்ளை வேன் கொண்டு அளித்திரிப்பீர்கள்...

    ReplyDelete
  2. You protected many crime makers without staging to court.. BUT people wanted justice.. regardless a president, priminister or a public.. who ever commits crime should come to court.. THIS is what called TRUE JUSTICE SYSTEM. But once again while you are not in power you say and prove YOU DO NOT LET THIS JUSTICE.

    ReplyDelete
  3. Your very gentle man in srilanka

    ReplyDelete
  4. இந்த அழகான முன்மாதிரிகளை உங்களை போன்ற கள்ளர்களாலும்,கொலைகாரர்களாலும் விளங்கிகொள்ளமுடியாது,இன்னும் இவ்வாறான விடயங்கள் எத்தனை பிரநாடகளில் நடந்தேறுகின்றன இவைகள் தெரியாமலா 10 வருடம் ஜனாதிபதியாக இருந்தீர்கள்? ஆம் நீங்கள் எங்கு சரியான சட்டத்தை மதிக்கும் ஜனாதிபதியாக இருந்தீர்கள் சிலகள்ளக்கூட்டத்தாறுக்கு தலைவனாக இருந்தீர்கள் அதனால் மக்கள் உங்களை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டார்கள்!

    ReplyDelete
  5. இந்த ஆட்சியில், இந்த விடயத்தில்  நீதியின் முன்னே பிரதமரும் சாதாரணரும் சமமே என்பதை, உலகம் முழுதும் அறிந்து கொண்டிருக்கும்.

    அதேபோன்று, இன்று நீங்கள் பதவியில் இருந்திருந்தால், இவற்றுக்கு மாற்றமே நடந்திருக்கும் என்பதையும், உலகம் உங்கள் வார்த்தைகளாலேயே அறிந்துகொண்டிருக்கும்.

    இது உலகிலேயே முதல்முறை என்றால், உலகுக்கே ஒரு சிறந்த முன்மாதிரியும் உலக அரங்கில் இலங்கைக்கு அதிக மதிப்பைக்  கொண்டுவரும் சம்பவமுமே இது.

    அது சரி, உங்கள் தரப்பு எப்போது சாட்சிக் கூண்டில் ஏறப்போகிறது?

    ReplyDelete

Powered by Blogger.