Header Ads



ஜெருசலேம், தனிப்பட்ட குழுவுக்கு சொந்தமானதல்ல - பேராயர் மல்கம் ரஞ்சித்

ஜெருசலேமை ஒரு தனிப்பட்ட குழுவுக்கான இடமாகக் கருதக்கூடாது. ஜெருசலேமிலுள்ள தேவாலயமும் கூட தனிப்பட்ட குழுவின் வணக்கஸ்தலமாக இல்லாதபோது அங்கு புதிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாதென கொழும்பு மறைமாவட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜெருசலேத்தை தலைநகராக அங்கீகரித்து தமது நாட்டின் தூதரகத்தை டெல் அவிவ்வில் இருந்து ஜெருசலேத்திற்கு மாற்ற தீர்மானித்துள்ளமைக்கு இலங்கை அரசும் கண்டனத்தை வெளியிட வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பேராயர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக மாற்ற எடுக்கப்படும் நகர்வுகளுக்காக சர்வதேச தூதரகங்களை ஜெருசலேமிற்கு மாற்றும் திட்டத்தை இலங்கை அரசாக நாம் முழுமையாக நிராகரிக்கிறோம் என்றும் இஸ்ரேலில் இலங்கை தூதரகம் தொடர்ந்தும் டெல் அவி நகரிலேயே இயங்கும் என கடந்த அமைச்சவை கூட்டத்தின்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எந்தவொரு கிருஸ்தவ அமைப்புக்களோ அல்லது கிருஸ்தவ தலைமைப்பீடங்களோ இது தொடர்பில் வெளிப்படையான கருத்தை தெரிவிக்காத நிலையில் பேராயர் மெல்கம் ரஞ்சித் அனைத்து மக்களுக்குமான புனித ஸ்தலமாக ஜெருசலேத்தை நோக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மேலும் ஐரோப்பிய நாடுகளும்கூட ஜெருசலேம் விவகாரத்தில் மிகவும் காட்டமான நிலைப்பாட்டில் உள்ளார்கள். எனினும் அமெரிக்கா மாத்திரமே ஜெருசலேம் தலைநகராக மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து கருத்துக்களை முன்வைத்து வருகின்றது.

No comments

Powered by Blogger.