December 15, 2017

முஸ்லிம்கள் உயிரோட்டம் பெற, பொதுபல சேனா உதவுமா..?

-மீள்பார்வை-

அநாதையான அண்ணல் அநாதரவான நாள்

டிசம்பர் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையில் அரசாங்க றிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. பாராளுமன்றம் முதல் பாடசாலைகள் வரையுள்ள 11 இலட்சம் அரச ஊழியர்களும், 40 இலட்சம் மாணவர்களும் விடுமுறையில் இருந்தார்கள். 35 இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் அன்றைய நாளை விடுமுறையாகக் கழித்தார்கள். மொத்தமாக பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த 2 கோடி மக்கள் இந்த விடுமுறையை அனுஷ்டித்தார்கள். ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அன்றைய தினம் ஏன் விடுமுறை வழங்கப்பட்டது என்பது தெரியாது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே கூட இந்த விடுமுறை பற்றிய விழிப்புணர்வு இருக்கவில்லை. அநேகமான பாடசாலை மாணவர்களுக்கும் தங்களுக்கு ஏன் விடுமுறை வழங்கினார்கள் என்பது தெரியாது.

இப்படித்தான் உலகத்தாருக்கான ஓர் அருட்கொடை இலங்கையில் அனாதரவாகக் கைவிடப்பட்டார். இயேசு நாதரின் பிறப்புக்கும் கௌதம புத்தரின் பிறப்புக்கும் விடுமுறை வழங்கப்பட்டு விழாக்கோலம் பூணும் இலங்கைத் திருநாட்டில், முழு உலகுக்குமான அருட்கொடையாக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட நபிகளாரின் பிறந்த தினம் (அல்லது மறைந்த தினம்) விடுமுறை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டாலும் இலங்கை முஸ்லிம்கள் அதனை அனுசரிக்காமல் விட்டு விட்டது மாபெரும் அநியாயமாகும்.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளின் போது அமைதி காத்த நாட்டின் தலைமைகள் கூட மீலாத் வாழ்த்துச் செய்திகளை வழங்கியிருந்தனர். முஸ்லிம் கலாச்சார அமைச்சரும் பணிப்பாளரும் வாழ்த்துச் செய்திகளை வழங்கியிருந்தனர். பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களது மீலாத் வாழ்த்துச் செய்திகளையும் பத்திரிகைகளில் காணக் கிடைத்தது. அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் நபியுடைய வாழ்க்கை வழிமுறை பூரா உலக மக்களிடமும் வரவேண்டுமென்பதற்காக உழைக்கின்ற, இலங்கை முஸ்லிம்களின் தலைமையாகத் தம்மைப் பறைசாற்றிக் கொள்கின்ற ஜம்மியதுல் உலமாவின் தலைவரதோ, அரசியல் பிரிவு பொறுப்பாளரதோ, செயலாளரதோ மீலாத் தின விஷேட செய்திகள் எதனையும் எங்குமே காணக்கிடைக்கவில்லை. ஒருவேளை அனர்த்தம் ஒன்றாக மீலாத் வந்திருந்தால், நிவாரணப் பணி என்ற வகையில் களத்தில் இவர்களைக் கண்டிருக்கலாமோ என்னவோ.

இந்து சமய விழாக்கள் என்று வரும் போது அலரி மாளிகையிலும் பாராளுமன்றத்திலும் அனுஷ்டானங்கள் நடைபெறும். கிறிஸ்துவின் பிறப்பான நத்தார் தினத்தன்று நாடே விழாக் கோலம் பூணும். புத்தரின் பிறப்பன்று சாதி மத பேதமின்றி அன்னதான நிகழ்வுகள் சகவாழ்வுடன் சங்கமிக்கும். ஆனால் நபிகளாரின் வாழ்க்கை முறையையாவது இலங்கை மக்களிடத்தில் பரவலாக்குவதற்கு நபிகள் பிறந்த தினத்தை பயன்படுத்துவதற்கு உலமா சபையே மறந்து போனது, அவர்களின் பணி பற்றிய கேள்வியை நியாயமாக்குகிறது.

