Header Ads



சல்மானின் அரண்மனையை நோக்கி, ஏவுகணை வீசியதாக. ஹூதிகள் அறிவிப்பு

சௌதி அரேபியத் தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த பேலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை இடைமறித்ததாக ஏமன் நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் சௌதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்திருக்கிறது.

சௌதி தலைநகரில் இதனை நேரில் பார்த்தோர் வெடிசத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளதோடு, காற்றில் புகை மூட்டம் எழும்புவதை காட்டுகின்ற காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். சேதாரம் ஏதும் ஏற்பட்டதாக செய்திகள் இல்லை.

அல்-யாமாமா அரண்மனையில் சந்தித்துப் பேசிய தலைவர்களைக் குறிவைத்து தாங்கள் புர்கான்-2 ரக ஏவுகணையை ஏவியதாக ஹூதி இயக்கத்தின் அல்-மாசிரா தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது. மன்னரின் தலைமையகமும், அரசவையும் இந்த அரண்மனையில்தான் உள்ளன.

கடந்த மாதம், இதே போன்றதொரு ஏவுகணை ரியாத் விமான நிலையத்தை தாக்குவதற்கு மிகவும் நெருக்கமாக வந்தது குறிப்பிடத்தக்கது.

2015ம் ஆண்டு முதல் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அரசை எதிர்த்தும், சௌதி தலைமையிலான கூட்டுப்படைகளை எதிர்த்தும் போரிட்டுவருகிறார்கள். அவர்களுக்கு ஆயுதம் வழங்குவதாக, சௌதியும், அமெரிக்காவும் இரானை குற்றம்சாட்டி வருகின்றன.

8 comments:

  1. Brother there is no group in Islam so stop blaming and posting unwanted comments.

    ReplyDelete
  2. If one person keeps hating only one nation again and again.. and find nothing good from that nation... I think he has some .... issue. batter for him to check with a neurologist.

    ReplyDelete
  3. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    ReplyDelete
  4. மேற்குறிப்பிட்ட இயக்கங்கள் ஒன்றிற்கும் உட்படாத ஷீயா மதத்தைச் சேரந்த நீங்கள் ஏன் அவற்றை பற்றி கவலைப்பட வேண்டும்?????

    ReplyDelete
  5. ZIONIST SAUDI RULERS SHOULD BE WIPED OUT FROM THIS EARTH AS SOON AS POSSIBLE. WELDONE HUTHIS

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், சந்தேகத்திற்க இடமில்லை.

      Delete
  6. The creation of abdullah ibnu saba.

    ReplyDelete

Powered by Blogger.