Header Ads



யாழ்ப்பாண தேசிய மீலாத் விழாவும், சில குறிப்புகளும்...!!

-அப்துல்லாஹ்-  

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின்  இஸ்லாமிய தூது அடங்கிய கடிதமொன்று நபியுடைய காலத்தில் அப்துல் வஹாப் என்ற ஸஹாபி மூலமாக அப்போதைய மன்னர் இரண்டாம் அக்கபோதிக்கு அனுப்பிவைக்கப் பட்டது. ஸஹாபியை வரவேற்ற மன்னன் கடிதத்தைப் படித்து விட்டு அவருக்கு விரும்பியவர்களை இஸ்லாத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் இலங்கையில் ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கினார். 

வேறு தகவல்களின் படி வடக்கின் தீவகப் பகுதியில் கடல் வணிகத்துக்காக தங்கியிருந்த அரபிகள் இஸ்லாத்தை ஏற்றதாகவும் உள்நாட்டு பழங்குடிகள் (நாகர்கள்) இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறப் பட்டுள்ளது. எனவே இலங்கையில் இஸ்லாம் முதலில் பெரியளவில் பரவிய இடமாக யாழ் தீவகப் பகுதிகள் காணப் படுகின்றன.  

இவ்வாறான ஒரு பிரதேசத்தில் தேசிய மீலாத் விழாவை நடத்த அரசாங்கம் தீர்மானித்திருப்பது மிகப் பெரிய விடயம். அதிலும் 600 முஸ்லிம் குடும்பங்கள் மட்டும் வாழும் யாழ்ப்பாணத்தில் இந்த விழாவின் இறுதி நிகழ்வுகள் நடைபெற இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஒரு நாட்டின் ஜனாதிபதி எமது சிறிய ஊருக்கு வருவது என்பது  சந்தோஷப்பட வேண்டிய விடயம். அதிலும் யுத்தத்தால் அழிந்து சின்னாபின்னமாகிப் போயிருக்கும் யாழ்ப்பாணத்தின் சோனகதெருவை அவர் பார்வையிடுவது அதிக நன்மைகளை எமக்குப் பெற்றுத் தரலாம். 

எனவே அவரை வரவேற்பது யாழ் முஸ்லிம்கள் அத்தனை பேரினதும் கடமையாகும். 

மன்னர் அக்கபோதி காலத்திலிருந்து எமது தூதர் எனது உயிரிலும் மேலான முஹம்மது நபி (ஸல்)  அவர்களுக்கு இந்த நாட்டில் கௌரவமும் கன்னியமும் அளிக்கப் பட்டு வந்துள்ளது. இந்த நாட்டில் முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழ்ந்தாலும் வாழும் உரிமை தொழில் உரிமை இலவசக் கல்வி இலவச வைத்தியம் மார்க்கத்தை பின்பற்றும் உரிமை என்று எல்லா உரிமைகளையும் காலத்துக்கு காலம் இலங்கையை ஆண்ட இலங்கையின் மன்னர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கி வந்துள்ளார்கள். 

நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் மட்டுமே கொண்டாடுகின்றோம். ஹஜ்ஜுப் பெருநாளும் அவ்வாறுதான். இவையிரண்டும் பிறை பார்த்து கொண்டாடப் படுவதாலும் ஹஜ்ஜுப் பெருநாளின் சில அம்சங்களை சிலர் விரும்பாததாலும் மாற்று மதத்தவர் எம்முடன் சேர்ந்து மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாத நிலையில் முஸ்லிம்களுக்கு கௌரவம் அளிக்குமுகமாகவே  மீலாத் விழா தேசிய ரீதியில் கொண்டாடப் படுகின்றது. 

இதை நமது ஊரில் பிறந்த நாள் விழா என்று கூறுவதில்லை. கொண்டாட்டம் என்று தான் சொல்வார்கள்.  யாழ்ப்பாணம் போர்த்துக் கீசர் காலம் தொட்டு 1948 ஆம் ஆண்டு வரை காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது பலருக்கு தெரியாது. இக்காலத்தில்  முஸ்லிம்கள் தாடி வைக்கவோ தொப்பி போடவோ பள்ளிவாசல்களில் தொழவோ பெண்கள் பர்தா அணியவோ அனுமதிக்கப் படவில்லை. ஒல்லாந்தர் காலத்தில் ஓரளவு சுதந்திரமும் ஆங்கிலேயர் காலத்தில் மேலும் சுதந்திரமும் கிடைத்தது.  ஆனாலும் ஒல்லாந்தர் காலத்தில் தாடி வைக்க தொப்பி போட பர்தா அணிய செருப்பு போட வரி செலுத்தியே முஸ்லிம்கள்  இஸ்லாத்தின் சில விசயங்களைச்  செய்யக் கூடியதாக இருந்தது. 

