Header Ads



ஊழல் பற்றி பேசவோ, தண்டனை வழங்குவதற்கோ இந்த அரசுக்கு உரிமையில்லை - அநுரகுமார

தற்போதைய அரசாங்கத்திற்கு ஊழல் மோசடிகள் தொடர்பில் பேசுவதற்கோ கடந்த ஆட்சியில் மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கோ உரிமையில்லை என ஜேவிபி தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று இதனை நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த மோசடியிலும் ஈடுப்படாமல் இருந்தாலும் அவர்கள் ஊழல் மோசடியில் இருந்து விடுப்பட்டவர்களாக முடியாது.

அரசாங்கம் ஊழல் செய்தவர்களையும் ஊழல் மிக்க அரசாங்கம் ஒன்றையும் பாதுகாக்க முயற்சிக்குமானால்இ அதன் பொறுப்பை அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் அனைவரும் ஏற்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஊழல் தாரர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை அரசாங்கத்தின் சில தரப்பினர் மேற்கொண்டதுடன்இ ஊழல்களை கண்டுக்கொள்ளாமல் விடுகின்றவர்களையும் அவதானித்துள்ளனர்.

எனவே தற்போதைய அரசாங்கத்திற்கு ஊழல் மோசடிகள் தொடர்பில் பேசுவதற்கு தர்க்க ரீதியான உரிமை கிடையாது.

ஊழல் மோசடியில் ஈடுப்பட்ட ஒருவரை தண்டிப்பதற்கு ஊழல் அற்ற ஒரு அரசாங்கத்திற்கே உரிமையுள்ளது.

எனவே கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் மோசடியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

2 comments:

  1. வாக்குகள் என்ற பிரம்புகளை
    தூக்கிக்கொண்டிருக்கிறோம்

    வரவேண்டியது தேர்தல்கள்தான்
    வரவழைக்க உங்களை ஆட்சிக்கு!

    ReplyDelete

Powered by Blogger.