Header Ads



கொழும்பில் பலஸ்தீன தூதரகத்தை நிர்மாணிக்க, காணி வழங்கியது இலங்கை


ஐக்கிய நாடுகளின் முழுமையான உறுப்புரிமையை பெற்றுக்கொடுப்பதில் பலஸ்தீனுக்கான தமது ஆதரவினை தொடரவுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன் குடியரசு கொழும்பில் அதன் புதிய தூதரகத்தை நிர்மாணிப்பதற்காகன காணித்துண்டு ஒன்று இலங்கை அரசினால்  நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்தக் காணித்துண்டுக்கான உறுதியை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் எம்.எச். சயிட்டிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன கையளித்தார்.

2 comments:

  1. இங்கு இத்துண்டு காணியை கொடுத்து விட்டு, அங்கு ஜெருசலேமில் இலங்கை தூதரகம் அமைக்க போகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.