அவ்வாறான சூழ்நிலையில் தான் காலனித்துவ ஆட்சியாளர்களை ஏமாற்றி இஸ்லாத்தை மேலோங்கச் செய்யும் நோக்குடன் மீலாத் விழாக்கள் தோற்றம் பெற்றன. ஆனால் எமது மூதாதையர் அதிலும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடினால் நம்மவர்கள் மீலாத் கொண்டாடவில்லை. மாற்றமாக அதன் பெயரையே 'கொண்டாட்டம்' என்று வைத்து பெரும் பணி செய்துள்ளனர். 

பித் அத் என்பது நூதனமான செயல். முஹம்மது நபியவர்கள் முஸ்லிம்களுக்கும் உலக மாந்தருக்கும் பல்வேறு உபதேசங்களை சொல்லியுள்ளார்கள். மேலும் உலக அழிவு நாள் வரை நிகழக் கூடிய பித்னாக்கள் பற்றியும் கூறியுள்ளார்கள். தாத்தாரியர் யுத்தம், சிலுவை யுத்தம், பூகம்பங்கள், மஹ்தியின் வெளிப்பாடு, ஈசா நபியின் மீள்வருகை , தஜ்ஜாலின் அட்டூழியங்கள் , இறுதி யுத்தம், அஹ்ஜூஜ் மஹ்ஜூஜ் வருகை என்று கூறியவர்கள் மீலாத பித் அத் என்று நேரடியாக எந்த ஹதீஸையும் சொல்லவில்லை. 

மீலாத் விடயத்தில் ஒரு சாரார் பித் அத் என்று கூறும் போது இன்னுமொரு சாரார் அது ஆகும் என்று சொல்கிறனர். எனவே இது கருத்து வேறுபாடு உள்ள விடயம்.  முன்பு தொப்பி போடுவது பித் அத் ஜும்மாவுக்கு முன் சுன்னத்து தொழுவது பித் அத்  சர்வதேச பிறை என்று கரடு முரடாக பேசியவர்கள் இன்று தமது கருத்துக்களை சத்தமில்லாமலேயே வாபஸ் பெற்றுள்ளனர். 

எனவே யாருக்கு மார்க்க விசயத்தில் தெளிவில்லையோ அவர்கள் வாய் மூடி இருக்கட்டும்.  பித் அத் எல்லாம் அனாச்சாரங்கள். அனாச்சாரங்கள் எல்லாம் நரகத்துக்கு இட்டுச் செல்லும் என்பதை சுட்டிக் காட்டும் சிலர்  மீலாத் மேடைகளால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை எடைபோட்டு பார்பதில்லை. 

மீலாத் மேடைகளில் குர் ஆன் ஓதினார்களா வேறு என்ன சரி  ஓதினார்களா , அல்லாஹ்வைப் பற்றியும் நபியைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் கதைக்கப் பட்டதா அல்லது வேறுகதைகள் சொல்லப்பட்டதா என்பதையெல்லாம் நாம் எடை போட்டுப் பார்க்க வேண்டும். 

கொண்டாட்டம் என்றால் அக்காலத்தில் பள்ளிவாசலுக்கு வெள்ளிக் கிழமை மட்டும் செல்பவர்கள் கூட பிள்ளைகளை ஓத வைப்பதிலும் இஸ்லாமிய பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள வைப்பதிலும் ஓதும் பிள்ளைகளுக்கு சிற்றூண்டி, மற்றும் குளிர்பானங்கள் வழங்கி கௌரவிப்பதிலுமே தமது  கொண்டாட்ட காலத்தை செலவளித்தனர். சாதாரண மனிதர்களுக்கு இந்த வரவேற்பு கிடைக்க வில்லை. அங்கும் குர் ஆனுக்குத் தான் முக்கியத்துவம் அளித்தனர். 

