Header Ads



இலங்கையில் பிளாஸ்டிக் கழிவுகளில், பெட்ரோல் தயாரிக்கும் முயற்சி தோல்வி

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கு பெட்ரோலியம் வள அமைச்சினால் 250 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெற்றோல் இறக்குமதியை குறைத்து, 30 மில்லியன் அந்நிய செலாவணியை சேமிக்கும் நோக்கதுடனேயே இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15 ஆம் திகதி திரைச்சேரியினால் 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதே ஆண்டு செப்டம்பர் மாதம் குறித்த திட்டத்திற்கான உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த திட்டத்திற்காக, வருடமொன்றிற்கு 6 இலட்சத்து 60 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இதுவரை 22 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இத்திட்டம் முறையாக செயற்படுத்தப்படாமை உள்ளிட்ட காரணங்களால் தோல்வி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.