Header Ads



சிறுபான்மை மக்களை அவமானப்படுத்தி, எங்கள் தன்மானத்துடன் விளையாட வேண்டாம் - மனோ

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றவர்களை சில பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு ஜம்பெட்டா வீதியில் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டபோது அமைச்சர் மனோ கணேசன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பிரதான கட்சிகளின் ஒருசில அரசியல்வாதிகள் பாதாள உலக, கொலைவெறி, இனவாத, போதைவஸ்து போன்ற சமூக அநீதிகளுடன் தொடர்புள்ளவர்களை முன்னிறுத்தி அரசியலில் ஈடுபடுகின்றனர்.

எனினும் தமது கட்சி, சமூக அநீதிகளுடன் தொடர்பில்லாதவர்களை தேர்தலில் முன்னிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தகள் காலத்தில் நிதி உதவி செய்தவர்கள், விருந்து உபசாரம் செய்தவர்கள், பாதாள உலகத்துடனும், போதைவஸ்து வியாபாரிகளுடனும் தொடர்பு உள்ள ஒருசில தமிழர்களை கொண்டு வந்து அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் சிறுபான்மை மக்களை அவமானப்படுத்தி தங்கள் எடுபிடிகளை தமிழர் பிரதிநிதிகளாக காட்ட முயன்று எங்கள் தன்மானத்துடன் விளையாட வேண்டாம் என மனோ கணேசன் கோரியுள்ளார்.

1 comment:

  1. சரியாக சொன்னீர்கள்.. சில பேர் முதன்மை வேட்பாளர்களாகவும் நிறுத்தப்பட்டுள்ளனர்...

    ReplyDelete

Powered by Blogger.