Header Ads



விமான சேவை முடங்குமா..? வேலை நிறுத்தத்துக்கு முஸ்தீபு

தமக்கு இதுவரை கிடைத்து வந்த மேலதிக கொடுப்பனவை அதிகரித்துத் தருமாறு கோரி, ஸ்ரீ லங்கா விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனப் பணியாளர்கள், தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்த காலம் தொடக்கம் பணியாளர்களின் போனஸ் கொடுப்பனவை ஒரு இலட்சமாக அதிகரிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது பணிப்பாளர் சபை ஊடாக பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.  இதை அடிப்படையாகக் கொண்டே தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டை அண்மித்து 747 சதவீதம் இலாபமும், 2016ஆம் ஆண்டு 6.9 பில்லியனும் விமான நிலைய மற்றும் சேவைகள் நிறுவனம் பெற்றுள்ளதாக விமான நிலைய சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் வர்ணசிறி முஹந்திரம் தெரிவித்தார்.

அதற்கமைய ஒன்றிணைந்த பணியாளர்கள், நிறுவனத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ள இலாபத்துக்காக ஒரு பணியாளருக்கு தலா ஒரு இலட்சம் என்ற பங்கை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சிறந்த முடிவை கட்டுப்பாட்டாளர்கள் வழங்காவிடத்து தாம் மேற்கொண்டு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.