Header Ads



புத்தரின் படத்தை அச்சிட்ட கருவாட்டுக்கடை, விகாரயை அச்சிட்ட இறைச்சிக்கடை காரர்களும் கைது

தம்­புள்ளை பிர­தே­சத்தில் புத்த பெரு­மானின் படத்­துடன் கூடிய நாட்­காட்­டியை அச்­சிட்ட கரு­வாடு விற்­பனை நிலைய உரி­மை­யாளர் ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

தம்­புள்ளை பிர­தே­சத்தில் காணப்­படும் கரு­வாட்டுக் கடை ஒன்­றினால் அதன் வியா­பாரப் பெய­ருடன் கூடிய 2018 ஆம் ஆண்டு நாட்­காட்­டிகள் அச்­சி­டப்­பட்­டி­ருந்­தன.

அதில் பௌத்த மதத்தை நிந்­திக்கும் வகையில் புத்த பெரு­மானின் உருவம் அச்­சி­டப்­பட்டு, அப்­ப­டத்­துக்குக் கீழாக கரு­வாட்டு துண்­டினை ஒத்­த­தான உரு­வப்­ப­ட­மொன்று பொறிக்­கப்­பட்­டுள்­ளது.

பிக்கு ஒருவர் தம்­புள்ளை பொலிஸ் நிலை­யத்­துக்கு குறித்த நாட்­காட்­டி­யுடன் சென்று இது தொடர்­பில்­மு­றைப்­பாடு செய்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து, குறித்த கரு­வாட்டு கடையை சோத­னை­யிட்ட பொலிஸார் நேற்று முன்­தினம் அதன் உரி­மை­யா­ளரை, பௌத்த மதத்­துக்கு களங்கம் விளை­வித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­த­துடன் அங்­கி­ருந்து 30 நாட்­காட்­டி­களும் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன.

இதே­வேளை, அண்­மையில் இரத்­தி­ன­புரி புளு­கு­பி­டிய பிர­தே­சத்­தி­லுள்ள இறைச்சி விற்­பனை நிலை­ய­மொன்றின் கலண்­டரில் ருவன்­வெ­லி­சாய விகாரையின் படம் பிரிசுரிக்கப்பட்டமை தொடர்பில் 50 கலண்டர்களுடன் மூவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

3 comments:

  1. இலங்கை போலிஸின் நியாயம் இது தான்.. புத்த பெருமானின் புகைப்படங்களை அவமானப்படுத்தினால் கைது செய்யப்படுவான். ஆனால் எங்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திவனை, அல்லாஹ்வையும் புனித அல்குரானையும் அசிங்கப்படுத்தியவனை விடுதலை செய்வார்கள்.. உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி...நல்ல நியாயம்..

    ReplyDelete
  2. உண்மை . இலங்கையில் சிங்களவர்களுக்கு எனறு ஒரு சட்டத்தையும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு என்று வேறு ஒரு சட்டத்தையும் அமுல் படுத்தும் நேர்மைமிகு பொலிசார்

    ReplyDelete
  3. நொல்லாட்சிச்சீசீசீ

    ReplyDelete

Powered by Blogger.