Header Ads



போதை ஏற்படுத்தும் அகோரம் (உண்மைச் சம்பவம்)

தந்­தையின் சொத்­துக்­களை விற்­பனை செய்து ஒரு கோடி இரு­பது இலட்சம் ரூபா­வுக்கு ஹெரோயின் புகைத்த நபர் ஒரு­வரை பிய­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

சந்­தே­கத்­துக்­கி­ட­மாக நட­மா­டிய குறித்த இளை­ஞரின் நடத்­தையில் சந்­தே­க­முற்ற பிய­கம பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­தகர் மனோஜ் சம்பத் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் இளை­ஞரைக் கைது செய்து விசா­ரணை மேற்­கொண்ட போது அவர் நாளாந்தம் 5000 ரூபாவை ஹெரோ­யி­னுக்­காக செல­வி­டு­வ­தா­கவும், இது­வரை சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவை ஹெரோயின் பாவ­னைக்­காக செல­விட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

சிறந்த பாட­சாலை ஒன்றில் கல்வி கற்­பித்து, பிர­பல ஆங்­கில கல்வி நிலையம் ஒன்றில் ஆங்­கில மொழியைப் போதிக்க தந்தை வழி­செய்து கொடுத்­துள்­ளதால் இந்த நபர் சிறந்த ஆங்­கில அறிவைக் கொண்­டுள்ளார் என்று பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்த நபரின் தந்தை தனியார் நிறு­வ­ன­மொன்றில் கட­மை­யாற்றி ஒய்வு பெற்­ற­போது கிடைத்த ஐம்­பது லட்­ச­ரூ­பா­வுக்கு அதி­க­மான தொகையும் இந்த நபரில் பொறுப்­பி­லி­ருப்­ப­தா­கவும் பொலிஸ் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

சந்­தேக நபரின் பாட­சாலை வாழ்க்கை முடி­வ­டைந்­த­துடன் தாய், தந்­தையைப் பிரிந்து மனம் போன போக்கில் காலத்தை செல­விட்­டுள்ளார். தந்­தையின் சொத்­துக்­களை அவ்­வப்­போது விற்­ற­துடன், இறு­தி­யாக எஞ்­சி­யி­ருந்த ஆறு கடை அறை­களை சமீ­பத்தில் 30 இலட்ச ரூபா­வுக்கு விற்­பனை செய்­துள்ளார்.

தற்­போது தங்­கு­வ­தற்கு இட­மில்­லாமல் விற்­பனை செய்த அறை­யொன்றில் 3000 ரூபா வாடகை செலுத்தி தங்­கி­யி­ருப்­ப­தா­கவும் இந்த நபர் தெரி­வித்­துள்ளார்.

அறை­களை விற்­பனை செய்து பெற்ற 30 இலட்சம் ரூபாவில் தற்­போது 87 ஆயிரம் ரூபாவே எஞ்­சி­யி­ருப்­ப­தா­கவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபரை மஹர நீதிவான் நிதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.