Header Ads



பாத்திஹா கல்யாணமும், சீரழிக்கப்படும் பெண்களும்..!!

விடிவெள்ளி பத்திரிகையில் வெள்ளிக்கிழமைகளில்  “அவள் கதை” என்ற பகுதி தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது.  “அவள் கதை” பகுதியில் பெரும்பாலும்  சமூகத்தில்  பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் தொடர்பில்  உண்மைச் சம்பவங்கள் தொடர்ந்து வெளிவருகிறது.

இந்தக் உண்மைச் சம்பவங்களில் பெரும்பாலானவை  திருமணத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளாக இருப்பதனையே காண முடிகிறது.

அதிலும் குறிப்பாக பதிவு செய்யப்படாத திருமணம் மூலம்  ஏமாற்றப்பட்ட பெண்கள் தொடர்பிலான சம்பவங்களே மிக அதிகம்.

தலைப்புக்கு வருவோம். பாதிஹா கல்யாணம் என்றால்  பெரும்பாலானவர்கள் தெரிந்து வைத்திருக்கின்ற ஒன்று.  ஆனாலும் விளக்கத்துக்காக பாதிஹா  கல்யாணம் என்றால் என்ன என்பதனை சுருக்கமாக விளக்குகிறேன்.

மத்தியகிழக்கு நாடுகளை சேர்ந்த பணக்கார அறபிகள்அ ல்லது தூதரகங்களுக்கு பணிபுரிய இலங்கை வரும்  உயர் அதிகாரிகள்சு ற்றுலா நோக்கத்தில் அல்லது பணி புரியும் நோக்கத்துக்கு
இலங்கை வருகிறார்கள்.

இப்படியானவர்கள் இலங்கை வந்தால்  சில மாதங்கள் அல்லது சில வருடங்கள்  இலங்கையில்த ங்குவார்கள்.

இவர்கள் நாட்டில் தங்கும் காலத்தில்  இவர்களுடன் வாழ இளம்பெண்களை பதிவு செய்யாமல்  ஈஜாப் கபூல் சொல்லி வாயால் மட்டும் ஒப்பந்தம் செய்து திருமணம் செய்து வைப்பார்கள்.

இந்த திருமணத்துக்கு ஆதாரமாக எந்த சட்டரீதியான ஆவணமும் இருக்காது.

தற்சமயம் அமுலில் உள்ள இலங்கை திருமண சட்டத்தில்  இவ்வாறான திருமணம் செல்லுபடியாகும்.

இவ்வாறு பாதிஹா கல்யாணம் செய்த அறபிகள்  சில மாதங்களிலோ அல்லது சில வருடங்களிலோ
தனது பணி முடிந்ததும்  தமது சொந்த நாடுகளுக்கு சென்றுவிடுவர்.

திருமணம் முடித்துவைக்கப்பட்ட இளம் அழகிய பெண்கள் நடுரோட்டுக்கு வந்துவிடுவர்.

இவர்களின் பாதிஹா கல்யாணம் மூலம்  இவர்களுக்கு பிறக்கும் குழந்தையின்  தந்தை யாரென்று சட்டரீதியாக அறிந்துகொள்ள எந்தவித  ஆவணமும் இருக்காது.


குறித்த பெண்கள் உரிய முறையில்  தலாக் சொல்லப்படாமல் இடையில் விடப்படுபவதால். அப்பெண் இன்னுமொரு திருமணம் செய்வதாக இருந்தால்  முதல் திருமணத்தை மறைத்துவிட்டு  சட்டவிரோத  திருமணம் செய்ய வேண்டும்.


உரிய முறையில் தலாக் பெற  காழி நீதிமன்றத்தில் கூட முடியாது.  ஏனெனில் இவர்களின் திருமணத்துக்கு எந்தவித ஆதாரமும் இருக்காது. தலாக் சொல்ல கணவன் கூட இருக்கமாட்டார்.

