Header Ads



பலத்தீனத் தலைநகராக, ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும்த - துருக்கி

பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என்று முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை துருக்கி அதிபர் ரசெப் தாயிப் எர்துவான் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்றிபோது, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவித்திருக்கும் அமெரிக்காவின் முடிவு செல்லாது என்று அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் ஒரு 'பயங்கரவாத நாடாக' இருப்பதாக எர்துவான் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அமைதி வழிமுறையில் பங்காற்றுவதில் இருந்து அமெரிக்கா தன்னைதானே தகுதியிழக்க செய்துள்ளதாக பாலத்தீன் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

"அமைதி வழிமுறையில் அமெரிக்காவின் எந்தப் பங்கையும் தாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. அவர்கள் முற்றிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பதை நிரூபித்துள்ளனர்" என்று அவர் இந்த உச்சி மாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

எதிர்கால சுதந்திர தனி நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை பாலத்தீனம் உரிமை கோரி வருகிறது. 1993ம் ஆண்டு இஸ்ரேல்-பாலத்தீன அமைதி உடன்படிக்கையின்படி, தலைநகரின் இறுதி தகுதி நிலை பிந்தைய அமைதி பேச்சுக்களின்போது விவாதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெருசலேம் முழுவதையும் தன்னுடையதாக கோருகின்ற இஸ்ரேலின் நிலைப்பாடு சர்வதேச அங்கீகாரத்தை இதுவரை பெறவில்லை. இஸ்ரேலின் மிகவும் நெருக்கமாக கூட்டாளியான அமெரிக்கா உள்பட எல்லா நாடுகளும் தங்களின் தூதரகங்களை இஸ்ரேலின் டெல் அவிவில் கொண்டுள்ளன.

அமெரிக்கா படிப்படியாக அதன் தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றப்போவதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனத்தின் உச்சி மாநாட்டின் தொடக்கத்தில் இது பற்றிய விவாதம் மிகவும் வலுவாக இருந்ததாக இஸ்தான்புல்லில் வாழும் பிபிசி செய்தியாளர் மார்க் லோவன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இந்த நாடுகள் குழுவால் என்ன செய்ய முடியும் என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த குழுவிலுள்ள சில நாடுகள் டிரம்புக்கு ஆதரவு அளிப்பவையாக உள்ளன.

மிக குறைவான எதிர்ப்பார்ப்பின் அடையாளமாக பல்வேறு நாடுகள் இந்த உச்சி மாநாட்டிற்கு தங்கள் அமைச்சர்களைத்தான் அனுப்பியுள்ளன என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம் பிரச்சினைக்கு முஸ்லிம் நாடுகளில் நடைபெற்ற எதிர்வினை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது.

கடந்த வாரம் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு பின்னர், இஸ்ரேலோடு இருக்கும் தூதரகத் தொடர்பை துருக்கி துண்டிக்கும் என்று எர்துவான் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தற்போதைய உரையில் இது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

ஜெருசலேம் பற்றிய அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு முஸ்லிம் நாடுகள் ஒன்றாக இணைந்து பதிலளிக்க வேண்டும் என்று எர்துவான் வலியுறுத்தியுள்ளார்.

6 comments:

  1. Dear brother the seeps ( muslim leaders) if not join you and not get ready to act strongly... the will leave you alone. But All Muslims will be with you and Allah will be satisfied with you. Sorry to see most of the muslim leaders thrse days trying to satify US to protect their Rulership.. But they do less trust in Allah who gave them power instead they turn to US

    ReplyDelete
  2. 'லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' (இறைவன் ஒருவன் அவனது தூதர் முஹம்மது ஸல்) என்ற இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையில் உறுதியாயிருந்து, தொழுகையை கடைப்பிடிப்பவர்களாகிய  முஸ்லிம்கள், தமக்கிடையே உள்ள சகல விதமான வேறுபாடுகளையும் களைந்து ஒற்றுமையாக வாழ முடியும் என்றால், முன்னாள் ஈரானிய ஜனாதிபதி மதிப்புக்குரிய அகமதி நஜாத் அவர்கள் கூறியது போன்று இஸ்ரேல் என்ற பெயரை உலக வரை படத்திலிருந்தே அகற்றி விடலாம்.

