Header Ads



எமக்குள்ள மாபெரும் சாபக்கேடு என்னவென்றால்..?

இலங்கையில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள், தேசியக் கட்சிகளின் முகவர்களாக இருந்து செயற்படும் அரசியல் கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நிலைப்பாடு குறித்து, ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புதிய கோணத்தில் சமூகத்தின் நலனை முன்னிலைப்படுத்தி கூட்டணியை அமைத்திருக்கின்றோம். மக்கள் விரும்பக்கூடிய தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.

எமக்குள்ள மாபெரும் சாபக்கேடு என்னவென்றால், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் சென்று ஒட்டிக்கொள்வது ஒரு கலாச்சாரமாக இருக்கின்றது.

இதுதான் மிகப்பெரிய ஒரு மோசமான கலாச்சாரமாகவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. In that case, you should not alliance with Risard Bathiudeen.

    ReplyDelete
  2. அதைவிட பதவி பட்டம் கிடைக்கின்ற பக்கம் போய் ஒட்டிக்கொள்கின்ற கலாச்சாரத்தை முதல் மாற்ற வேண்டும்

    ReplyDelete
  3. அதைவிட பதவி பட்டம் கிடைக்கின்ற பக்கம் போய் ஒட்டிக்கொள்கின்ற கலாச்சாரத்தை முதல் மாற்ற வேண்டும்

    ReplyDelete
  4. அப்போ நீங்க முகாவின் தனி ஆட்சியிலா ராஜாங்க அமைச்சராக இருந்தீங்க? உங்களுக்கு தேசிய பட்டியல் தந்திருந்தால் நீங்களும் ஒட்டுன்னியாக இருந்திருப்பீர்கள்.. அதெல்லாம் ஒரு காலம் இப்ப இது தான் உங்களின் கொள்கை என்றால் சதா காலமும் ஒட்டுன்னியாக இருப்பவர்களுடன் ஏன் ஒட்டிக்கொண்டீர்கள்? ஒருவேளை சாணக்கியமோ?

    ReplyDelete
  5. we support you to destroy rauf hakeem congress

    ReplyDelete

Powered by Blogger.