Header Ads



இலங்கை தேயிலை, தடையை நீக்கியது ரஷ்யா

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை மீது ரஷ்யா விதித்துள்ள தற்காலிக தடையானது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 30ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை நீக்கம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிகாரிகளுடன் இன்று -25- மேற்கொண்ட கலந்துரையாடலையடுத்​தே இந்தத் தடைநீக்கம் குறித்து தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா இலங்கையிலிருந்து இறக்குமதி செய்த தேயிலையில் கெப்ரா என்ற வண்டு ஒன்று இருந்ததாகத் தெரிவித்து இம்மாதம் 18ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தேயிலை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. இத்துடன் திருப்தியடையாது அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் ஏற்றுமதிக்கான விதிகளையும் எந்தவகையிலும் தளர்த்தாது கடுமையாக இருப்பதுடன் ஏற்றுமதிக்களஞ்சியசாலைகளுக்கும் அடிக்கடி விஜயம் செய்து அவர்களைக்கண்காணித்து ஏற்றமதிப் பொருட்களின் தரம் எந்தவகையிலும் குறையாது பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறையில் ஒரு அணுவேணும் தளர்த்தினால் பழையகுருடி கதவைத்திறடியாகி விடும்.

    ReplyDelete
  2. What happened to Aspestas sheet prohibition? Removed or Continue

    ReplyDelete
  3. Now onward Aspesto sheets are said to have been safe for the human in Sri Lanka only,as such govt. removed the bans on imports of Aspestos from Russia.

    ReplyDelete

Powered by Blogger.