Header Ads



யாழ் மீலாத் விழாவில், ஜனாதிபதி பங்கேற்கமாட்டார் - சபாநாயகர் பிரதம அதீதி


யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக நடைபெறும் தேசிய மீலாத் விழாவில் பங்கேற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், கடந்த செவ்வாய்கிழமை (19) ஆம் திகதி நடந்த அமைச்சரவை கூட்டத்தையடுத்து தான் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழாவில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபா, அக்கறைப்பற்றிலோ அல்லது காத்தான்குடியிலோ மீலாத் விழாவை நடாத்த வேண்டுமென வாதிட்டுள்ளார்.

எனினும் அமைச்சர்கள் ஹக்கீம் மற்றும் றிசாத் ஆகியோர் யாழ்ப்பாணத்திலேயே மீலாத் விழாவை நடாத்த வேண்டுமென சுட்டிக்காட்டியியுள்ளனர்.

இருந்தபோதும் எல்லா ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டதெனவும், யாழ்ப்பாணத்திலிருந்து மீலாத் விழாவை ஏனைய பகுதிகளுக்கு மாற்றமுடியாதெனவும் அமைச்சர் ஹலீம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஜனாதிபதி ஜனாதிபதி தேசிய மீலாத் விழாவுக்கு செல்வதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளார்.

இந்தத் தகவல் கடந்த 19 ஆம் திகதி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கப்பெற்றதுடன், முடிந்தளவு ஜனாதிபதியை குறித்த மீலாத் விழாவில் பங்குகொள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழுத்த வழங்குமாறும் வேண்டப்பட்ட நிலையில், ஜப்னா முஸ்லிம் இணையம் முயன்றுபார்த்த போது, பாதுகாப்பு மற்றும் நேரமின்மை  ஆகிய காரணங்களினால் ஜனாதிபதியினால் யாழ் தேசிய மீலாத் விழாவில் பங்கேற்கமுடியாமல் போனதென திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

சமகாலத்தில் அமைச்சர் ஹலீம் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் மேற்கொண்ட முழு முயற்சியின் காரணமாக யாழ் தேசிய மீலாத் விழாவில் பிரதம அதீதியாக பங்கேற்க சபாநாயகர் கரு ஜெயசூரிய ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. சபாஷ்... ஆரம்பத்தில் நேரம் வழங்கிய அதிமேதகு ஜனாதிபதியிற்க்கு தற்போது எப்படி நேரமில்லாமல் போனது.. ஆசாத் சாலி அவர்களே! உங்கட நல்லாட்சி ஜனாதிபதி முஸ்லிம் சமுதாயத்தை இப்படி அவமானப்படுத்தி விட்டாரே!. அது ஏன் அக்கறைப்பற்று அல்லது காத்தான்குடி? அப்ப யாழ்ப்பாணம் வேறு நாட்டிலா உள்ளது... எங்களால் தெரிவு செய்யப்பட்ட எமது ஜனாதிபதி நல்ல மரியாதை தந்துள்ளார்.. ஞானசாரவின் ஆலோசனை மற்றும் ஆசாத் சாலியின் அனுமதியுடன் இந்த நிகழ்வை நிராகரித்துள்ளார்.. மீலாது நபி கொண்டாடுவது இஸ்லாமிய அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதா என்பது வேறு விஷயம்.. ஆனால் முஸ்லிம்களின் தேசிய விழாவை நிராகரித்தன் மூலம் முழு முஸ்லிம் சமுதாயத்தையும் அவமானப்படுத்தி விட்டார்...

    ReplyDelete
  2. 25ம் திகதி கொண்டாடினா ஒற்றுமையைக் காட்டலாமே நாங்களும் உங்களைத்தான் பின்பற்றுகின்றோம் என

    ReplyDelete
  3. ஜனாதிபதிக்கு கண்ணிருந்தும் எப்போதும் கு...... காதிருந்தும் எப்போதும் செ........ வாயிருந்தும் எப்போதும் ஊ............. பாவம்! மீலாத் விழாவா¸ அது எங்கே? எப்போ?

    ReplyDelete
  4. அதி மேதகு ஐனாதிபதி இந்த மீலாத் விழா நிகழ்வுக்கு மட்டும்மல்ல இனி எந்த முஸ்லிம்களின்
    நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளமாட்டார் ஏன் எனில் அவர் இனவாத அமைப்புக்களினால்
    ஓரங்கட்டப்படுவார் அடுத்த விடயம் மீழாத்விழா என்ற தோறனையில் முஸ்லிம் கிராமங்களை
    அபிவிருத்தி செய்கிறார் என்றும் இந்த இனவாத கும்பளினால் முத்திரை குத்தப்படுவார் இதில்
    என்ன விசேஷம் என்றால் இந்த இனவாத்த்தை வளர்ப்பது இந்த அரசாங்கம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.