    நமது எதிரிகளின் பலமே நமக்குள் உள்ள பிரிவினைகள்தாம்.  இந்தத் தளத்தில்கூட முஸ்லிம் பெயரில் எத்தனை காபிர்கள் ஊடுருவி நமது ஒற்றுமையைக் குலைக்கும் விதமாக பதிவுகளை இட்டு நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொள்ளுமாறு சூழ்ச்சி செய்து கொண்டிருப்பது  நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

    இனிமேலாவது, சகலவிதமான பேதங்களையும் மறந்து, இவ்வாறான நற்தளங்களை நமது ஒற்றுமையைக் பலப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துவோமாக

    ReplyDelete
  3. யஹூதியின் செல்லப்பிள்ளை ஆகிய சியாக்களுடன் ஒன்று சேராது முஸ்லிம்கள் நாம் மட்டும் ஒன்று சேர்வோம்

    ReplyDelete
  4. லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' (இறைவன் ஒருவன் அவனது தூதர் முஹம்மது ஸல்) என்ற இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையில் உறுதியாயிருந்து, தொழுகையை கடைப்பிடிப்பவர்களாகிய முஸ்லிம்கள், தமக்கிடையே உள்ள சகல விதமான வேறுபாடுகளையும் களைந்து ஒற்றுமையாக வாழ முடியாதா?

    ReplyDelete
  5. Brother Mahibal...

    Do you agree the QURAN that we have complete or NOT ? The moment you believe it is not complete ? can you be a Muslim?

    If one consider Mothers Aisha and Hafsa to be prostitute.. you still want to have connection with them? Will you agree if one muslim called you own mother to this disgrace.. be your brother ? Do not be blind ? I can bring more evidence for their SHIRK where they bring their IMAAMs to level of Allah saying that their IMAAMS knows when and where they will DIE.... THIS is only know to Allah ( ilmul haib). Not even our prophats new their time and place of death.

    How come their Imaams? is not it they raise their Imaams (?) to level Allah in this case?

    I have no words after this... I can only pass the reality of shia to you.. BUT I do not know about your position in reality.

    We are far from them when it come to Islam... We do not want any relation with them.. We leave their matter to Allah.

    ReplyDelete
  6. Brother Muhammad Rasheed,

    முஸ்லிம்களுக்கு மத்தியிலான ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி என்னை விட நீங்கள் நன்றாகவே அறிந்து வைத்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். 

    ஏனென்றால், உங்கள் பதிவுகள் மூலம் உங்களது மேலான ஈமானிய உணர்வுகளை நான் புரிந்து வைத்திருக்கிறேன்.

    முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்த ஒற்றுமை வரக்கூடாதென்று எவ்வாறு இஸ்லாத்தின் எதிரிகளும், மேற்கத்திய ஊடகங்களும் செயல்படுகின்றன என்பதையும் நாம் அறிகிறோம்.

    முஸ்லிம்களின் ஒற்றுமை,  கிலாபத்தின் மீள்நிர்மானம் என்பன அவர்களுக்கான மரண அடி என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

    எனவே, முஸ்லிம்களை ஷியாக்கள் என்றும் சுன்னிகள் என்றும் நம் மத்தியில் இருக்கும் சிறு பிரச்சினைகளையும் பூதாகாரப்படுத்தி நாம் ஒன்றிணையாமல் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

    இன்றிருக்கும் ஷியாக்களில் பல்வேறு பிரிவினர்கள் உள்ளனர். அவர்களுள் இஸ்லாத்துக்கு உட்பட்டோரும் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டோரும் உள்ளனர்.