எனவே இந்த தேசிய மீலாத் விழா இந்த நாட்டின் பெரும்பாண்மை அரசாங்கம் நமக்களித்த ஒரு கௌரவம். இதனை மாற்று மதத்தவருக்கு ஹிதாயத் கிடைக்கும் வகையில் எப்படி பிரயோசனப் படுத்தலாம் என்று சிந்திப்பவன் தான் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியும். இதனை குழப்ப நினைப்போரின் நிலமை கவலைக் கிடமானது. 

ஒன்று படுவோம். வரும் ஜனாதிபதி அமைச்சர்கள் வெளியூர்வாசிகள் பிரதாணிகள் அனைவரையும் அன்புடன் வரவேற்போம். உபசரிப்போம். அங்கு வருபவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்லுவோம். இஸ்லாத்தின் வாழ்வியல் தத்துவங்களைச் சொல்வோம். ஹிதாயத் அல்லாஹ்வின் கையில். முயற்சி எம்முடையது. வஸ்ஸலாம்

5 comments:

  1. இரண்டு பெருநீள்கள் மட்டும்தான்!

    ReplyDelete
  2. நபிகளார் மீது உண்மையான நேசம் இருந்தால் மீலாத் விழா தவிர்க்கப்பட வேண்டும். காரணம் மார்கத்தில் இல்லாததை மார்க்கமாக நினைத்து செய்வது பெரும் குற்றமாகும்.
    ஸஹாபாக்கள், தாபிஈன்கள் செய்யாததை ஏன் நீங்கள் வழிந்து செய்கிறீர்கள்?
    உங்களையும் விட நபியவர்களுடன் அவர்கள் இறக்கம் குறைந்தவர்களா????
    இச்சடங்கு வழிகெட்ட பாத்திமிய்யாக்களால் முதல் முதலாக இஸ்லாத்தினுள் நுழைவிக்கப்பட்டது.

    ReplyDelete
  3. நபி பிறந்த மாதத்தில் அவரை விசேடமாக பிரஸ்தாபிப்பதற்கு வழிகேட்டு பட்டம் கொடுப்பது கொண்டாட்டத்திற்கும் பிரஸ்தாபிப்பதற்குமிடையிலான வேறுபாடு புரியாமையாகும்.கேக் வெட்டி ஊர்வலம் போய் பாட்டிசைத்து கொண்டாடுவதற்கும் தூதரை விசேடமாக பிரஸ்தாபிப்பதற்கும் இடையே வேறுபாடு புரியாமல் சிலர் வழிகேட்டு பட்டம் கொடுக்கிறார்கள்.வேறுபாடு புரியாமல் அத்துமீறி நரகவாதியை குறிக்க உபயோகிக்கும் வழிகேடு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.இது காபீர் என்பதற்குச் சமமான வார்த்தை.ஒருவர் இன்னொருவரை காபீர் என்று சொல்லி அவர் அப்படி இல்லாத பட்சத்தில் சோன்னவரையே அவ்வார்த்தை சாரும் என்று ஹதீஸ் எச்சரிக்கிறது . இது மன்னிப்பு கேற்கவேண்டிய விடயம்.

    ReplyDelete
    Replies
    1. வழிகேடுகளில் சில குப்ரிற்கு இட்டுச் செல்லாது,நாம் சொல்லாத ஒன்றை எம்மீது தினிக்க முயற்சி செய்யாதீர்!
      சத்தியத்தை மறைப்பதை விட பெரிய கோழைத்தனம் உலகில் வேரொன்றுமிருக்க முடியாது.

      Delete
  4. கோண்டாட்டத்திற்கும் விசேடமாக நினைவுகூர்ந்து பிரஸ்தாபிப்பதற்குமிடையிலான வேறுபாட்டை புரியாமல் வழிகேடென்ற வார்த்தையை பிரயோகிக்காதீர்கள்.மற்றப்படி உங்கள் போன்றோர் எல்லா வழிகேடும் நரகத்திற்குரியவை என்ற ஹதீதை வைத்துத்தான் வழிகேட்டுப் பட்டம் சூட்டுகிறார்கள். இப்போ எல்லா வழிகேடும் குப்ரில்லை என்கிறீர்கள் இது முரண்.ஆக துல்லிமான வேறுபாடு புரியாமல் வழிகேடு என்று பிறருக்கு பட்டம் சூட்டினால் அவ்வாறில்லாத பட்சத்தில் அது சொன்னவரையே சாரும் அளவுக்கு அது பயங்கரமான வார்த்தை. அதைத்தான் சுட்டிக்காட்ட விளைந்தேன்.

    ReplyDelete

Powered by Blogger.