Header Ads



கொழும்பின் அடுத்த, மேயர் யார்..?


கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் கள­மி­றங்கும் பிர­தான கட்­சிகள் மற்றும் சுயேட்­சைக்­கு­ழுக்கள் நேற்று தமது வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­தன.

ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ரோஸி சேனா­நா­ய­கவும், ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் முன்னாள் பிர­தி­மேயர் அசாத் சாலியும், ஒன்­றி­ணைந்த முற்­போக்குக் கூட்­ட­ணியின் சார்பில் முன்னாள் மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் சண்.குக­வ­ர­தனும் கள­மி­றங்­கு­கின்றார்.

அடுத்த ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள உள்­ளுா­ராட்சி மன்ற தேர்­தலின் இரண்டாம் கட்ட வேட்­பு­ம­னுத்­தாக்கல் நேற்று நண்­பகல் 12 மணி­யுடன் முடி­வுக்கு வந்­தது.

அர­சியல் கட்­சி­களும் சுயேச்சை குழுக்­களும் நேற்­றைய தினம் தமது வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­தனர். இந்­நி­லையில் கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் கள­மி­றங்கும் கட்­சி­களும் சுயேட்சை குழுக்­களும் நேற்று தமது வேட்­பு­ம­னுத்­தாக்­கலை மேற்­கொண்­டனர்.

ஐந்து இலட்­சத்து ஐம்­பத்து ஐயா­யிரம் மக்கள் தொகையை கொண்­டுள்ள கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் தமது அதி­கா­ரங்­களை கைப்­பற்றும் வகையில் பிர­தான கட்­சிகள் கள­மி­றங்­கு­கின்­றனர்.

ஐக்­கிய தேசியக் கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஒரு­மித்த முற்­போக்கு கூட்­டணி, மக்கள் விடு­தலை முன்­னணி, பொது­ஜன முன்­னணி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் உள்­ளிட்ட பிர­தான கட்­சி­களும் சுயேச்­சைக்­கு­ழுக்­களும் நேற்று காலை தொடக்கம் 12 மணி வரையில் தமது வேட்­பு­ம­னுக்­களை கொழும்பு நகர மண்­ட­பத்தில் தாக்கல் செய்­தனர்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாந­க­ர­சபை மேயர் வேட்­பா­ள­ராக முன்னாள் அமைச்சர் ரோஸி சேனா­நா­ய­கவும், ஸ்ரீீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் முன்னாள் பிர­தி­மேயர் அசாத் சாலியும் கள­மி­றங்­கு­கின்­றனர்.

மேலும் தமிழர் முற்­போக்குக் கூட்­டணி ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து கள­மி­றங்கும் என்ற நிலைப்­பாட்டில் இருந்த போதிலும் பேச்­சு­வார்த்­தை­களில் ஏற்­பட்ட சில முரண்­பா­டுகள் கார­ண­மாக இம்­முறை தமிழர் முற்­போக்குக் கூட்­டணி கொழும்பு மாந­க­ர­சபை தேர்­தலில் தனித்து கள­மி­றங்­கு­கின்­றது. ஒரு­மித்த முற்­போக்கு கூட்­ட­ணி­யாக அடை­யா­ளப்­ப­டுத்தி ஏணி சின்­னத்தில் கள­மி­றங்கும் நிலையில் கொழும்பு மாந­க­ர­சபை முதன்மை வேட்­பா­ள­ராக முன்னாள் மேல் மாகா­ண­சபை உறுப்­பினர் சண்.குகவரதன் களமிறங்குகின்றார்.

மேலும் ஸ்ரீீலங்கா பொதுஜன முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் சார்பிலும் உறுப்பிர்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

( ஆர்.யசி)


1 comment:

  1. Asad Sally better if choice next Colombo mayer.

    ReplyDelete

Powered by Blogger.