Header Ads



நீதிமன்றம் சென்ற ஹமீட், றிசாத்திற்கு ஆபத்தா..?

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளராக உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செயற்பட எஸ். சுபைர்டீன் என்பவருக்கு  தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியதற்கெதிராக  அக்கட்சியின் ஸ்தாபகர் வை.   எல் எஸ் ஹமீட் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக வை.எல்.எஸ்.ஹமீட் குறிப்பிட்டுள்ளார்.

6/2017. என்ற வழக்கு இலக்கத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில்  திரு எஸ். சுபைர்தீனால் கையொப்பமிடப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்ற அ. இ. ம. காங்கிரஸ் சார்பான தேர்தல் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கெதிராக அல்லது அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டால் அதனை நிரகரிப்பதற்கான இடைக்கால உத்தரவு, மற்றும் தேர்தல் ஆணைக்குழு வின் உத்தரவுக்கெதிராக தற்காலிக தடை உத்தரவு, மற்றும் நிரந்தர உத்தரவு போன்றவை கோரப்பட்டுள்ளன.

தற்போது நீதிமன்றம் விடுமுறையில் இருப்பதால்  சம்மந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு வை எல் எஸ் ஹமீட்டின் சட்டத்தரணியினால்  அறிவித்தல் ( Notice) அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழுவும் அதன் அங்கத்தவர்களும் அமைச்சர் றிஷாட் பதியுதீன், அமீர் அலி மற்றும் எஸ்.சுபைர்தீன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(எஸ்.அஷ்ரப்கான்)

1 comment:

Powered by Blogger.