மீலாத் கொண்டாடலாமா, கூடாதா என்ற ஏற்கனவே தயாரிக்கப்பட்ட அஜென்டாவை இரண்டு கூட்டங்கள் இந்தக் காலப்பிரிவில் நடைமுறைப்படுத்தின. இதுபோன்ற சமூகத்தில் பேசப்படும் பிரச்சினைகளுக்கு மத்தியில் மௌனம் காத்துப் பழகிப் புளித்துப் போனதன் விளைவாகத்தான் இந்த முக்கியமான விடயத்திலும் ஜம்மியதுல் உலமா மௌனம் காத்திருக்கிறது. இனவாத அலையில் அரசாங்கம் அள்ளுண்டு செல்வது போல ஜம்மியதுல் உலமாவும் இதுபோன்ற அஜென்டாக்களினால் அள்ளுண்டு செல்வதாகவே நினைக்கத் தோன்றுகிறது. இல்லாத பட்சத்தில் இரண்டுக்குமிடையில் நடுநிலையாகச் செயற்பட்டு நபிகளாரை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருக்க முடியும்.

போதாக்குறைக்கு சகவாழ்வு பற்றிப் பேசும் தேசிய சூறா சபையும் நபிகளாரின் பிறந்த தினத்தை சகவாழ்வுக்குப் பயன்படுத்தத் தவறிவிட்டது. பன்சலைகளிலும் விகாரைகளிலும் சகவாழ்வு நிகழ்ச்சிகள் நடத்துவதனை விட நபிகளாரின் பிறந்த தின நிகழ்வுகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்த நாளில் ஜனாதிபதி, பிரதமரை அழைத்துக் கூட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்க முடியும். இந்தச் சந்தர்ப்பங்களும் நமது தலைமைகளால் கோட்டைவிடப்பட்டதாகவே தெரிகிறது.

பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் நீடித்திருப்பது தான் எம்மை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்க உதவும் போலத் தான் தெரிகிறது.

10 கருத்துரைகள்:

ACJU DONE CORRECT HERE. Christians, Buddhist, Hindus birthday kondaduvadatkaaha naamum seidal naamum avarhalai pin patruvadu pol aahi vidum. Nabi sallalahu alaihi vasallam avarhalin vaalkaiyai avarhali pol vaalndu edutu kaata vendume tavira birthday andru ninaivu padutuvadan moolam alla. Nabi sallalahu alaihi vasallam avarahal ovvoru naalum ninaivu paduta padanum.

ACJU AND SHOORA COUNCIL DOING LOTS .
BUT YOUR BLAMING THEM??????

சத்திய முஸ்லிம், மற்றவர்களின் குற்றங்களையும் தவறுகளையும் மன்னிப்பதற்கு வழிதேடுவான்

கடும்போக்கு முஸ்லிம், மற்றவர்களை விமர்சிக்கவும், அவமானப்படுத்தவும் அவர்களின் குறைகளையும் தவறுகளையும் துருவித் துருவித் தேடுவான்.

Killing Muslims in Yemen,Syria,Iraq are Islamic but commemorating the Meeladun nabi is haram.

ஈஸா நபி சொல்லாத ஒன்றை கிறிஸ்தவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்

கெளதம புத்தர் சொல்லாத ஒன்றை சிங்களவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்

என்பதற்காக

முகம்மது நபி சொல்லாத ஒன்றை இஸ்லாமியர்கள் செய்யத்தான் வேண்டும் என கூறுவது சிந்திக்க வேண்டிய விடயம்.

சகவாழ்வு மலர வேண்டும் என்பதற்கு இஸ்லாமியர்கள் அன்னியர்களினை போன்று போலிக் கொண்டாட்டங்கள் கொண்டாட வேண்டுமா?

இஸ்லாம் காட்டிய வாழ்க்கையை வாழப்பழகுவோமானால் சகவாழ்வு தானாக மலரும்.

அதை மறந்து விட்டு அவன் அப்படி, இவன் இப்படி என்று கூறிக்கொண்டு நாய் பல சேனாவின் சின்னத்தை காட்டி கட்டுரை கட்டுவது முஸ்லிம்களின் உயிரோட்டத்துக்கு உதவாது.

Please try to learn about Islam and write article regarding Islamic way.

Haji, can introduce prophet Muhammad to non-muslims on that day. Did you? When people going to follow prophet's virtues. Think about current situation.it's why meelparvai wrote
.

change Prophet's birthday as working day. I think can introduce prophet Muhammad to non-muslims on that day because prophet Muhammad,prophecies in Hindu, Buddhist & Christians scriptures.

Post a Comment