Header Ads



பெண் வேட்பாளர்கள் எங்கே...?

ஏறாவூரில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் விளக்கக் கூட்டத்திற்கு பெண் வேட்பாளர்கள் எவரும் வருகை தராமை தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆண் வேட்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

பிரச்சாரம் செய்தல், கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவினர் தமது காரியாலயங்களை அமைத்தல், வாகனங்களைப் பாவித்தல், ஒலிபெருக்கிகளைப் பாவித்தல், கூட்டத்திற்கான இடங்களைப் பாவித்தல், கூட்டங்களை நடத்துதல் தொடர்பில் புதிய தேர்தல் ஒழுங்குமுறைகளின் கீழ் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு விதிகள் வேட்பாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.எம்.பியசேன ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் ஆகியோரால் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் கூட்டம் நடத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை ஆகியவற்றுக்காக தேர்தலில் போட்டியிடும் 9 அரசியல் கட்சிகள் இரண்டு சுயேச்சைக் குழுக்களினதும் சார்பில் சுமார் 55 ஆண் வேட்பாளர்கள் மாத்திரம் இந்த தேர்தல் சட்ட திட்டங்களைப் பற்றித் தெளிவு பெரும் கூட்டத்திற்கு சமூகமளித்திருந்தார்கள்.

எந்தவொரு கட்சியிலிருந்தோ சுயேச்சைக் குழுவிலிருந்தோ ஒரு பெண் வேட்பாளர் கூட தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பான கூட்டத்திற்கு வருகை தரவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2 comments:

  1. தேர்தல் சம்பந்தமான விளக்க கூட்டத்துக்கே சமூகமளிக்க முடியாத பெண் வேட்பாளர்கள், எவ்வாறு மக்கள் முன் வந்து சேவையை கிழிக்கப் போகிறார்களோ தெரியல.

    ReplyDelete
  2. 100 -25% pengal pangu kolla wendum enpathe vithimurai thavira wetripera wendum enpathalla avargal peyar pathiwaahi irundaal sari ella pengalum virumpi arasiyali idupada maattargal

    ReplyDelete

Powered by Blogger.