Header Ads



கப்பலை விற்பதற்காக, இலங்கைக்கு தனி விமானத்தில் வரும் ரஷ்யர்

சிறிலங்கா கடற்படைக்கு ஜிபார்ட் 5.1 ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பலை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யும் 135 மில்லியன் டொலர் உடன்பாட்டின் சிறிலங்கா அரசாங்கம் இந்த வாரம் கையெழுத்திடவுள்ளது.

ரஷ்ய அரசின் பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனமான Rosboronoexport நிறுவனத்தின், குழுவொன்று இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக சிறிலங்கா வரவுள்ளது.

இந்தக் குழவினர் ஏனைய ரஷ்ய பாதுகாப்பு கருவிகளை வழங்குவது குறித்தும் பேச்சுக்களை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரஷ்ய நிறுவனம், போர் டாங்குகள், சண்டை வாகனங்கள், போர் பயிற்சி விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், விமானங்கள், உலங்குவானூர்திகள், கப்பல்கள், படகுகள், நீர்மூழ்கிகள், ஆயுதங்கள், வெடிபொருட்களையும் வழங்க முன்வந்துள்ளது.

சிறிலங்காவுக்கு போர்க்கப்பலை விற்கும் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காக, ரஷ்யாவின் Rosboronoexport நிறுவனத்தின் தலைவரான அலெக்சான்டர் அலெக்சான்ட்ரோவிச் மிக்கீவ் தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தில் கொழும்பு வரவுள்ளது.

ரஷ்ய அதிபரின் நெருங்கிய நண்பரான இவருடன் உயர்மட்ட அதிகாரிகளும், தனிப்பட்ட சிறப்பு பாதுகாப்புக் குழுவினரும் கொழும்பு வரவுள்ளனர்.

அலெக்சான்டர் அலெக்சான்ட்ரோவிச் மிக்கீவ் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பலரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.