    நாம் இங்கு பேச வருவது அல்லாஹ்வையும் அவனது இறுதித்தூதரையும் முழுமையாக நம்பிய இஸ்லாத்துக்குட்பட்ட முஸ்லிம்களைப் பற்றித்தான்.

    எமது பகைவர்கள்,  இஸ்லாத்திற்கு அப்பாலுள்ள ஷியாக்களின் தன்மைதான் முழு ஷியாக்களுடையதும் என்று, தமது செய்தித் தளங்களூடாக எம்மை நம்ப வைத்திருக்கிறார்கள்.

    நம்மில் ஒருவர் மரணித்துவிட்டால் விரைவாக அடக்கிவிட நாம் முயல்கிறோம்.  ஆனால், நமது உயிரை விடவும் மேலான அருமை நபி (ஸல்) அவர்களை அவ்வாறு அடக்க முடியவில்லை.  இறந்து இரண்டாவது நாள் அல்லது மற்றோர் அறிவிப்பின்படி மூன்றாவது நாள்தான் அடக்க முடிந்தது என்ற கசப்பான உண்மையை நம்மில் பலர் அறியமாட்டோம். 

    காரணம் அவருக்குப் பின் யார் கலீபா என்ற கடுமையான  பிரச்சினை. இன்றுள்ள அரசியல்போன்று.  இறைத் தூதர் (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போதே துவங்கிவிட்டது இந்த ஆட்சி அதிகாரப் பிரச்சினை.  ஹதீஸ் கிரந்தங்களை வாசிப்போர் இதனை விரிவாக அறிந்து கொள்வர்.

    இறைதூதர் (ஸல்) அவர்களது புனித உடலை அடக்குவதற்குள் அவரது மருமகன் அலி (ரலி) அவர்களைத்தான் கலீபாவாக ஆக்க வேண்டும் என்ற 'கட்சி' - அதன் அரபு அர்த்தப்படி  'ஷியா'  - பிரச்சினை அப்போதே பூதாகரமாக தொடர்ந்துவிட்டது.

    நாம் இங்கு சொல்ல வரும் இந்தக் கட்சியினர்- ஷியாக்கள், அலி (ரலி) அவர்களுக்குப் பின் அவரது குடும்பத்திலிருந்து தொடரும் இமாம்கள்தான் இறுதிநாள்வரை முஸ்லிம்களின் தலைவர்களாக இமாம்களாக இருக்க வேண்டும் என்று நம்புபவர்கள்.  அத்தொடரின் இறுதி இமாமாக மஹ்தி (அலை) அவர்களை நம்புகிறார்கள்.

    இதுவொரு தொடரும் அரசியல் பிரச்சினை.  இவ்விரு கட்சிகளுக்கும் இடையே ஏராளமான கசப்பான போர்களே நடந்து முடிந்துள்ளன. 

    விசுவாசிகளின் தாயார்கள்கள் பற்றியதும் நபித்தோழர்கள் பற்றியதுமான அவதூறுகளும் இவற்றின் விளைவுகளே.  எவ்வாறிருப்பினும், அவதூறு செய்வோர் அதற்கான கூலியை அல்லாஹ்விடமிருந்து பெறுவர். 

    குர்ஆனுக்கான விளக்கவுரைகள் நம்முடையதை விடவும் வித்தியாசமாக அவர்கள் கொண்டுள்ளனர்.

    ஆனால், இவையெதுவும் இவர்கள் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற அர்த்தத்தைத் தராது என நம்புகிறேன்.

    இந்தக் கண்ணோட்டத்தில் வேற்றுமைக்கு மத்தியில் ஒற்றுமை காணும் நோக்கோடு எனது பணிவான கருத்துக்களைப் பரிசீலிக்குமாறு வேண்டுகிறேன்

    ReplyDelete

Powered by Blogger.