இப்படியான பெண்கள் சமூகத்தில்  மிக வேகமாக அதிகரித்து வருகின்றனர்.

இந்த அக்கிரமத்துக்கு பெரும்பாலும் பலியாகுபவர்கள்  வறுமை குடும்பத்தில் பிறந்த அழகிய இளம் பெண்களே. 

வெட்கமாக இருந்தாலும்  சொல்ல வேண்டிய கட்டாயம்  என்பதால் சொல்கிறோம்.

இதற்கு உடந்தையாக இருப்பவர்களும்  சில மார்க்க வேஷம் போட்ட மௌலவிமார்களே.

இவ்வாறு ஏழை குமரிகளை ஏமாற்றி  பாதிஹா கல்யாணம் செய்துவைக்க தரகர்களாக தொழிற்படும் சில மௌலவிமார்கள்  அறபிகளிடமிருந்து பலலட்சங்களை தரகர் பணமாக பெறுகிறார்கள்.

அதில் ஒரு சொற்பத்தை வறுமைப்பட்ட குடும்பத்துக்கு கொடுத்து  ஏமாற்றி திருமணம் செய்து வைக்கிறார்கள்.

அது மட்டுமல்ல இன்னும பலர் பாதிஹா திருமணத்தை வைத்து பிழைப்பே நடாத்துக்கிறார்கள்.

நாடு பூராகவும் சென்று ஏழைவீடுகளில் 
சீதனத்தை பெற்று அல்லது 
திருணமத்தின் பின் 
மணமகளின் நகைகளை  எடுத்து சென்று
விற்பனை செய்து பணம் பெற்று விட்டு. 
குறித்த பெண்ணை
அப்படியே விட்டுவிட்டு
இன்னுமொரு ஊருக்கு சென்று
இன்னுமொரு திருமணம் செய்துகொள்வார்கள்.

இப்படி 7 ஜ விட
அதிகமான திருமணம் 
செய்தவர்களும் உள்ளனர்.

பாதிஹா கல்யாணத்தை வைத்து 
இப்படி பெரியதொரு கூட்டமே 
ஏழைப் பெண்களை ஏமாற்றி
வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இப்படியான பாதகச் செயலை செய்ய 
இவர்கள் பயன்படுத்தும் 
ஒரேயொரு சாதனம்
முஸ்லிம்கள் திருணமனத்தை பதிவது கட்டாயமில்லை
என்ற ஷரத்தை தான்.
இவர்கள் தமக்கு சாதகமாக
பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இன்று
ஒரு பிள்ளையை பாடசாலைக்கு
சேர்ப்பதாக இருந்தாலும்
பெற்றோரின் திருணமப் பதிவுச்சான்றிதழை
கட்டாயம் சமர்பிக்க வேண்டியுள்ளது.

ஆனால் 
இன்று
பாதிஹா கல்யணத்தால் பிறந்த
பல குழந்தைகள்
பாடசாலை சேரவும் வழியில்லாமல் 
தந்தையின் பெயர் தெரியாமல் 
தத்தளிக்கின்றனர்.

திருமணத்தை பதிவது
கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற
சட்டத்தை கொண்டுவருவதனை
எதிர்ப்பவர்கள் 
பெரும்பாலானோர்
இப்படியான பாதிஹா கல்யாணத்தின் மூலம்
பிழைப்பு நடாத்துபவர்களே.

திருமணத்தை பதிவு செய்வது
கட்டாயமாக்கப்பட்டால்
இவர்களின் பிழைப்பில் 
மண் விழும் என்ற
ஒரே காரணத்துக்காகத்தான் 
இவர்கள்
இதனை எதிர்க்கிறார்கள்.

திருமணத்தை பதிவது கட்டாய சட்டமாக்கப்படுவது
இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணானது
என்ற
போலிப் பிரச்சாரத்தையும் 
இவர்கள் மக்கள் மத்தியில் 
கொண்டு செல்கிறார்கள்.

இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) 
அவர்களின் காலத்தில்
திருமணம் இப்படி பதிவு செய்யப்படவில்லை.

ஆகவே நாமும் திருமணத்தை
பதிவு செய்யக் கூடாது
என்ற போலி மடத்தனமான வாதத்தை 
இந்த பாதிஹா கல்யாண
தரகர்கள் முன்வைக்கிறார்கள்.

நபிகளாரின் 
அந்தக் கால சமூகம் 
உம்மி சமூகம்
எழுத வாசிக்க தெரியாத சமூகம்.

இதனை ஏராளமான ஹதீஸ்கள் நிறுவிக்கொண்டிருக்கின்றன.
அப்படியான சமூக அமைப்பில் 
பதிவுத் திருமணம் இருக்க வாய்ப்பில்லை.
அதனால் தான் வாய்மொழிமூலமே
திருமண ஒப்பந்தத்தை செய்துகொண்டார்கள்.

ஆனால்

இன்று நிலைமை தலைகீழானது.
பிறந்தால் பதிவு
இறந்தால் பதிவு
இவை எதுவும் மார்க்கத்துக்கு முரணானது என்று
யாரும் சொல்வதில்லை.

திருமணப்பதிவை மட்டும் கட்டாயமாக்குவது
மார்க்கத்துக்கு முரண் 
என்று சிலர் சொல்வது
மிகவும் பொருத்தமற்ற வாதம்.

கிட்டத்தட்ட ஷீஆக்களின்
முத்ஆ திருமணத்துக்கு ஒப்பான
இப்படியான
பாதிஹா கல்யாணம் 
போன்ற
பெண்களை ஏமாற்றும்,
பெண்களுக்கு அநீதியிழைக்கும்
நடைமுறைகளை ஒழிக்க
திருணத்தை பதிவது கட்டாயம் என்ற
சட்டம் நிச்சயம் கொண்டு வரப்பட வேண்டும்.

இஸ்லாத்தின் பெயரால்
இளம் பெண்கள் ஏமாற்றப்பட்டு
அவர்களின் கற்பு, சொத்து
சூறையாடப்படுவது 
தடுக்கப்பட வேண்டும்.

இப்படியான சமூகத்தை பாதுகாக்கும வகையிலான
சட்டங்களை சமூக நலன்கருதி கொண்டு வருவதற்கு
இஸ்லாம் எந்த விதத்திலும் தடுக்கவில்லை.

இந்த நிகாஹ் என்ற இபாதத்  முஆமலாத் உடன் சம்பந்தப்பட்டது  என்பதால்இ ப்படி 
திருமணத்தை பதிவது கட்டாய சட்டமாக்கப்படுவது
பித்அத்ஆகவோ, 
ஷரீஆவுக்கு முரணானதாகவோ அமையாது.

5 comments:

  1. Asthahfirullah.. If this is true, I've been in total darkness this long. There are many reasons to call for changes to the MMDA, among those, this would be one compelling reason.

    ReplyDelete
  2. I read a newspaper article few years ago that there are about 5000 fatherless children in Egypt born out of this kind of marriage. They are believed to born to Saudi fathers.

    ReplyDelete
  3. There are so many issues because of lack of knowledge of lslam and due to poverty. Nothing to do with law of Allah(Sharia). If any body wants more explanation pls kindly approach relevant committee. Pls don't make public complicat.

    ReplyDelete
  4. I knew this has been happening in India. Never knew It's happening in Sri Lanka.
    This is actually a practice of shia Muslims.
    This is like a legalized protitution on monthly contract.
    Shame on those people who arrange. Don't forget that the punishment for " pimps" in Islam is hell fire.

    ReplyDelete
  5. Islam teaching complete hijab with covering face.it will benefit for avoid kind of things

    ReplyDelete

Powered by Blogger.