Header Ads



ரஷ்ய - இலங்கை குழப்பம், அஞ்சல்தலை வெளியீடு நிறுத்தம்

ரஷ்ய- சிறிலங்கா இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டை முன்னிட்டு, சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்படவிருந்த சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த அஞ்சல் தலையை இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியிருப்பதாக அஞ்சல் மா அதிபர் றோகண அபேரத்ன தெரிவித்தார்.

எனினும், அதற்கான காரணங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார்.

சிறிலங்காவின் தேயிலைக்கு ரஷ்யா தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ள சூழலிலேயே, சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரண்டு அஞ்சல் தலைகளை ரஷ்யா கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. Putin ஒரு கொடிய மிருகம் இவனால் தான் செச்சனியா எனும் முஸ்லீம் நாடு முழுமையாக அழிக்கப்பட்டன இவனிடமிருந்து ஒன்றும் நல்ல விஷயத்தை எதிர்பார்க்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.