Header Ads



சிறுமிகளின் கத்னாவை தடைசெய்ய கோரிக்கை, சர்வதேச ஊடகமும் செய்தி வெளியீடு

சிறு­மி­களின் பிறப்­பு­றுப்பு சிதைக்­கப்­படும் “கத்னா” சடங்­கை தடை செய்­யு­மாறு, பிறப்­பு­றுப்பு சிதைக்­கப்­பட்ட இலங்கைப் பெண்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் குழு­வொன்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இலங்­கையில் சில முஸ்லிம் குழுக்­களால் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­படுவதாக கூறப்படும் கத்னா சடங்­குக்கு எதி­ராக இக்­கு­ழு­வினர் குரல்­கொ­டுத்­த­தை­ய­டுத்து,தன்னை சந்­திப்­ப­தற்கு இக்­கு­ழுவின் நிதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள அழைப்பு விடுத்­தி­ருந்தார் என ரோய்ட்டர்ஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கத்­னா­வினால் பாதிக்­கப்­பட்ட பெண்கள், இச்­ச­டங்கை தடை­செய்­யு­மாறு கோரு­கின்­றனர் என இக்­கு­ழுவின் சட்­டத்­த­ரணி இர்­மிஸா தேகல் தெரி­வித்­துள்ளார்.

கத்னா சடங்­களை பெண்­களின் பிறப்­பு­றுப்பு சிதைப்பு நட­வ­டிக்­கை­யாக (FGN) உலக சுகா­தார நிறு­வனம் வகைப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனினும், கத்­னாவை ஆத­ரிப்போர், இது பிறப்­பு­றுப்பு சிதைப்பு நட­வ­டிக்கை அல்ல எனக் கூறு­கின்­றனர்.

கத்­னாவில் தமக்கு ஏற்­பட்ட எத்­த­கைய நீண்­ட­கால உடல், உள பாதிப்­புகள் ஏற்­பட்­டன என்­பதை இலங்கை அதி­கா­ரி­க­ளிடம் சமர்ப்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யொன்றில் பெண்கள் பலர் தெரி­வித்­துள்­ளனர் எனவும் ரோய்ட்டர்ஸ் தெரி­வித்­துள்­ளது.

இச்­ச­டங்­கினால் ஒரே­யொரு சிறுமி பாதிக்­கப்­பட்­டாலும் அது, மேற்­படி சடங்கை தடை செய்­வ­தற்குப் போது­மா­னது என ரோய்ட்­டர்­ஸிடம் தம்மை இனங்­காட்ட விரும்­பாத பெண் ­ணொருவர் தெரி­வித்­துள்ளார்.

தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபையின் தலை­வ­ரான மெரினி டி லிவேரா, அமைச்­ச­ருக்கும் மேற்படி செயற்பாட்டாளர்கள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பை வரவேற்றுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் தேசிய ரீதியிலான விவாதங்கள் நடைபெற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. This is our failure. No point of blaming those who are affected.

    ReplyDelete
  2. ISLAAM ALSO TELLING DONT DO THIS SO SUPPORT THIS

    ReplyDelete
  3. குழந்தைகள் என்ன பாவம் செய்தனர் விட்டு விடுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.