Header Ads



பதில் சொல்லுங்கள்..!


-Fathima Zumra-

உலகில் இறைவன் படைத்த கோடான கோடி ஜீவராசிகள் உண்டு ! ஒவ்வொரு ஜீவராசிக்கும் பகுத்தறிவை இறைவன் வழங்கியிருந்தால் அந்தந்த ஜீவராசிகள் இறைவனை தன் ரூபத்திலேயே கற்பனை செய்யும் ! தன்னைப் போன்ற உருவமுள்ள ஒரு சிலையையே அது வணங்க முற்படும் ! தனக்கு பிறந்த குட்டிகளையே இறைவனின் குட்டி என அது கூறவும் முற்படும். இன்று மனிதனையும் இதற்கு விதிவிலக்கில்லாமல் பண்ணி விட்டு இறைவனையே களங்கப் படுத்துகிறார்கள்...! 

இறைவன் தனது (மனித) ரூபத்தில் மனிதனாக வந்தார் என கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள் ! இது முன்னோர்களின் கற்பனையே தவிர வேறில்லை ! இறைவனுக்கு பிறப்பையும், இறப்பையும் இவர்களே உண்டு பண்ணி ஒரு பெரும் பலஹீனத்தை அவன் மீது சுமத்துகிறார்கள் !! 

இறைவன் பிறப்பானா ? 
அல்லது இறப்பானா ? 

இறைவன் தான் படைத்த ஒரு படைப்பின் ரூபம் எடுத்தால் அது அவனுக்குத் தான் கேவலம்...! ஏனெனில் அனைத்து படைப்பினங்களும் (மனிதன் உற்பட) பலஹீனமானவைகளே !!! இறைவன் ஒருவனே அனைத்து பலஹீனங்களை விட்டும் தூய்மையானவன் ! அவன் பலஹீனப் படுவதை விரும்ப மாட்டான். அவன் பூமிக்கு வந்து "கன்னத்தில் அடிவாங்கினால்" வானவர்களுக்கும் அவமானம்..எப்படி வானவர்களால் அவனை தூய்மைப்படுத்த முடியும் ! மனித ரூபம் எடுக்க இறைவனுக்கு எந்தத் தேவையும் இல்லை ! எந்தத் தேவையும் இல்லாதவனுக்கு மனைவி எதற்கு ? மகன் எதற்கு ? 

இறைவன் மனிதனுக்கு மட்டுமே இறைவன் கிடையாது. வானவர்களுக்கும் அவன் தான் இறைவன் ! உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவனே இறைவன் ! தன்னால் படைக்கப்பட்ட  எந்த படைப்புக்குமே அவன் ஒப்பாக இருக்க மாட்டான் என்பதே தெளிந்த அறிவுடமை ! 

"இறைவனைப் பற்றிய மிகச் சரியான வரைவிலக்கனம் இதுவே:-

"இறைவன் ஒருவனே.. அவன் தேவைகளற்றவன்.. யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் பிறக்கவுமில்லை... அவனுக்கு நிகராக யாருமில்லை !

இறைவனைப் பற்றி இதை விட ஒரு சிறந்த வரைவிலக்கனத்தை புனித இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மார்க்கத்திலும் காண முடியாது !!!

"சுப்ஹானல்லாஹ்"

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இந்தப் பதிவுக்கு களம் அமைத்துத் தந்த jaffnamuslim இணைத்தளத்திற்கும் இதற்கு உதவியாக நின்ற சகோதரர் முஹம்மத்
    ஜவ்ஷான் அவர்களுக்கும் எனது நன்றிகள். இது இந்த இணையத்தளத்தில் வெளியாகியிருக்கும் எனது கன்னிப் பதிப்பாகும். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்
    Fathima Zumra

    ReplyDelete
    Replies
    1. அ,ஸலாம்... எனது வேண்டுகோள்: பெண்களை சீர்திருத்தி நேர்வழியில் செலுத்தக்கூடிய ஆக்கங்களை உருவாக்கி இதுபோல் வெளியிடுவதோடு, இவ் இணயத்தளத்தை பெண்கள் பார்வயிட ஊக்குவியுங்கள்.

      நாளுக்கொரு கட்டுரை உங்களிடமிருந்து வெளிவருமளவிற்கு கட்டுரைகள் சிறக்க வாழ்த்துக்கள்.

      கட்டுரைகள் பந்தி பந்தியாக நீளாமல் சுருக்கமானதாகவும் இருப்பதோடு, அதிகமாக எளுதவேண்டியிருப்பின் ஒரேதலைப்பில் தொடர்களாக நாளுக்கொரு பகுதியாக எழுதலாம்.
      Facebook இல் மாயும் பெண்களுக்கு உங்களால் இதன்மூலம் சற்று மாற்றத்தையேனும் உருவாக்கமுடியும்என நினைக்கின்றேன் ...انشا الله

      Delete
  3. الله اكبر

    ReplyDelete

Powered by Blogger.