Header Ads



எங்களுக்கு இந்த நாட்டில் பாரிய, அச்சுறுத்தல் இருக்கும் என்று நான் அச்சம் கொள்கின்றேன்

சிறுபான்மை சமூகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்று நினைத்து, போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள் என, கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை அல் இஸ்மா பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த நாட்டிலே சிறுபான்மை சமூகமாக வாழ்கின்றோம் என்பது பற்றி நாம் யோசிக்கவில்லை. இந்த நாட்டில் சிறுபான்மை சமூகமாக இருந்துக் கொண்டு, நாங்கள் பெரிதாக நன்மைகளை  அனுபவித்துக் கொண்டிருக்கின்றதாக பெரும்பான்மை சமூகம் எங்களை பட்டை தீட்டுகின்றார்கள் என்பதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

எமது மீது சுமந்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களாக, குடிகாரன், மாத்திரை மற்றும் தூள் வியாபாரிகளாக சித்தரிக்கப்பட்டு பணத்திற்காக சொந்த தாயின் கழுத்தை வெட்டுபவர்களாக திகழும் நிகழவுகளை நாம் கண்டு கொள்ளவில்லை.

இவைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் எதிர்காலத்தில் எங்களது இருப்பு இந்த நாட்டில் கேள்விக் குறியாக மாறிவிடும். எங்களுக்கு இந்த நாட்டில் பாரிய அச்சுறுத்தல் இருக்கும் என்று நான் அச்சம் கொள்கின்றேன்.

சிறுபான்மை சமுகத்தினர் இலகுவாக பணக்காரராக வர வேண்டும் என்பதற்காக போதை மாத்திரைகளை விற்பனை செய்கின்றார்கள். அதாவது கஞ்சா, போதை மாத்திரை, குடு என்பவற்றை விற்பனை செய்கின்றனர்.

எம்.எம்.அஹமட் அனாம்

1 comment:

  1. உண்மை தான்.. அரசியல் வாதிகளான எங்களை விற்று விற்று பெரும் நன்மைகளை அடைகின்றீர்கள்... கவலைப்பட வேண்டாம்.. உங்களுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை...

    ReplyDelete

Powered by Blogger.